மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்
- போலீஸ்காரரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யை கைது செய்ய நீதிபதி உத்தரவு
- அரசு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கேரள மந்திரி
- போலீஸ்காரர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. மகன் கைது
- சத்தீஷ்காரில் அரிசி பொது வினியோகத்தில் முறைகேடு: பா.ஜனதா முதல்-மந்திரி ராமன்சிங் மீது ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் புகார்
- ராகுல்காந்தி, ராபர்ட் வதேரா பற்றி லலித் மோடி பரபரப்பான தகவல்
- இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபையில் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
- மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேன்: சிங்கல்
- ம.பி.யில் நடைபெற்ற வியாபம் ஊழல் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த செய்தியாளர் மர்ம சாவு
- கர்நாடகத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை: முதல்வர் தகவல்
- குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல்
- தெலுங்கானாவில் பெரிய வேட்டை: ரூ. 4 கோடி கஞ்சா சிக்கியது
- ஒரே பைக்கில் 4 பேர் பயணம்: கார் மோதி அனைவரும் பலியான சோகம்
- உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை: சர்தாம் யாத்திரை பகுதிகள் கண்காணிப்பு
- வலதுசாரி தீவிரவாதிகளால் பிரதமர் உயிருக்கு ஆபத்தா?: உள்துறை அமைச்சகம் விளக்கம்
- முதலில் இந்தியனாக இருங்கள் - பிறகு இங்கிலீஷில் பேசலாம்: ராஜ்நாத் சிங் அறிவுரை
- தங்கப்பதக்கம் வென்ற தேசிய குத்துச்சண்டை வீரர் தெருப்பெருக்கும் தொழிலாளியாக மாறிய அவலம்
- சுஷ்மா, லலித் மோடி, வசுந்த ராஜே சிந்தியா மீது கோர்ட்டில் புகார் பதிவு
- நிபந்தனையுடன் சரணடைய முன்வந்ததால் தாவூத் இப்ராகிமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது: சரத் பவார் பேட்டி
- சரக்கு ரெயில் மீது லாரி மோதி 2 பேர் பலி: ரெயிலும் தடம்புரண்டது
| உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன் Posted: 04 Jul 2015 11:17 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வருடங்களில் 57 பேரை கொலை செய்த கொடூர கொலைகாரனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பெரேய்லி நகர போலீசார் வழிப்பறி கொள்ளை தொடர்பாக 26 வயது சல்மான்கானை கைது செய்தனர். இதையடுத்து |
| போலீஸ்காரரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யை கைது செய்ய நீதிபதி உத்தரவு Posted: 04 Jul 2015 10:17 PM PDT மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிரசன் பானர்ஜி. கடந்த ஜனவரி மாதம் இவர் கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வழி மறித்தார். விதிகளை மீறியதாக கூறி கார் நம்பரை அந்த போலீஸ்காரர் டைரியில் எழுதினார். அப்போது காரில் இருந்து இறங்கிய எம்.பி. பிரசன் பானர்ஜி, அந்த போலீஸ்காரரை அடித்து உதைத்தார். |
| அரசு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கேரள மந்திரி Posted: 04 Jul 2015 09:55 PM PDT கேரளாவில் உம்மண்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. உம்மண்சாண்டி மந்திரிசபையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை மந்திரியாக இருப்பவர் கே.சி.ஜோசப். |
| போலீஸ்காரர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. மகன் கைது Posted: 04 Jul 2015 07:53 PM PDT உத்தரபிரதேச மாநிலம் ராம்நகரில் உள்ள பூபதி பவன் சொத்துக்கு ராஜ குடும்பத்தினர் சில உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் பூபதி பவனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் அங்கு நடைபெற்ற மோதலின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் போலீஸ்காரர் விஜய்குமார் மிஸ்ரா கொல்லப்பட்டார். |
| Posted: 04 Jul 2015 07:47 PM PDT மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் போலீசாரால் தேடப்படும் முன்னாள் ஐ.பி.எல். கிரிக்கெட் தலைவர் லலித்மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கி உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக மராட்டிய மாநில பெண் மந்திரி |
| ராகுல்காந்தி, ராபர்ட் வதேரா பற்றி லலித் மோடி பரபரப்பான தகவல் Posted: 04 Jul 2015 02:49 PM PDT லண்டனில் வசிக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி, தான் போர்ச்சுக்கல் செல்ல பயண ஆவணங்கள் பெற மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே இருவரும் உதவியதாக வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் சூறாவளியாக வீசி வருகிறது. |
| இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபையில் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா Posted: 04 Jul 2015 02:04 PM PDT காஸா முனையில் கடந்த ஆண்டு நடந்த மோதலின் போது இஸ்ரேல் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கொடுத்துள்ள அறிக்கையை வரவேற்கும் வகையிலும், இந்த |
| மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேன்: சிங்கல் Posted: 04 Jul 2015 01:21 PM PDT மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் |
| ம.பி.யில் நடைபெற்ற வியாபம் ஊழல் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த செய்தியாளர் மர்ம சாவு Posted: 04 Jul 2015 12:33 PM PDT மத்தியப்பிரதேசத்தில் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் 'வியாபம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் தேர்வுகள் மூலம் 131 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதில் 48 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. |
| கர்நாடகத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை: முதல்வர் தகவல் Posted: 04 Jul 2015 09:34 AM PDT கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 8 விவசாயிகள் கரும்பு விவசாயத்தால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும், பிற விவசாயிகள் வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் |
| குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல் Posted: 04 Jul 2015 08:59 AM PDT குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். வதோதரா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் விற்பனை செய்வதாக தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வதோதரா சிறப்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் |
| தெலுங்கானாவில் பெரிய வேட்டை: ரூ. 4 கோடி கஞ்சா சிக்கியது Posted: 04 Jul 2015 08:57 AM PDT தெலுங்கானா மாநிலத்தில் வாழைப்பழம் ஏற்றிச் சென்ற லாரிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். இங்குள்ள கம்மம்-வாராங்கல் நெடுஞ்சாலையில் உள்ள தோரூர் பகுதியில் இன்று போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் |
| ஒரே பைக்கில் 4 பேர் பயணம்: கார் மோதி அனைவரும் பலியான சோகம் Posted: 04 Jul 2015 07:53 AM PDT குஜராத்தின் ராஜ்கோட் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். ராஜ்கோட்டைச் சேர்ந்த மனோஷ் கோஷியா (28) என்பவர் நேற்று இரவு தன் மனைவி ரித்தி(25), 3 மாத கைக்குழந்தை வீரா மற்றும் மருமகள் அன்ஷு (13) ஆகியோருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். |
| உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை: சர்தாம் யாத்திரை பகுதிகள் கண்காணிப்பு Posted: 04 Jul 2015 06:45 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்தாம் யாத்திரை செல்லும் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருப்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை முதல் இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கன பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரி கர்வால், |
| வலதுசாரி தீவிரவாதிகளால் பிரதமர் உயிருக்கு ஆபத்தா?: உள்துறை அமைச்சகம் விளக்கம் Posted: 04 Jul 2015 06:44 AM PDT வடகிழக்கு மாநிலங்களில் அட்டூழியம் செய்துவரும் வலதுசாரிகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து காத்திருப்பதாக சமீபத்தில் வெளியான செய்திகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிரை குறிவைத்து வலதுசாரி தீவிரவாதிகள் சதி |
| முதலில் இந்தியனாக இருங்கள் - பிறகு இங்கிலீஷில் பேசலாம்: ராஜ்நாத் சிங் அறிவுரை Posted: 04 Jul 2015 06:29 AM PDT டெல்லியின் அருகாமையில் இருக்கும் நொய்டா நகரில் இன்று நடைபெற்ற பள்ளி விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என பலரும் கருதுகின்றனர். அது சரியல்ல, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆனால், ஆங்கிலேயராகவே மாறிவிட நினைக்க கூடாது. அதற்காக |
| தங்கப்பதக்கம் வென்ற தேசிய குத்துச்சண்டை வீரர் தெருப்பெருக்கும் தொழிலாளியாக மாறிய அவலம் Posted: 04 Jul 2015 06:28 AM PDT தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ணா ரவுட், ஹவுரா நகராட்சியில் நிரந்தர பணிக்காக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விண்ணப்பிக்க இருக்கிறார். தற்போது 43 வயதாகும், இந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் கடந்த 15 வருடங்களாக ஹவுரா நகராட்சியில் வேலை செய்து வருகிறார். ஆரம்பத்தில் தினக்கூலி அடிப்படையில் தெருக்களை பெருக்கி சுத்தம் |
| சுஷ்மா, லலித் மோடி, வசுந்த ராஜே சிந்தியா மீது கோர்ட்டில் புகார் பதிவு Posted: 04 Jul 2015 06:24 AM PDT இந்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக அன்றாடம் புதுப்புது குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பு கிளப்பிவரும் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி மற்றும் அவருக்கு பல வகைகளில் உதவி செய்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி வசுந்த ராஜே சிந்தியா ஆகியோர் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என |
| நிபந்தனையுடன் சரணடைய முன்வந்ததால் தாவூத் இப்ராகிமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது: சரத் பவார் பேட்டி Posted: 04 Jul 2015 05:21 AM PDT 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளி சோட்டா ஷகில் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் ரகசிய இடத்தில் அவன் தங்கியிருப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டி |
| சரக்கு ரெயில் மீது லாரி மோதி 2 பேர் பலி: ரெயிலும் தடம்புரண்டது Posted: 04 Jul 2015 05:16 AM PDT மேற்கு வங்காளத்தில் சரக்கு லாரி மீது ரெயில் மோதியதில் 2 பேர் பலியாகினர். இவ்விபத்தில் ரெயிலும் தடம்புரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்கிழக்கு ரெயில்வே பகுதிக்குட்பட்ட ஆத்ரா டிவிஷனில் இன்று காலையில் சரக்கு ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காந்தாடி-தாம்னா ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் உள்ள லெவல் கிராசிங்கை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |