Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமர்நாத் யாத்திரை: 1,342 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது

Posted: 19 Jul 2015 11:05 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. 59-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும்,

ஆடி மாத பூஜைக்காக நடை திறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Posted: 19 Jul 2015 10:25 PM PDT

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்து அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக விடுமுறை தினம் என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2–ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted: 19 Jul 2015 10:11 PM PDT

டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்திய தொழிலாளர்களின் 46–வது மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, பண்டாரு

காஷ்மீர் எல்லையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி கொடுத்தது

Posted: 19 Jul 2015 09:58 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் காஷ்மீர் சென்றிருந்தபோது பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்தியா கொடுத்த

மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை: 2 வாலிபர்கள் கைது

Posted: 19 Jul 2015 09:48 PM PDT

மராட்டிய மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஜலகான் மாவட்டத்தில் புஷ்வால் ராணுவ குடியிருப்பு உள்ளது. நேற்று இரவு அங்கிருந்து ஷேக்அகில் ரகுமான் என்ற ராணுவ வீரர் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற சென்னை பக்தரிடம் இணையதளத்தில் போலி ரூ.300 டிக்கெட் விற்பனை

Posted: 19 Jul 2015 09:38 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதன்படி பக்தர்கள் எவ்வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யும்

கேரளாவில் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும்: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Posted: 19 Jul 2015 09:26 PM PDT

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை தொடங்கியது. முதலில் மழை தீவிரமாக பெய்தாலும் நாளடைவில் அதன் தீவிரம் குறைந்தது. வழக்கமாக ஜூன் மாதம் 1–ந்தேதி முதல் ஜூலை 15–ந் தேதி வரை 1,033 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 703 மில்லி மீட்டர் மழையே

கோதாவரி புஷ்கரம் விழாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம்

Posted: 19 Jul 2015 09:13 PM PDT

கோதாவரி நதி பாயும் மாநிலங்களில் கோதாவரி புஷ்கரம் விழா நடந்து வருகிறது. இதில் புனித நீராடினால் மகாமகத்தில் புனித நீராடிய சிறப்பை பெறலாம். ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதி பாயும் ராஜமுந்திரி பகுதியில் கடந்த 14–ந் தேதி கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கியது. அன்று காலையில்

இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும்: இந்திய தூதர் தகவல்

Posted: 19 Jul 2015 08:55 PM PDT

ரஷியாவுக்கான இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அண்மையில் இந்தியா-ரஷியா இடையே ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன்

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை

Posted: 19 Jul 2015 08:19 PM PDT

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அகியோரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வரும் நிலையில், அவர்களுடன் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டு தலைவர் கொலையில் புதிய சர்ச்சை

Posted: 19 Jul 2015 08:07 PM PDT

மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவராக செயல்பட்ட கிஷெண்ஜி கடந்த 2011-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அவரை மம்தா பானர்ஜி அரசு கொன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பியும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி ஒரு கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.

காஷ்மீரில் மூத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து விலகல்: சோனியா காந்திக்கு கடிதம்

Posted: 19 Jul 2015 08:02 PM PDT

காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் அப்துல் கனி வாகில் நேற்று விலகினார். தனது விலகல் குறித்து அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மாநில காங்கிரஸ்

ரெயில்வேயில் அதிக முதலீடு செய்தால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்: மந்திரி சுரேஷ் பிரபு பேச்சு

Posted: 19 Jul 2015 08:02 PM PDT

புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கலந்துகொண்டு பேசியதாவது:- நாட்டு பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்களிப்பு முக்கியமானது. ரெயில்வே துறையில் அதிக முதலீடு செய்வது, ரெயில்வே

கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Posted: 19 Jul 2015 07:53 PM PDT

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு கோடைக்காலத்திலும் பலத்த மழை கொட்டியதால், கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. பருமழை தொடங்கிய பிறகும்

அணுஉலைகளுக்கு போதுமான யுரேனியம் கையிருப்பில் உள்ளது: மத்திய அரசு அதிகாரி தகவல்

Posted: 19 Jul 2015 04:48 PM PDT

இந்தியாவில் யுரேனியம் உற்பத்தி இந்த ஆண்டு சாதனை அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் 1,252 டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அணுஉலைகளுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் யுரேனியத்தை விட இரு மடங்கு ஆகும்.

வருமான வரி வரம்புக்குள் மேலும் 1 கோடி பேரை கொண்டுவர திட்டம்: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

Posted: 19 Jul 2015 03:33 PM PDT

வருமான வரி வரம்புக்குள் மேலும் 1 கோடி பேரை புதிதாக கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிரடி நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கி உள்ளது. தற்போது நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி செலுத்துகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதத்துக்கும்

திருப்பதி லட்டு 3 வாரம் வரை கெடாமல் இருக்க புதிய தொழில்நுட்பம்

Posted: 19 Jul 2015 03:08 PM PDT

திருப்பதி லட்டு 3 வாரங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க புதிய தொழில்நுட்பம் பற்றி தேவஸ்தான நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். ஆனால் இந்த லட்டு பிரசாதம் சில

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Posted: 19 Jul 2015 02:46 PM PDT

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக 3 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விஷ்ணு கார்டன் பகுதி இருந்த ஒரு 4 மாடி கட்டிடம் நேற்று இரவு 9 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர்

பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்

Posted: 19 Jul 2015 02:38 PM PDT

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளகட்சியில் இருந்து பீகார்ஷெரீப் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சுனில்குமார் நேற்று விலகி பாரதீய ஜனதா

போலீசார் பற்றி தரக்குறைவாக பேசியதாக கெஜ்ரிவால் மீது கான்ஸ்டபிள் புகார்

Posted: 19 Jul 2015 01:53 PM PDT

டெல்லி போலீசார் பற்றி தரக்குறைவாக பேசியதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் மீது கான்ஸ்டபிள் ஒருவர் புகார் செய்துள்ளார். ஒரு சமீபத்திய பேட்டியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் போலீசார் பற்றி மிகவும் மோசமான தரக்குறைவான வர்த்தையை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™