Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல்

Posted: 08 Jul 2015 12:08 PM PDT

சித்தாலப்பாக்கம்: 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் பழமொழியை காப்பாற்றும் வகையில், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழு ஒன்று, கைப்பை தைப்பதன் மூலம், தினசரி 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். சென்னை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சி, சீனிவாசா நகர் 1வது தெருவில், அந்த பகுதிக்கான கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளது. அந்த சங்கத்தில் உள்ள 20 பெண்கள், தங்கள் வறுமையை ஒழிக்க, சுயதொழில் மேற்கொள்கின்றனர்.அதாவது, கடைகளில் இலவசமாக ...

பதினாறாம் நாள்...!! -Mano Red

Posted: 08 Jul 2015 12:06 PM PDT

அந்த ஊர்க் காக்காய்கள் எல்லாத்துக்கும் கிடா மீசைக்காரர் இவரை நல்லாவே அடையாளம் தெரியும்...!! அனுபவித்த சோதனைக்கெல்லாம் சனிபகவான் காரணமென யாரோ சொல்ல , அன்று முதல் காக்காய்களை வெறுத்து விரட்ட ஆரம்பித்தவர் இன்னும் நிறுத்தவில்லை..!! காக்காய்களின் அறிவுக்கும் மீசை முகம் எட்டியிருந்தது, அவர் எட்டிப் பார்த்தால் போதும் எட்டி ஓடுமளவு பழகி பிழைத்திருந்தது..!! மீசைக்காரருடைய அம்மா செத்து பதினாறாம் நாள் விசேசம். காக்காய்க்குச் சோறு வைக்க நடந்து வரும் போதே நிலைமை புரிந்தது ஊருக்கு..!! கா ...

மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. -

Posted: 08 Jul 2015 12:04 PM PDT

முன்னொரு காலத்தில் சீன தேசத்தை ஆண்ட ஒரு அரசனுக்கு மூங்கில் என்றால் மிகப் பிரியம். அரண்மனைத் தோட்டங்கள் மூங்கில் காடுகளாக மாறியிருந்தன. அவன் பயன்படுத்தும் அணிகலன்கள், தேனீர் அருந்தும் கோப்பைகள், எழுதுகோல், காலணிகள்.. இப்படி எல்லாவற்றிலும் மூங்கிலில் செய்த ஏதாவது ஒன்று இருந்தே ஆகும். - அரண்மனை முழுக்க மூங்கில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. இருந்தாலும் அந்த ஒவியங்களில் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு சிறந்த மூங்கில் ஓவியத்தைத் தமது அறையில் வைக்க நினைத்தான். - நாட்டிலேயே ...

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

Posted: 08 Jul 2015 12:03 PM PDT

ரயில் நிலையங்களில் உரிய அனுமதி இன்றி சுற்றித் திரிந்த வியாபாரிகள் உள்பட 10,000 பேரை கடந்த இரு வாரங்களில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். - இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: - பயணிகள் வசதி குறித்து தெரிவிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. - அப்போது, ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரை கண்டறிவதற்காக ரயில் நிலையங்களில் பரிசோதனை தீவிரமாக ...

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா?

Posted: 08 Jul 2015 11:58 AM PDT

- தமது பேச்சுத் திறமையால் உலக முழுவதும் தமக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா, சின்னத்திரை சிறு வேடங்களில் நடித்து "காபி வித் டிடி' நிகழ்ச்சி மூலமாக இந்த உயரத்தை எட்டியவர். தற்போது விஜய் டி.வி.க்கும் இவருக்குமான உறவுக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. - விஜய் டி.வி. நிர்வாகம் டி.டி.யை கழற்றி விட்டதா? அல்லது அவரே கழன்று கொண்டாரா? எதுதான் உண்மை? சிறு அலசலில் இறங்கினோம். - டி.டி. ஒரு நிகழ்ச்சியைத் ...

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Posted: 08 Jul 2015 11:55 AM PDT

-- கோதுமை:    நல்ல பலம் தரும். விந்து விருத்தி பெறு செய்யும். வாத கோபத்தையும், பிரமேகத்தையும் நீக்கும். திப்பிலி:    இது கபம், வயிற்று உப்புசம், மேகம், வாத சுரம், ரோகம் இவற்றை போக்கும். விந்து கோளாறுகளை போக்கும். சவ்வரிசி:    பிரமேகம், இரத்த பிரமேகம், வெண்மேகம், இவை நீங்கும். கபம் விளையும். மூங்கில் அரிசி:    பாயாசம், பலகாரம் முதலியன செய்வதற்கு உகந்தது. இரத்த பித்தம், சுரம், ரோகம் ஆகியவற்றை விலக்கும். கேழ்வரகு:    பஞ்சம் தாங்கி என்னும் கேழ்வரகானது சுத்த வாதத்தை ...

இந்த வார சினிமா செய்திகள்

Posted: 08 Jul 2015 11:54 AM PDT

- - வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா&2 ஆகிய படங்களில் நடித்திருப்பவர், நித்யா மேனன். - கேரளாவை சேர்ந்த இவர், கர்நாடகாவில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். தமிழ் படப்பிடிப்புகளின்போது மட்டும் சென்னைக்கு வந்து போகிறார். -. காதல் பற்றி என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். நானும் காதல்வசப்பட்டு இருக்கிறேன். எனக்கு 18 வயது நடந்தபோது, நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் மீது காதல் வந்தது. அந்த காதல் அப்போதே முடிந்து ...

விநாயகரின் அறுபடை வீடுகள்

Posted: 08 Jul 2015 11:49 AM PDT

-- பொல்லாப் பிள்ளையார் ------------------------------------------------------------------------------------- அருணகிரிநாதர் முதல் ரமணர் வரை எண்ணற்ற ஞானிகளுக்கு அருள் தந்து அல்லல் தீர்க்கும் திருவண்ணாமலையில், "அல்லல் தீர்க்கும் விநாயகர்!' • திருமுதுக்குன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் "ஆழத்து விநாயகர்!' • தேவர்கள் அமிர்தத்தை தமக்கு கொடுக்காத காரணத்தினால் அபிராமி அம்மன் அருள்தரும் திருத்தலத்தில் அமிர்தத்தை ஒளித்து வைத்துத் தந்ததால் "கள்ள விநாயகர்!' • மீனாட்சியம்மன் ஆட்சி செய்யும் ...

குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி

Posted: 08 Jul 2015 11:46 AM PDT

விஜய் சேதுபதி, யதார்த்த நாயகன் என்ற நிலையில் இருந்து அதிரடி நாயகனாக மாறுகிறாராமே, அப்படியா? (வி.பிரபு, சங்கரன்கோவில்) தனுஷ் தயாரிக்க, விக்னேஷ் சிவன் டைரக்ஷனில், 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதி அதிரடி நாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம்! *** இப்போது உள்ள கதாநாயகிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டு வீராங்கனையாக நூற்றுக்கு நூறு பொருத்தமான ...

சன் டிவி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது?

Posted: 08 Jul 2015 11:44 AM PDT

சன் குழுமத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு உரிமம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட சாத்தியமில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - சென்னையில் 300 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் டிவி குழுமங்களின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. - குற்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருவதால், சன் குழுமத்துக்குச் ...

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Posted: 08 Jul 2015 11:14 AM PDT

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 08 Jul 2015 10:15 AM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (124)

Posted: 08 Jul 2015 09:59 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நிர்வாணமும் நீலவானமும்

Posted: 08 Jul 2015 09:34 AM PDT

அமாவாசை அன்றுதான் ஆடைதரிக்கிறது நிலவு முழுநிலவு அன்றுதான் நிர்வாணம் நிலவுக்கு ஆடைதரித்த நிலவு கண்ணுக்குத் தெரிவதில்லை நிர்வாண நிலவே நீள்விசும்புக்கு அழகாகும். பகலெல்லாம் நிர்வாணமாயிருக்கும் வானம் நட்டநடு நிசியில் மின்னும் நட்சத்திரம் பதித்த பட்டுக் கருநீலப் புடவை கட்டிப் பகட்டுடன் காட்சி அளிக்கிறது. காலை வேளையிலே பாடுகின்ற பூபாளம் நாள் என்னும் நங்கைக்கு நாமிட்ட ஆடை. பாவம் பாலைவனங்கள்! நிழல் என்னும் ஆடை இல்லாமல் நிர்வாணமாய் நிற்கின்றன. நீலவானம் கண்ணுக்கு அழகு நிர்வாணம் பாலுக்கு ...

ஆர்பிஐ கவர்னரை-ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்

Posted: 08 Jul 2015 08:57 AM PDT

ஆர்பிஐ கவர்னரை 'புத்திசாலித்தனமான கேள்வி'யால் ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர் மும்பை: மும்பையில் நடந்த விழாவில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் ரகுராம் ராஜன், 8ம் வகுப்பு மாணவன் எழுப்பிய கேள்வியால் ஆச்சர்யமடைந்தார். பின்னர் புத்திசாலித்தனமான கேள்வி எழுப்பிய அந்த மாணவரை அவர் பாராட்டினார். தனது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருபவர் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். இவர் மும்பையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர் உரையாடினார். ...

உறவின் எல்லை - தகழி சிவசங்கரபிள்ளை நாவல் தமிழில் மின்னூல் வடிவில் .

Posted: 08 Jul 2015 08:47 AM PDT

தகழி சிவசங்கரபிள்ளை - உறவின் எல்லை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . தமிழில் : சிவன் ஆசிரியர் பற்றி : மலையாள நாவல் இலக்கியத்தில் குறிபிடத்தக்க இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர் அதோடு ஞான பீடம் விருது பெற்றவர் ஆலப்புழை நகருக்கு அருகில் தகழி கிராமத்தில் 1912 ம் ஆண்டு பிறந்தவர் ,இவரின் முதல் சிறுகதை கமலம் , முதல் நாவல் தியாகத்தின் பிரதிபலம் .நான் எனது வலைதளத்தில் இவரது செம்மீன் நாவல் கொடுத்துள்ளேன் அது மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்த நாவல் ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 08 Jul 2015 05:23 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

நீங்காத பாசக்கயிறு --முஹம்மத் ஸர்பான்

Posted: 07 Jul 2015 10:27 PM PDT

என் அம்மா ஊட்டிய சோற்றுக்கு சுவை அதிகம் அதை விட என் தாய் மேல் எனக்கு பாசம் அதிகம். உனக்கு வளையல்களும் தோடுகளும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுக்க ஆசைதான் இன்று உன் பிள்ளையால் முடியாமல் போய் விட்டதே!! பணம் மீது காதல் கரைகடந்து சென்றேன், உன்னை நினைக்க தவறிவிட்டேன்.செல்வமென்று வெறும் காகிதங்கள் பெருகின.நான் என் தாய் மடியில் அயர்ந்த தூக்கம் கிடைக்குமா??? நான் உன்னோடு இருந்திருந்தால் கூலி வேலை செய்து கூட இன்பமாக வாழ்ந்திருப்பேன்.இன்று உன் முகம் காணாமல் துடிக்கின்றேன் ...

பாமரர் தேவாரம்

Posted: 07 Jul 2015 07:13 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

அயப்பாக்கத்தில் அருளும் பாபா!

Posted: 07 Jul 2015 05:11 PM PDT

- பட்டடப் பொறியாளர் ஒருவர், சென்னை, அம்பத்தூருக்கு அருகேயுள்ள அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டிருந்தார். - ஒருநாள், பணியாளர்கள் மதிய சாப்பாட்டிற்குச் சென்றிருந்த நேரம்... கடுமையான வெய்யில். அச்சமயம் பொறியாளர் அருகேயுள்ள மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார். அந்த வேளையில் பெரியவர் ஒருவர் வந்து "தாகமாக இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும்' என்று கேட்டார். தண்ணீரை கொடுத்தபின்னர், தண்ணீர் அருந்திவிட்டு ""இங்கு ...

மூங்கில் அரிசி பாயசம்!

Posted: 07 Jul 2015 03:51 PM PDT

தேவையான பொருட்கள்: மூங்கில் அரிசி - 1 கப், பால் - 4 கப், வெல்லப்பொடி - ஒன்றரை கப், முந்திரி பருப்பு - 12 ஏலக்காய்ப் பொடி - 1 தே. கரண்டி, நெய் - 2 மேஜைக் கரண்டி. - செய்முறை: மூங்கில் அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நொய் ஆக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு அதில் நொய்யை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின்னர் வெல்லத்தை நன்றாகக் கரைத்து, வடிகட்டி சேர்த்துக் கலக்கவும். கொதிக்கும்போது பால் சேர்த்து ...

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

Posted: 07 Jul 2015 03:35 PM PDT

-- இந்தியாவில் தோன்றிய யோகக் கலை இப்போது உலக சொத்து. ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரித்ததே இதற்குச் சான்று. யோகக் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் சித்தர்கள், முனிவர்களுக்கு மக்கியப் பங்கு உண்டு. ஆனால் சாமானிய மனிதர்களுக்கும் இவற்றைக் கற்றுத் தந்தர் ஆச்சார்யார்கள் வெகு சிலரே... அவர்களில் முதன்மையானவர் யோகாச்சார்யா ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியார். - 1888-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முசுகுந்தே என்ற கிராமத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரியா தன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™