Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நாகலாந்தில் ராணுவ துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 16 Jul 2015 11:00 PM PDT

நாகலாந்து மாநிலத்தில் பெக் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை வேட்டையாடும் பணியில் ராணுவத்தின் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவான்கு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கமாண்டோ

வை–பை பயன்படுத்தி இனி இலவசமாக பேச முடியாது: கட்டணம் வசூலிக்க பரிந்துரை

Posted: 16 Jul 2015 10:47 PM PDT

இணையத்தள பயன்பாடு நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டில் எந்த ஒரு வெப்சைட்டுக்கும் அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது இணையத்தள சமநிலையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகியவற்றை பயன்படுத்தி போனில் பேசுவதற்கு கட்டணம்

முதல் அமெரிக்க அதிபராக சிறைக்கு சென்ற பராக் ஒபாமா

Posted: 16 Jul 2015 10:32 PM PDT

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒபாமா இன்று சிறை சென்றார். உலக சிறை கைதிகளில் நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் சிறை கைதிகளின் அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, சீர்திருத்தம் செய்யும் நோக்கில்

கோதாவரி புஷ்கரம் விழாவால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது: 2 மணி நேரத்தில் தரிசனம்

Posted: 16 Jul 2015 10:29 PM PDT

ஆந்திரா, தெலுங்கானாவில் கோதாவரி புஷ்கரம் விழா கடந்த 14–ந் தேதி தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான சோகம் நிகழ்ந்த போதிலும் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. பத்ராச்சலம் உள்பட 4 முக்கிய கோவில்கள் நிறைந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கோதாவரியில் சந்திரபாபுநாயுடு குளிப்பதை சினிமா படம் எடுத்ததால் நெரிசல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 16 Jul 2015 10:21 PM PDT

ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடந்த கோதாவரி புஷ்கரம் விழாவில் நெரிசலில் சிக்கி 29 பக்தர்கள் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் ஆற்றில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்ததாக விசாரணை நடத்திய கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டர் அருண்குமார் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

கேரளாவில் தங்கம் கடத்தலுக்கு துணை புரிந்த விமான நிலைய ஊழியர் கைது

Posted: 16 Jul 2015 09:23 PM PDT

கேரள மாநிலம் கொச்சி நெடும்பாச்சேரியில் உள்ள சர்வதேச விமான நிலையம் வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தப்படுகிறது. இக்கடத்தலுக்கு விமான நிலைய ஊழியர்கள் துணை புரிவதாக

ரூ.206 கோடி ஊழல் புகார்: மந்திரி பங்கஜா முண்டேக்கு மும்பை ஐகோர்ட்டு நோட்டீசு

Posted: 16 Jul 2015 08:01 PM PDT

அங்கன்வாடி குழந்தைகளுக்கான கடலைமிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே ரூ.206 கோடி ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது. மேலும், பழங்குடியின மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட கடலை மிட்டாயில் களிமண் கலக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இந்த

மேல்-சபையை முடக்கிய விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

Posted: 16 Jul 2015 07:45 PM PDT

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் முதல் மேல்-சபையின் அலுவல் பணிகளை நடக்க விடாமல், விவசாய கடன் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் முடக்கி வருகிறார்கள். இதற்கு பா.ஜனதா

மோடியால் கங்கைத் தாய் ஏமாற்றமடைந்து விட்டார்: லல்லு பிரசாத்தின் நக்கல் ட்வீட்

Posted: 16 Jul 2015 05:06 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி செல்வதாக இருந்தது. பலத்த மழை காரணமாக அன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் மோடி இன்று ஜம்மு வருகை: 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்களுக்கான அறிவிப்புகள் எதிர்பார்ப்பு

Posted: 16 Jul 2015 04:46 PM PDT

இன்று ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி அறிக்கை

Posted: 16 Jul 2015 03:27 PM PDT

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையில், சில தனிநபர்களுக்கு பி.சி.சி.ஐ. நடவடிக்கைகளில்

ஆம் ஆத்மி அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம்

Posted: 16 Jul 2015 02:20 PM PDT

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) மாநில அரசு உயர்த்தியதால், அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.78-ம், டீசல் ரூ.1.83-ம் உயர்ந்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பை சரிபார்க்க குழு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 16 Jul 2015 01:42 PM PDT

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

கட்டுப்பாடு எதுவும் விதிக்கக் கூடாது: இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதி

Posted: 16 Jul 2015 01:07 PM PDT

இணையதளங்களில், நாம் பல்வேறு நிறுவனங்களின் இணைய பக்கங்களையும் ஒரே முன்னுரிமையுடன் பார்த்து வருகிறோம். இதற்காக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மொத்தமாக கட்டணம் செலுத்தினால் போதும்.

கேரள மந்திரியுடன் போலீஸ் அதிகாரி சந்திப்பு: கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்

Posted: 16 Jul 2015 12:24 PM PDT

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கலந்து கொண்டார். அவர் வருகையின்போது, அங்கு இருக்கையில் இருந்த ஆயுதப்படை போலீஸ் டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் எழுந்து மந்திரியை வரவேற்காமல் அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது

ஆம்.. கடற்கரையில் முதலை இருக்கிறது: வதந்தியை உறுதி செய்த கோவா வனத்துறை

Posted: 16 Jul 2015 11:10 AM PDT

ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள கடற்கரைகளுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக கோவாவில் உள்ள மோர்ஜிம் கடற்கரைக்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வருகை தருகின்றனர். அவர்கள் இந்த கடற்கரையை 'குட்டி ரஷ்யா' என்றே அழைக்கின்றனர்.

வெறும் கையால் லாரியை தூக்கி ஒரு உயிரை காப்பாறிய இந்திய ராணுவ வீரர்கள் - வீடியோ இணைப்பு

Posted: 16 Jul 2015 08:21 AM PDT

லாரிக்கு அடியில் ஒருவர் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய போது அந்த வழியாக வந்த இந்திய ராணுவ வீரர்கள் சாய்ந்து லாரியை வெறும் கையால் தூக்கி அவரை காப்பாற்றினார்கள். நாகர் - ஷீர்டி இடையிலான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீர் ஒருபக்கமாக சாய்ந்ததில் பான் மசாலா விற்பனையாளர் ஒருவர்

அமைதிதான் எங்கள் இலக்கு: தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Posted: 16 Jul 2015 07:45 AM PDT

அமைதிதான் எங்கள் இலக்கு. ஆனால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மீது தூப்பக்கி சுடு நடத்தி வருகிறது. இந்தியா– பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறும் வகையில் பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ஜம்மு அருகே அக்னூர் செக்டார்

26 நிமிடத்தில் விற்று தீர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட்கள்

Posted: 16 Jul 2015 07:13 AM PDT

கடந்த மே மாதம் ராயல் என்பீல்டு 'கிளாசிக் 500' பைக்கின் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. மேலும் இந்த மாடலில் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. சமீபத்தில் டெல்லியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்நிறுவனத்தின் பிரபலமான 'கிளாசிக் 500' இருசக்கர வாகனத்தின் சிறப்பு பதிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடலில் ஒவ்வொரு நிறத்திலும் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு

மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தை தொடரும் புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள்

Posted: 16 Jul 2015 05:36 AM PDT

போராடினால் இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையும் மீறி புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மகாராஷ்டிர மாநிலம் புனேவில், புகழ்பெற்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையம் உள்ளது. இந்த மையத்தின் ஆட்சிக்குழுவின் தலைவராக நடிகரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான, கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™