மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பீகார் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி 25–ந்தேதி பிரசாரம்
- குஜராத் மழைக்கு 10 சிங்கங்கள், 100 மான்கள் பலி
- கடும் மழையினால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
- லக்வி தனது குரல் மாதிரி கொடுக்க மாட்டார் என அவரது வழக்கறிஞர் பேட்டி
- காஷ்மீர் எல்லையருகே இன்று பாகிஸ்தான் ஊடுருவல் முறியடிப்பு-3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
- வடக்கே மாறும் அரசியல் கூட்டணி: நிதிஷ் குமார் அளித்த இப்தார் விருந்தில் லல்லு, காங். தலைவர்கள் பங்கேற்றனர்
- கேரளாவில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக்கி கொசு உற்பத்திக்கு காரணமாகும் நிறுவனங்கள் மீது வழக்கு: சுகாதாரத்துறை மந்திரி
- குற்றங்களின் தலைநகரான உத்தரப்பிரதேசத்தில் 129 ஐ.பி.எஸ். பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன
- திருப்பதி லட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றவர் கைது: 2 லட்டுக்கு ரூ.501 விலை நிர்ணயம்
- வியாபம் ஊழலில் மந்திரானி யார்?: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
- தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
- தன் வயிறை பட்டினி போட்டு நம் உயிரை வளர்த்த ஒவ்வொரு தாய்க்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
- அவதூறு சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல்
- நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை: மாநில முதல்-மந்திரிகளுடன் மோடி 15-ந் தேதி ஆலோசனை
- இந்திய மக்கள் தொகை 127 கோடி: 2050-ல் சீனாவை மிஞ்சி முதலிடம் பிடிக்கும் என தகவல்
- குடி போதையில் குடியைப் பற்றி பாடம் நடத்திய அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
- இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அணுகுமுறையை மாற்றுங்கள்: சிவசேனாவுக்கு பா.ஜனதா ஆலோசனை
- டெல்லியில் பள்ளி முதல்வரை மிரட்டியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. கணவர் மீது வழக்கு
- செவ்வாய் கிரகத்துக்கு பறக்க இருக்கும் சுனிதா வில்லியம்ஸ்
- சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது
| பீகார் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி 25–ந்தேதி பிரசாரம் Posted: 11 Jul 2015 10:59 PM PDT பீகார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இங்கு முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி முறிந்த பின்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் தோல்வியை சந்தித்தது. |
| குஜராத் மழைக்கு 10 சிங்கங்கள், 100 மான்கள் பலி Posted: 11 Jul 2015 10:46 PM PDT குஜராத்தில் கடந்த மாதம் பெய்த பெரு மழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கங்கள் மற்றும் சுமார் 100 மான்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அம்மாநில தலைமை வனப்பாதுகாவலர் மத்திய |
| கடும் மழையினால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம் Posted: 11 Jul 2015 10:37 PM PDT அமர்நாத் குகைக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பனி லிங்கம் வடிவில் தோன்றும் சிவ பெருமானை தரிசிப்பதற்கு செல்ல தயாராக இருந்த யாத்ரீகர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். |
| லக்வி தனது குரல் மாதிரி கொடுக்க மாட்டார் என அவரது வழக்கறிஞர் பேட்டி Posted: 11 Jul 2015 10:28 PM PDT சில நாட்களுக்கு முன் ரஷ்யாவின் உபா நகரில் நடைப்பெற்ற பிரிக்ஸ் மாநட்டின் போது நரேந்திர மோடி மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகிய இருவரும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மும்பை தாக்குதலுக்கு |
| காஷ்மீர் எல்லையருகே இன்று பாகிஸ்தான் ஊடுருவல் முறியடிப்பு-3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Posted: 11 Jul 2015 09:58 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முசாபராபாத் மாவட்டத்தில் நீலம் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கேரான் வழியாக இன்று அதிகாலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லை வழியாக காஷ்மீரில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து |
| Posted: 11 Jul 2015 09:35 PM PDT பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட காயத்துக்கு ஒத்தடமாக எதிர்வரும் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி வெற்றித் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள காங்கிரஸ் தலைமை, பழைய பகையை எல்லாம் மறந்து புதிய கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றது. இதற்கு முன்னோட்டமாக, ரம்ஜான் நோன்பையொட்டி வரும் 13-ம் தேதி டெல்லியில் இப்தார் விருந்தளிக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் |
| Posted: 11 Jul 2015 09:14 PM PDT கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இந்நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நோய்கள் பரவ சுற்றுபுறங்களில் கழிவு நீர் தேங்குவதும், ஓட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தெரிய வந்தது. |
| குற்றங்களின் தலைநகரான உத்தரப்பிரதேசத்தில் 129 ஐ.பி.எஸ். பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன Posted: 11 Jul 2015 09:09 PM PDT நாடு முழுவதும் 901 ஐ.பி.எஸ். பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 129 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன என தெரிய வந்துள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை என்ற நிலையில் இத்தகைய குற்றங்களை தடுத்து நாட்டின் சட்டம்- ஒழுங்கை |
| திருப்பதி லட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றவர் கைது: 2 லட்டுக்கு ரூ.501 விலை நிர்ணயம் Posted: 11 Jul 2015 08:24 PM PDT திருப்பதி லட்டு பிரசாதம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக, திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கும்படி பாதுகாப்பு இலாகாவுக்கு உத்தரவிடப்பட்டது. துணை பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணா நடத்திய விசாரணையில், அசல் திருப்பதி பிரசாத லட்டு ஆன்லைனில் பதிவு செய்தவுடன் பெங்களூருவில் எளிதில் கிடைப்பதாக தெரியவந்தது. |
| வியாபம் ஊழலில் மந்திரானி யார்?: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு Posted: 11 Jul 2015 08:11 PM PDT மத்தியபிரதேச தேர்வு வாரிய ஊழல் வழக்கு ஒன்றில் 'மந்திரிரானி'யும், ஒரு மந்திரியின் மனைவியும் சம்பந்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் மந்திரானி என்று குறிப்பிடப்படுபவர் யார் என்று தெரியவில்லை என்றும் மந்திரானி என்பது பெண் மந்திரி ஒருவரை குறிக்கலாம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. வனக்காவலர் தேர்வு முறைகேடு வழக்கின் முக்கிய குற்றவாளியான தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி பங்கஜ் |
| தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம் Posted: 11 Jul 2015 07:43 PM PDT தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மற்றும் கரீம் நகர் மாவட்டங்களில் நேற்று காலை 11 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக அடிலாபாத் மாவட்டத்தில் உத்னூர் மற்றும் குண்டூர் மண்டலங்களின் பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் மக்களால் உணரப்பட்டது. இதேபோல் கரீம் நகர் மாவட்டத்தின் ரெய்க்கால் மண்டலம் மற்றும் ராம்ஜிபேட், லிங்காபூர், போர்லபள்ளி, காகிதபூர் ஆகிய கிராமங்களிலும் நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. |
| தன் வயிறை பட்டினி போட்டு நம் உயிரை வளர்த்த ஒவ்வொரு தாய்க்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் Posted: 11 Jul 2015 05:27 PM PDT "ஆயிரம் தான் கவிதை சொன்னேன்.. அழகழகா பொய் சொன்னேன்.. பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலியே..." வைரமுத்துவின் இந்த கவிதை வரிகள்தான் இந்த வீடியோவைப் பார்க்கையில் நினைவுக்கு வருகின்றன. உண்மையில் நமக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அம்மாவுக்காக அப்படி என்ன செய்து விட்டோம் என்று நினைக்கையில், |
| Posted: 11 Jul 2015 05:00 PM PDT அவதூறு தொடர்பான கிரிமினல் சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றை நீக்கக்கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நக்கீரன் கோபால், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை: மாநில முதல்-மந்திரிகளுடன் மோடி 15-ந் தேதி ஆலோசனை Posted: 11 Jul 2015 04:47 PM PDT பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே |
| இந்திய மக்கள் தொகை 127 கோடி: 2050-ல் சீனாவை மிஞ்சி முதலிடம் பிடிக்கும் என தகவல் Posted: 11 Jul 2015 04:17 PM PDT உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையை தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள் தொகை 127 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 780 |
| குடி போதையில் குடியைப் பற்றி பாடம் நடத்திய அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் Posted: 11 Jul 2015 03:43 PM PDT ஒரு பக்கம் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு வரும் செய்தி ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், மற்றொரு புறம் அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களும் குடித்து விட்டு பள்ளிக்கு வரும் சம்பவங்களும் அதிகரித்தபடியே இருக்கிறது. |
| இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அணுகுமுறையை மாற்றுங்கள்: சிவசேனாவுக்கு பா.ஜனதா ஆலோசனை Posted: 11 Jul 2015 03:42 PM PDT ரஷிய நாட்டின் உபா நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். இதற்கு பாரதீய ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. |
| டெல்லியில் பள்ளி முதல்வரை மிரட்டியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. கணவர் மீது வழக்கு Posted: 11 Jul 2015 03:23 PM PDT டெல்லி ஷாலிமார் பாக் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பந்தனா குமாரி ஆவார். இவரது கணவர் சஜ்ஜன் குமார். இவர் அங்குள்ள சர்வோதயா வித்யாலயா பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவர் சேர்க்கைக்காக சென்றதாகவும், அந்த மாணவருக்கு இடம் தராவிட்டால், |
| செவ்வாய் கிரகத்துக்கு பறக்க இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் Posted: 11 Jul 2015 02:54 PM PDT செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி வருகிறது. |
| சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது Posted: 11 Jul 2015 01:42 PM PDT மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வேளையில், மராட்டியத்தில் டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |