Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காளஹஸ்தி அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளுடன் கார் பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 17 Jul 2015 10:28 PM PDT

காளஹஸ்தி அடுத்த கார்வேடிநகரம் வழியாக வாகனங்களில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக கார்வேடிநகரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில், கார்வேடிநகரம் வனத்துறை அதிகாரி லட்சுமிபதி தலைமையில் பச்சிக்காப்பள்ளம் அருகே நேற்று முன்தினம் தீவிர

பா.ஜ.க. ரத யாத்திரைக்கு போட்டியாக குதிரை வண்டியில் சென்று பிரசாரம் செய்யும் லல்லு பிரசாத்யாதவ்

Posted: 17 Jul 2015 10:25 PM PDT

பீகாரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதாதளமும், ஐக்கிய ஜனதாதளமும் கை கோர்ந்து ஓரணியில் நிற்கின்றன. காங்கிரசும் இந்த அணியில் இருக்கிறது. ராஷ்டிரீய ஜனதாதள தலைவர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு

Posted: 17 Jul 2015 10:09 PM PDT

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர், பிரதமர் மோடியை அடிக்கடி புகழ்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி, தூய்மையான இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த போது,

கோதாவரி புஷ்கரத்துக்கு இரவிலும் குவியும் பக்தர்கள்: 4 நாளில் 80 லட்சம் பேர் நீராடினர்

Posted: 17 Jul 2015 10:08 PM PDT

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் விழா கடந்த 14–ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. முதல் நாளிலேயே ராஜ முந்திரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் நெரிசலில் சிக்கி பலர் பலியானதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச பத்திரிகையாளர் மரணம் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. அமைப்பு வலியுறுத்தல்

Posted: 17 Jul 2015 09:44 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் அக்சய் சிங் மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வலியுறுத்தியுள்ளது.

நாளை ரத்து செய்யப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விவரம்

Posted: 17 Jul 2015 09:34 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் இட்டார்சி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய தொழில்நுட்ப சாதனங்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

குஜராத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட விட்டு கொடுக்க முடியாது: தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டம்

Posted: 17 Jul 2015 08:40 PM PDT

மராட்டிய சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சகன் புஜ்பால் பல்வேறு கேள்விகளை கேட்டார். மேலும், மாநில அரசுக்கும், மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே ஆன தகவல் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

மும்பை தாக்குதல் பாணியில் டெல்லியில் நாச வேலைக்கு தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கையால் உஷார்

Posted: 17 Jul 2015 08:35 PM PDT

மும்பை தாக்குதல் பாணியில் டெல்லியில் நாசவேலை நடத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீசார் உஷாராக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு

ஜம்மு நூற்றாண்டு விழாவில் சோனியா மருமகனை சாடிய மோடி

Posted: 17 Jul 2015 08:22 PM PDT

ஜம்முவில் மாநில முன்னாள் நிதி மந்திரி கிர்தாரிலால் டோக்ரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த கிர்தாரிலால் டோக்ரா, காங்கிரஸ் தலைவராக திகழ்ந்தவர். ஆனால் எதிர்முகாமில் இருந்த தற்போதைய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை மருமகனாக தேர்ந்தெடுத்தார்.

மும்பை ராணுவ மருத்துவ கிடங்குகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

Posted: 17 Jul 2015 08:12 PM PDT

மும்பையில் மேற்கு கடற்படை கட்டளை பிரிவுக்கு உட்பட்ட 2 மருத்துவ கிடங்குகளில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனை மற்றும் மும்பை கண்டிவிலியில் உள்ள ஆயுதப்படைக்கு சொந்தமான மருத்துவ கிடங்குகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2 தனித்தனி குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் பலத்த மழை பெண்கள், சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 17 Jul 2015 07:36 PM PDT

காஷ்மீரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன் என்ற கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் அந்த பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்: நிர்மலா சீதாராமன் பேச்சு

Posted: 17 Jul 2015 07:27 PM PDT

வருகிற 21-ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தற்போது இந்த மசோதா 30 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழுவின்

பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து

Posted: 17 Jul 2015 07:07 PM PDT

காஷ்மீர் மாநில முன்னாள் நிதி மந்திரி கிரிதரி லால் டோக்ராவின் 100-வது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக நேற்று ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுலின் நடவடிக்கைகள் டயாபர் அணியும் குழந்தையைப் போலிருக்கிறது: வார்த்தைப்போரில் பதிலடி கொடுத்த பா.ஜ.க

Posted: 17 Jul 2015 05:32 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் டயாபர் அணியும் குழந்தையைப் போல் உள்ளது என்று கூறி, இரு கட்சிகளுக்கிடையே நடக்கும் வார்த்தைப்போரில் ராகுலுக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை காங்கிரஸ் தோற்கடிக்கும்- ராகுல் காந்தி

Posted: 17 Jul 2015 05:13 PM PDT

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நேற்று, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கலந்து கொண்ட ராகுல் பேசுகையில், "மத்தியில் முதல்

உள்நாட்டிலேயே தயாராகும் இந்தியாவின் மிகப்பெரிய அணு ஆயுத போர்க் கப்பல்: ஐ.என்.எஸ் விஷால்

Posted: 17 Jul 2015 04:21 PM PDT

உள்நாட்டிலேயே தயாராகும் இந்தியாவின் மிகப்பெரிய போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விஷால், அணுசக்தியால் இயங்கக் கூடியதாக இருக்க அதிகம் வாய்ப்புள்ள நிலையில், அதை உருவாக்க 9 கப்பல் கட்டுமானத் தளங்கள் இனம் காணப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் குறைவான மாணவர்களை கொண்ட 16 அரசு பள்ளிகள் மூடப்பட்டன

Posted: 17 Jul 2015 03:50 PM PDT

சிக்கமகளூரு மாவட்டத்தில் நடப்பாண்டில் குறைவான மாணவர்களை கொண்ட 16 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பால், பாடபுத்தகம், சீருடை உள்பட பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள்

ரெயில் பயணத்தின் போது ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் அழையுங்கள் 1512

Posted: 17 Jul 2015 03:34 PM PDT

ரெயில் பயணத்தின் போது ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால், பயணிகள் புகார் தெரிவிக்க 1512 என்ற தொலைபேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரெயில்வே இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபார் சவுத்ரி டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்து

அரிசிகெரே அருகே கரடி தாக்கி 3 பேர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Posted: 17 Jul 2015 03:26 PM PDT

அரிசிகெரே அருகே கரடி தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஜே.சி.புரா கிராமம் ராமனள்ளி வனப்பகுதியில் அமைந்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10

ஒரு நிமிட தடுமாற்றத்தால் பறிபோன உயிர்: கற்களால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை

Posted: 17 Jul 2015 11:09 AM PDT

ஒரே ஒரு நிமிட தடுமாற்றத்தால் எந்த பாவமும் செய்யாத அப்பாவி இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பிவாண்டி டவுனில் உள்ள புலேநகர் பகுதியில் செயல்படாத நிலையில் ஒரு கல் குவாரி உள்ளது. அங்குள்ள ஒரு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™