Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்: உறவினர்கள் கோரிக்கை ஏற்பு

Posted: 27 Jul 2015 11:15 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

அப்துல்கலாம் உண்மையான கர்மயோகி: அமித்ஷா புகழ் அஞ்சலி

Posted: 27 Jul 2015 11:00 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– மறைந்த அப்துல்கலாம் தனது கடைசி மூச்சு வரை தனது தாய் நாட்டுக்காக பாடுபட்டார். அவர் அறிவியல், கல்வி, எழுத்து, எளிமை, சாதனை போன்ற

ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாக வழக்கு: கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியின் மகன் கைது

Posted: 27 Jul 2015 10:56 PM PDT

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் நீதிபதி பாஸ்கர்ராவ். கர்நாடகா மாநிலத்தின் செயற்பொறியாளர் ஒருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்கவும்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி தானம் கொடுத்த மூதாட்டி: ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டு வேண்டுகோள்

Posted: 27 Jul 2015 10:45 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தகவல் மையத்துக்கு நேற்று 85 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரது வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார். சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர்.

டெல்லி வீட்டில் அப்துல் கலாமின் உடலுக்கு 3 மணியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்

Posted: 27 Jul 2015 10:28 PM PDT

நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பயணம் செய்து பொது மக்களையும், இளைஞர்களையும் சந்தித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதையே தன்னுடைய மிகப் பெரிய பணியாக கொண்டிருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இன்று தன்னுடைய இறுதி பயணத்தின்

சுதந்திர தினத்தில் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை கடும் எச்சரிக்கை

Posted: 27 Jul 2015 08:09 PM PDT

இந்திய சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள்

தீவிரவாதிகளின் தாக்குதலில் தந்தையைப் போலவே உயிரை தியாகம் செய்த போலீஸ் சூப்பிரண்டு

Posted: 27 Jul 2015 08:08 PM PDT

நேற்று பஞ்சாப் மாநிலம் டினா நகரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(துப்பறியும் பிரிவு) பல்ஜித் சிங் கொல்லப்பட்டார். தந்தையின் மறைவைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த பல்ஜித் சிங் முதலில்

சபாநாயகர் மேஜை மீது கோஷங்கள் அடங்கிய அட்டையால் அடித்த காங். உறுப்பினர்: பாராளுமன்றத்தில் பரபரப்பு

Posted: 27 Jul 2015 07:43 PM PDT

பாராளுமன்றத்தில் நேற்று டெல்லி ஐகோர்ட்டு திருத்த மசோதாவை சட்ட மந்திரி சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பா.ஜனதா உறுப்பினர் மீனாட்சி லெகி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரிகள் வசுந்தரா ராஜே,

பஞ்சாபில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted: 27 Jul 2015 07:40 PM PDT

பஞ்சாப் மாநிலம் டினா நகருக்குள் ராணுவ சீருடையில் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரி உள்பட 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகளின் இலக்காக இருந்து வரும் நாட்டின்

சொத்துக்குவிப்பு வழக்கில் 6 நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்வோம்: பி.வி.ஆச்சார்யா பேட்டி

Posted: 27 Jul 2015 07:33 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசின் சார்பில் ஆஜராகும் வக்கீல் பி.வி.ஆச்சார்யா, 'தினத்தந்தி' நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

விவசாயிகள் தற்கொலை விவகாரம்: டெல்லியில் தேவேகவுடா சாகும் வரை உண்ணாவிரதம்

Posted: 27 Jul 2015 07:28 PM PDT

விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

பாராளுமன்றத்தில் புதிதாக 2 மசோதாக்கள் தாக்கல்

Posted: 27 Jul 2015 07:26 PM PDT

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், பா.ஜனதா முதல்-மந்திரிகள் வசுந்தரா ராஜே, சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், கடந்த வாரம் முழுவதும் பாராளுமன்றம் முடங்கியது.

விலை உயர்வு எதிரொலி: வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி- மத்திய அரசு

Posted: 27 Jul 2015 07:17 PM PDT

வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து, விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான், சீனா, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயம்

எம்.பி.க்கள் பற்றி அவதூறாக கருத்து: ராபர்ட் வதேராவுக்கு பாராளுமன்றம் நோட்டீசு

Posted: 27 Jul 2015 07:11 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சமூக வலைதளம் ஒன்றில் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ''பாராளுமன்றம் தொடங்கிவிட்டது. எனவே அவர்கள் தங்கள் இழிவான திசைதிருப்பும் அரசியல் தந்திரங்களை நடத்துவார்கள். இந்திய

வெளிநாட்டினர் அதிகம் சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம்: மத்திய சுற்றுலா அமைச்சகம் தகவல்

Posted: 27 Jul 2015 05:32 PM PDT

வெளிநாட்டினர் அதிகம் சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடித்தது. மராட்டியம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு கடந்த 2014-ம் ஆண்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விவரங்களையும், இதில், அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலையும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.

இப்படி ஒரு குடியரசுத்தலைவரை இந்த நாடு பார்த்ததுண்டா: பொக்கிஷத் தருணங்கள்- வீடியோ வடிவில்

Posted: 27 Jul 2015 02:43 PM PDT

உலக அரங்கில் இந்திய விண்வெளித்துறைக்கு பெருமை தேடித்தந்தவர், இந்திய இளைஞர்கள் புதுமை செய்யத் தூண்டுவதையே பணியாகக் கொண்டவர். எந்த நேரமும் மாணவர்களுடன் உரையாட தயாராக உள்ளவர், இப்படி 83 வயதிலும் 20 வயது இளைஞரைப் போல் சுற்றிச்சுழன்று கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள, இன்னும் சில வாரங்கள் ஆகுமென்றே தோன்றுகிறது.

தாஜ்மஹால் செங்கோட்டையில் வை-பை வசதி

Posted: 27 Jul 2015 01:45 PM PDT

இந்திய தொல்லியல் துறை மத்திய அரசால் பாதுகாக்கப்படும் தாஜ்மஹால், செங்கோட்டை, புத்தகயா உள்ளிட்ட 25 நினைவு சின்னங்கள் இருக்கும் இடங்களில் வை-பை வசதியை ஏற்படுத்த இருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா முதல் 30 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்: மாரடைப்பு காரணமாக இன்று உயிர் பிரிந்தது

Posted: 27 Jul 2015 08:34 AM PDT

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு

Posted: 27 Jul 2015 11:10 AM PDT

இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது

இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது: அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, ஜெயலலிதா உட்பட தலைவர்கள் இரங்கல்

Posted: 27 Jul 2015 10:44 AM PDT

இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™