Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியாவில் வாட்ஸ் அப், ஸ்கைப், வைபர் கட்டண சேவையாகிறது

Posted:

இந்தியாவுக்குள் இணைய சமநிலையைப் பேணுவது குறித்து இந்திய அரசுக்கு கொள்கைகளை பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட இந்தியத் தொலைத்தொடர்புத்துறையின் ஒழுங்காற்று அமைப்பான TRAI அமைப்பின் நிபுணர்களின் பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.


Read more ...

சிவகார்த்திகேயனின் பரந்த மனசு

Posted:

எதையும் இங்கிலீஸ்ல ஸ்பீக்குனாதான் இன்டஸ்ட்ரியில் மரியாதை என்ற கெட்ட வாடை சிவகார்த்திகேயன் ஆபிசையும் விட்டு வைக்கவில்லை.


Read more ...

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் 13 ஆடம்பர விடுதிகள், 2 மாட்டுப் பண்ணைகள்: மாவை சேனாதிராஜா

Posted:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பொதுத் தேவைக்கு எனக் கூறி அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் 13 ஆடம்பர விடுதிகள் மற்றும் 2 மாட்டுப் பண்ணைகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

மஹிந்த தோல்வியடைவர்; ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிப்பது பயனற்றது: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படையாக கூறிய பின்னரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது பயனற்றது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

என்னை யாரும் அரசியலில் இருந்து அகற்ற முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கை அரசியல் களத்திலிருந்து தன்னை யாராலும் அகற்ற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

உக்ரைனில் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு ஒரு வருட நிறைவு!

Posted:

கடந்த வருடம் ஜூலை 17 ஆம் திகதி நெதர்லாது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானம் உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்டு இன்றுடன் ஒரு வருட நிறைவாகும்.


Read more ...

பொதுத் தேர்தலை முன்வைத்து மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் முழுமையான பகுதி!

Posted:

*பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (யூலை 14, 2015) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆற்றிய உரை. 


Read more ...

அமெரிக்காவில் ISIS ஆதரவாளர் துப்பாக்கிச் சூட்டில் 4 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு!

Posted:

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தின் சாட்டனோகா நகரிலுள்ள இராணுவ சேவை மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ISIS ஆதரவாளர் ஒருவர் திடீரென நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 4 அமெரிக்கக் கப்பற் படையினர் உயிரிழந்துள்ளனர்.


Read more ...

நைஜீரிய சந்தையில் இரட்டைக் குண்டு வெடிப்பில் 50 பேர் பலி

Posted:

வியாழக்கிழமை வடகிழக்கு நைஜீரியாவின் கொம்பே நகரிலுள்ள சந்தையில் நிகழ்த்தப் பட்ட இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

புளூட்டோவுக்கு அண்மையில் எடுக்கப் பட்ட முதல் புகைப்படங்களில் பனி மலைகள் மற்றும் தண்ணீருக்கான ஆதாரம்

Posted:

புளூட்டோவின் தரை மேற்பரப்புக்கு மிக அண்மையில் அதாவது 7700 மைல் உயரத்தில் இருந்து நியூஹாரிசன்ஸ் விண்கலம் அதனை எடுத்த ஆர்வமூட்டும் புகைப்படங்களை நாசா தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றது. இப்புகைப்படங்களில் முக்கியமாக பனிக்கட்டி வடிவத்தில் அங்கு தண்ணீர் இருப்பதற்கும் பனி படர்ந்த மலைகள் இருப்பதற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும் புளூட்டோவிலுள்ள பனி மலைகள் சராசரியாக சுமார் 11 000 அடி உயரத்துக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த அரிய தகவல்கள் மூலம் புளூட்டோவுக்குச் செலுத்தப் பட்ட நியூஹாரிசன்ஸ் செயற்திட்டம் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புளூட்டோவில் நைட்ரஜன் ஐஸ், மெதேன் ஐஸ் மற்றும் கார்பன் மொனொக்ஸைட் ஐஸ் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில் அங்கு மிக உயரமாக பனி மலைகள் காணப்பட குறித்த பதார்த்தங்களின் இயல்பு ஒத்துழைக்காது எனவும் அதாவது குறித்த 3 மூலகங்களும் மிக மென்மையானவை எனவும் தற்போது கூறப்படுகின்றது. எனவே புளூட்டோவில் காணப்படும் உயரமான பனி மலைகள் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் (H2O)இருப்பதற்கான சான்றாகும் என்று ஊகிக்கப் படுகின்றது.

நியூஹாரிசன்ஸ் தகவல் அனுப்பத் தொடங்க முன்னர் புளூட்டோ பெரும்பாலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கற்பாறைகளினா ல் ஆன குள்ளக் கிரகமாகவே கருதப் பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் அங்குள்ள மிக உயர்ந்த பனிமலைகளால் அங்கு மிக அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான சான்று கிடைத்திருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பொதுவாக தண்ணீர் மூலக்கூறுகள் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கும் நிகழ்வானது மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் நமது பூமியில் நிலவி வரும் உயிர் வாழ்க்கைக்கான முக்கிய ஆதாரங்களில் நீரும் ஒன்றாகும். இதேவேளை நியூஹாரிசன்ஸ் தனது 7 சென்சார் கருவிகள் மூலம் Flyby இல் இருந்தது முதற்கொண்டு சேகரித்து வரும் புளூட்டோவிலுள்ள பனிமலைகள் எவ்வாறு தோன்றின என்பது உட்பட பல முக்கிய தகவல்களை நாசா முற்றாக பதிவிறக்கம் செய்ய 16 மாதங்கள் தேவைப் படும் என அறிவித்துள்ளது.

மறுபுறம் புளூட்டோவின் தரை மேற்பரப்பில் பூமியின் நிலவில் காணப்படுவது போன்ற குழிகள் (impact craters)நியூஹாரிசன்ஸ் அண்மையில் இருந்து எடுத்த புகைப்படங்களில் காணப்படவில்லை. எனவே புளூட்டோ மிக சமீபத்தில் அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருத்து நிலவுகின்றது. நமது சூரிய குடும்பத்தின் வயது 4.5 பில்லியன் வருடங்கள் என ஏற்கனவே கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் புளூட்டோவின் மிகப் பெரிய நிலவான சாரோன் உட்பட ஏனைய சந்திரன்களது புகைப்படங்கள் மற்றும் தகவல்களும் இனி வரும் நாட்களில் வெளி வரலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™