Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வியாபம் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றது

Posted: 06 Jul 2015 10:41 PM PDT

மத்திய பிரதேசம் மாநிலத்தை உலுக்கி வரும் வியாபம் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. அந்த மாநிலத்தின் பெரும்பாலான அரசு வேலைக்கு வியாபம் மூலம் தேர்வு நடத்தி ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வில் முறைகேடு

உ.பி.யில் பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீசார்: இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்

Posted: 06 Jul 2015 09:01 PM PDT

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீசார், பின்னர் அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு கும்பல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பொதுக்கூட்ட மேடை சரிந்து மத்திய மந்திரி காயம்

Posted: 06 Jul 2015 08:36 PM PDT

அசாம் மாநிலம் திப்ருகர் நகரில் பா.ஜனதா இளைஞரணி பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், மாநில பா.ஜனதா தலைவர் சித்தார்த்தா பட்டாச்சார்ஜி, பொறுப்பு செயலாளர் மகேந்திர சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறினால் நாட்டில் முதலீடு அதிகரிக்கும்: அருண் ஜெட்லி தகவல்

Posted: 06 Jul 2015 08:22 PM PDT

இந்திய கிராமப்புறங்களில் வாழும் 3-ல் ஒரு குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாகவும், அவர்கள் தினக்கூலியை சார்ந்தே வாழ்க்கை நடத்துவதாகவும் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் கூறப்பட்டு இருந்தது.

வியாபம் ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கோரிக்கையை நிராகரித்த ராஜ்நாத்சிங்

Posted: 06 Jul 2015 08:17 PM PDT

'வியாபம்' ஊழல் மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நிராகரித்தார்.

மூன்று நாளில் மூன்று மரணங்கள்: மத்திய பிரதேச அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது

Posted: 06 Jul 2015 08:11 PM PDT

மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை மற்றும் வேலைக்கு ஆட்கள் தேர்வு போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த ஊழலில் அரசியல் பிரமுகர்கள், தொழில்

தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு

Posted: 06 Jul 2015 07:47 PM PDT

அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது. மறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என

2ஜி ஸ்பெக்ட்ரம் பணப்பரிவர்த்தனை வழக்கு: அமலாக்கத்துறையின் சிறப்பு வக்கீல் கே.கே.வேணுகோபால் நீக்கம்

Posted: 06 Jul 2015 07:37 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முறைகேடாக நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு வக்கீலாக மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்த ஆண்டில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் ஓட்டெடுப்பால் நெருக்கடி: இந்திய பொருளாதாரம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது - தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

Posted: 06 Jul 2015 07:25 PM PDT

கிரீஸ் நாட்டுக்கு பெருமளவில் கடனுதவி அளித்துள்ள ஐரோப்பிய நாடுகள் அந்த கடனை திருப்பி அளிக்காததால் சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ளும்படி வலியுறுத்தின. இந்த சிக்கன நடவடிக்கைகளை ஏற்பதா? வேண்டாமா? என்று நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் கிரீஸ்

காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்: ராணுவ வீரர் சாவு - மக்கள் வெளியேற்றம்

Posted: 06 Jul 2015 07:16 PM PDT

காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதும், இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதில் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

கேரளாவில் மாணவர் அமைப்பு போராட்டத்தில் போலீஸ் தடியடி: எம்.எல்.ஏ. காயம்

Posted: 06 Jul 2015 07:06 PM PDT

கேரள மாநிலத்தில் அரசு பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் அச்சிடுவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பதால் 50 லட்சம் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தேசிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து

தானாக முன்வந்து தெரிவித்தால் வழக்கு இல்லை: ஊழலில் கருப்பு பணம் சேர்த்தவர்கள் சலுகை பெற முடியாது- மத்திய அரசு அறிவிப்பு

Posted: 06 Jul 2015 03:37 PM PDT

தானாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவித்தால் வழக்கு கிடையாது என்ற சலுகை, ஊழல் மூலம் கருப்பு பணம் சேர்த்தவர்களுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, கருப்பு பண ஒழிப்பு மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடந்த 1-ந் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது.

25-வது நாளை எட்டியது புனே பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் போராட்டம்

Posted: 06 Jul 2015 02:22 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டம் 25-வது நாளை எட்டியது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில், புகழ்பெற்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையம்(FTII) உள்ளது. இந்த மையத்தின் ஆட்சிக்குழுவின்

இந்தியாவில் நூடுல்ஸ் விற்பனை 90 சதவீதம் சரிந்தது

Posted: 06 Jul 2015 12:47 PM PDT

இந்தியாவில் மேகி நூடுல்சில் ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி அதன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்த நூடுல்ஸ் விற்பனை 90 சதவீதம் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக விளங்கிய மேகி நூடுல்சில், காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலந்திருப்பது

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: லண்டனில் பதுங்கியுள்ள லலித் மோடி நேரில் ஆஜராக இந்திய அமலாக்கப் பிரிவு திடீர் நோட்டீஸ்

Posted: 06 Jul 2015 09:21 AM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்க பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லண்டனில் உள்ள லலித் மோடிக்கு இந்திய அமலாக்கப்பிரிவு

தொடரும் வியாபம் ஊழல் மரணங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப மம்தா திட்டம்

Posted: 06 Jul 2015 08:46 AM PDT

வியாபம் எனப்படும் மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வு வாரியத்தில் நடைபெற்ற மாபெரும் ஊழல் மற்றும் அந்த ஊழலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்து வருவது தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது புயலை கிளப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

நூடுல்ஸ் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 06 Jul 2015 08:08 AM PDT

மேகாலயாவில் துரித உணவான நூடுல்ஸை சாப்பிட்ட 5 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா மாநிலம் சில்லாங் மாவட்டத்தில் உள்ள லாசோட்டூன் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று மாலை அருகில் இருந்த

மர்ம மரணங்களை தொடர்ந்து வியாபம் ஊழலை அம்பலப்படுத்தியவரின் உயிருக்கும் ஆபத்து

Posted: 06 Jul 2015 07:49 AM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்தும் 'வியாபம்' அமைப்பில் நடைபெற்ற ஊழல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் ஆஷிஷ் சதுர்வேதி(26). இவர் வெளியிட்ட அதிரடி தகவல்களால் தற்போது தேசிய அரசியலில் புயல் உருவாகியுள்ளது.

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 3 குழந்தைகள் பலி

Posted: 06 Jul 2015 07:25 AM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பல் மாவட்டத்தில் உள்ள பஜோய் என்ற இடத்தில் தான் இச்சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அமர் பால், விகாஷ், ஹரிஸ், ஆகிய மூன்று குழந்தைகள் இன்று மழையில் நனைந்தபடியே

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்

Posted: 06 Jul 2015 06:48 AM PDT

மத்தியபிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திக்கம்கர் மாவட்டம் ஓர்ச்சா பகுதியில் வசித்து வந்தவர் ராமாகண்ட் பண்டா(40). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இன்று காலை தனது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™