Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி யாகூப் மேமனுக்கு 30–ந்தேதி தூக்கு: கருணை மனு மீது 21–ந்தேதி விசாரணை

Posted: 14 Jul 2015 10:45 PM PDT

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. நாட்டையே உலுக்கிய முதலாவது பெரிய தீவிரவாத தாக்குதலான இதில் 257 அப்பாவி மக்கள் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர். மதியம் 1.33 மணியில் இருந்து 3.40 மணிவரை அடுத்தடுத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்து மும்பையை அதிர வைத்தது.

நில மோசடி புகார்: சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வதேராவிடம் விசாரணை

Posted: 14 Jul 2015 10:27 PM PDT

அரியானா மாநிலத்தில் 2005 முதல் 2014 வரை பூபிந்தர்சிங் ஹுகடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்த கால கட்டத்தில் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் இருப்பதாக புகார் கூறப்பட்டது. சிஹி, சிக்கந்தர் பூர்படா, சிகோபூர் ஆகிய கிராமங்களில் நிலங்களுக்கு பட்டா வழங்கியதிலும், வீட்டு பயன்பாட்டு உரிமம்,

காஷ்மீர் எல்லையருகே இன்று ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

Posted: 14 Jul 2015 10:15 PM PDT

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக நேற்றிரவு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லை வழியாக காஷ்மீரில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை

சத்தீஸ்கரில் 4 போலீசார் கடத்தி கொலை: மாவோயிஸ்டுகள் அட்டகாசம்

Posted: 14 Jul 2015 10:11 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் ஒருபகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அங்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மத்திய படையுடன் உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை தேடும் போலீஸ்காரர்களுக்கு உதவி செய்ய பிஜப்பூர் மாவட்ட போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஜெய்தேவ் யாதவ், மங்கள்சோடி, ராஜுதேவா, ராமாமஜ்ஜி என்ற 4 போலீஸ்காரர்கள்

காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதம்: ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்ட் சுட்டுக்கொலை

Posted: 14 Jul 2015 09:48 PM PDT

எல்லை வழியாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், உள்ளூர் தீவிரவாதிகளின் கைவரிசையையும் எதிர்கொண்டு வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்ட் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு உள்ளூர் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளதை உணர்த்தும் எச்சரிக்கை

திருப்பதியில் குரங்குகள் கடித்து 4 பக்தர்கள் காயம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Posted: 14 Jul 2015 09:45 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருமலையையொட்டி உள்ள காடுகளில் இருந்து மலைப்பாம்பு, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் சாமி தரிசனம் செய்ய

58 வயதுக்காரரை மணந்த 20 வயது பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

Posted: 14 Jul 2015 08:29 PM PDT

தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே (வயது58). இவர் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தை கேக் வெட்டி

நூடுல்ஸ் ஏற்றுமதி முடிவை மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட்டில் மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மனு

Posted: 14 Jul 2015 08:22 PM PDT

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில் ஒரு வித ரசாயன கலவை இருந்ததற்காக அதன் விற்பனைக்கு நாடு முழுவதும் மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. அதன்படி மராட்டியத்திலும் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டது.

கோதாவரி மகாபுஷ்கர விழா நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

Posted: 14 Jul 2015 07:28 PM PDT

கோதாவரி நதி பாயும் மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாபுஷ்கர விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் சீன செல்போன் உதிரி பாக ஆலை அமைக்க மத்திய அரசு பாதுகாப்பு ஒப்புதல்

Posted: 14 Jul 2015 04:32 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 14-16 தேதிகளில் சீன நாட்டில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் ஏற்ற வகையில் தொழில் தொடங்கும் சூழல் இந்தியாவில் உருவாக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

மராட்டிய மாநிலத்தில் நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது

Posted: 14 Jul 2015 03:38 PM PDT

மும்பை புறநகரை சேர்ந்தவர், 21 வயதான மராத்தி பட நடிகை. இவர் 'லஹன்பான்' என்ற மராத்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது.

நாளை நிதி ஆயோக் கூட்டம் : அகிலேஷ் யாதவ் உட்பட 10-க்கும் மேற்பட்ட முதல்வர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை

Posted: 14 Jul 2015 02:26 PM PDT

திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது நிதி ஆயோக் அமைப்பு. இதன் கவுன்சில் கூட்டம் இன்று பிரதமர் அலுவலக இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா, உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் சரக்கு மற்றும் சேவைகள் வரி, மத்திய மாநில

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி அனுதாபம்

Posted: 14 Jul 2015 01:56 PM PDT

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எஸ் அமிதாப் தாகூர் மீது பாலியல் புகாரளித்த பெண் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்

Posted: 14 Jul 2015 01:35 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரால் மிரட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அமிதாப் தாகூர் மீது பாலியல் புகாரளித்த பெண் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். உத்தரப்பிரதேச சிவில் பாதுகாப்பு பொது ஆய்வாளராக இருந்த அமிதாப்

சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் வீட்டில் சி.பி.ஐ சோதனை

Posted: 14 Jul 2015 01:11 PM PDT

குஜராத் கலவர வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு திரட்டிய நிதியில் மோசடி செய்ததாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை அவரது வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும்: நிதிஷ் குமார்

Posted: 14 Jul 2015 12:31 PM PDT

டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் ஆம் ஆத்மி கட்சியின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தனது ஆதரவை அளித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பங்குச்சந்தை மீதான ஆர்வம் அதிகரிப்பு

Posted: 14 Jul 2015 11:20 AM PDT

உலக அளவில் பங்குச்சந்தைகள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக தொழிற்துறைகளுக்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருவதால் பங்குச்சந்தைகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சூப்பர் கார்களில் இலவசமாக பயணம் செய்ய விருப்பமா? அரிய வாய்ப்பை வழங்குகிறது உபேர்-ட்ரூம் நிறுவனங்கள்

Posted: 14 Jul 2015 09:00 AM PDT

விலைமதிப்பு மிக்க சொகுசு கார்களான ஆடி ஆர்8, ஹம்மர் போன்ற அதிவேக கார்களில் கட்டணமின்றி பயணம் செய்ய (டெல்லிவாசிகளுக்கு மட்டும்) ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ட்ரும் நிறுவனம். இணையதளம் வாயிலாக பழைய வாகனங்களை விற்பனை செய்யும் ட்ரூம் நிறுவனம், வாடகைக் கார் சேவைகளை வழங்கும் பன்னாட்டு நிறுவனமான உபேருடன் சேர்ந்து இந்த அதிரடி திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி அதிவேக சொகுசு கார்களில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற நாளை மதியம் 1 மணியிலிருந்து மாலை 4 மணிவரை உபேர் வாடகை காரை முன்பதிவு செய்ய பயன்படும் உபேர் செயலிக்குள் (ஆப்) செல்ல வேண்டும்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

Posted: 14 Jul 2015 08:55 AM PDT

போலீஸ்காரரிடம் அத்துமீறி நடந்து அவரை கடமையை செய்ய விடாமல் தடுத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், காட்டியா தொகுதி எம்.எல்.ஏ. சதீஷ் மால்வியா, சாமுண்டா சதுக்கத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் லக்கன்லாலிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

28 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சரிந்தது சென்செக்ஸ்

Posted: 14 Jul 2015 08:38 AM PDT

கடந்த இரண்டு வர்த்தக தினங்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 28.29 புள்ளிகள் சரிந்து 27,932.90 புள்ளிகளில் நிலைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™