Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


முறைகேடாக வெளிநாட்டு நிதி: சமூகச் சேவகர் டீஸ்டா செதல்வாட் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Posted: 13 Jul 2015 11:27 PM PDT

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதி உதவி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு சொந்தமான மும்பை அலுவலகம் மற்றும் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குஜராத்தைச் சேர்ந்த சப்ராங் கம்யூனிகேஷன்ஸ் என்கிற அரசுசாரா தொண்டு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெற்றதாக

திருப்பதியில் சிறுத்தை புலி நடமாட்டம்

Posted: 13 Jul 2015 11:15 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாலாஜி நகரில் சிறுத்தை புலி நடமாட்டம் காணப்பட்டது. இரவு ஜன நடமாட்டம் குறைந்தது. 3 சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதாக பொதுமக்கள் கூறினார்கள்.

திருவனந்தபுரம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபடி பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி

Posted: 13 Jul 2015 11:09 PM PDT

திருவனந்தபுரம் அருகே வெளியநாடு பகுதியை சேர்ந்தவர் சந்துகுட்டன். இவரது மனைவி லினிமோள் (வயது 38) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பத்தனம்திட்டா அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை சாவு

Posted: 13 Jul 2015 11:01 PM PDT

பத்தனம்திட்டா அருகே உள்ள எடக்கரை மலையோர கிராமத்தில் ஏராளமான ரப்பர் எஸ்டேட்டுகள் உள்ளன. இங்குள்ள ஒரு கிணற்றில் குட்டி ஆண் யானை தவறி விழுந்துவிட்டது. இதனால் மற்ற யானைகள் அந்த கிணற்றை சுற்றி நின்றுகொண்டு பிளிறிக்கொண்டு

வியாபம் ஊழல்: பா.ஜனதாவின் பெயரை கெடுக்க சதி - எதிர்க்கட்சிகள் மீது ராஜ்நாத் சிங் புகார்

Posted: 13 Jul 2015 11:00 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வியாபம் எனப்படும் தொழில் கல்வி நுழைவுத் தேர்வு ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது.

மகன் திருமணத்துக்காக பரோலில் வந்த வீரப்பன் கூட்டாளி

Posted: 13 Jul 2015 10:49 PM PDT

1993–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9–ந்தேதி கர்நாடக எல்லையில் பாலாற்றின் குறுக்கே உள்ள சுரக்காய்மடுவு என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் உள்பட 22 பேர் பலியானார்கள். சந்தனகடத்தல் வீரப்பன் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வீரப்பனின் கூட்டாளிகள்

டெல்லியில் 21–ந்தேதி இப்தார் விருந்து: காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு

Posted: 13 Jul 2015 10:30 PM PDT

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் அளிக்கும் இப்தார் விருந்துக்கு ஹுரியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பை யொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இப்தார் விருந்து அளித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம்

கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 5 பேர் பலி

Posted: 13 Jul 2015 10:29 PM PDT

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கியது. ராஜ முந்திரியில் ஆந்திர அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோதாவரி புஷ்கரம் விழாவை காஞ்சி சங்காராச்சாரியார் இன்று காலை புனித நீராடி தொடங்கி வைத்தார். முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் புனித நீராடினார். அவரை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில்

எம்.பி.க்கள் சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தும் முடிவு கிடப்பில் போடப்பட்டது

Posted: 13 Jul 2015 10:20 PM PDT

எம்.பி.க்களின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான எம்.பி.க்கள் குழு அளித்த ஆலோசனைகள் இப்போதைக்கு நடைமுறைக்கு வராது என தெரிய வந்துள்ளது. பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான இந்தக்குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டபோது, சம்பள உயர்வுடன்

பிரதமர் மோடி 16–ந்தேதி வாரணாசி பயணம்: வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

Posted: 13 Jul 2015 10:17 PM PDT

பிரதமர் மோடி ரஷியா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். அடுத்து நாளை மறுநாள் (16–ந்தேதி) தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார்.

ஆந்திரா, தெலுங்கானாவில் கோதாவரி புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கியது: 4 கோடி பக்தர்கள் புனித நீராடல்

Posted: 13 Jul 2015 10:12 PM PDT

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் 'கோதாவரி புஷ்கரம் விழா' கோதாவரி நதி பாயும் மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் கொண்டாடப்படுவது உண்டு. இந்த ஆண்டு குருபகவான் சிம்மராசியில் பிரவேசித்து கோதாவரி நதியில் பயணிக்கிறார். 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த பிரவேசம் நடப்பதால் மகா கோதாவரி புஷ்கரம் விழாவாக இந்த ஆண்டு

திருப்பதி கோவிலுக்கு வந்த சென்னை வாலிபர்கள் 2 பேர் விபத்தில் பலி

Posted: 13 Jul 2015 09:53 PM PDT

ஸ்ரீகாளஹஸ்தி அருகே சாலை ஓரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள். சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (வயது 24), ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அதேபோல், சென்னை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர்,

கேரள மந்திரிக்கு சல்யூட் அடிக்காத பிரச்சினை: போலீஸ் ஏ.டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் - உம்மன்சாண்டி

Posted: 13 Jul 2015 09:42 PM PDT

கேரள மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் கிருஷிராஜ்சிங். இவர் சமீபத்தில்தான் பதவியேற்றுள்ளார். இவர் இந்த பொறுப்புக்கு வந்தது முதல் தனது அதிரடி நடவடிக்கை மூலம் சர்ச்சையில் சிக்கி வருகிறார். 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் 50 சி.சி. திறனுக்கு மேற்பட்ட வாகனங்களை

திருப்பதி கோவிலில் 5 மணி நேர தரிசனம் ரத்து

Posted: 13 Jul 2015 09:18 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17–ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை திருமலையில், 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்' நடந்தது.

டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து: டெல்லிவாசிகளில் 81 சதவீதம் பேர் ஆதரவு

Posted: 13 Jul 2015 08:34 PM PDT

மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லிக்கு பிற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களுடன் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

எதிர்க்கட்சி மனநிலையை விட்டு வெளியே வாருங்கள்: பா.ஜனதாவுக்கு சிவசேனா வலியுறுத்தல்

Posted: 13 Jul 2015 08:25 PM PDT

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் நேற்று கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு சிலர் தங்களுடைய கண்களை திறக்கும்போது எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளையும், பாகிஸ்தானின் நம்பிக்கை துரோகத்தையும்

ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இந்தியர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டர் ட்ரெண்டிங் கற்பனை

Posted: 13 Jul 2015 05:28 PM PDT

நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த கேள்விதான் இப்போது ட்விட்டரையே கலக்கி வருகிறது. கம்பீரமான ஹல்க்குக்கு பட்டை போட்டுவிட்டு, ஸ்பைடர் மேனுக்கு டர்பன் கட்டிவிட்டு நெட்டிசன்கள் அடித்த லூட்டி இருக்கிறதே... போதும் வலிக்குது..

மந்திரி வந்த போது எழுந்து நிற்காத போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ்

Posted: 13 Jul 2015 05:12 PM PDT

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள போலீஸ் அகாடமியில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற விழாவில் அந்த மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கலந்து கொண்டார். அவர் விழா மேடைக்கு வந்த போது, மேடையில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் சோபாவில் அமர்ந்திருந்த கூடுதல் டி.ஜி.பி ரிஷிராஜ்

டிசம்பர் 2016-க்குள் சார்க் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

Posted: 13 Jul 2015 04:56 PM PDT

விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வரும் இந்தியா, வரும் டிசம்பர் 2016-ம் ஆண்டுக்குள் சார்க் நாடுகளுக்கான செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

முலாயம்சிங் மீது புகார் கூறிய உ.பி. போலீஸ் அதிகாரி மத்திய படை பாதுகாப்பு கேட்டு மனு

Posted: 13 Jul 2015 04:49 PM PDT

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரி அமிதாப் தாக்குர், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் தன்னை மிரட்டியதாக கடந்த 10-ந் தேதி லக்னோ போலீசில் புகார் செய்தார். அதற்கு மறுநாள், அவர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அமிதாப் தாக்குர், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகினார். டெல்லியில், உள்துறை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™