Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாராளுமன்றத்தில் தூக்கு தண்டனையை ஒழிக்கக்கோரி தனி நபர் மசோதா: கனிமொழி தகவல்

Posted: 30 Jul 2015 10:47 PM PDT

மரண தண்டனை குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நமது நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. என்றாலும், சொந்த குடிமக்களின் உயிரைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற ஏற்கத்தகாத மரண தண்டனைகள் இன்னமும் நிறைவேற்றப்படுவது வேதனை

டாக்டரால் கற்பழிக்கப்பட்டு, 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துவரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் ஒப்புதல்

Posted: 30 Jul 2015 10:33 PM PDT

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற ஒரு டாக்டரிடம் சென்றிருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்த டாக்டர் அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் இங்கு நடந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் தீர்த்துக் கட்டி விடுவேன்

யாகூப் மேமனுக்கு அனைத்து சந்தர்ப்பங்களும் அளிக்கப்பட்டது: ராஜ்நாத்சிங் பேட்டி

Posted: 30 Jul 2015 10:32 PM PDT

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:– நாங்கள் தீவிரவாதத்தை ஒழிப்பதில் சவாலாக எடுத்து செயல்படுகிறோம். இதில் நம்மிடையே கருத்து வேறுபாடு கூடாது, ஒற்றுமையுடன் செயல்பட்டால் தீவிரவாதத்தை தோற்கடித்து நாம் வெற்றி பெற முடியும்.

அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கேரளாவில் போட்டி போட்டு கூடுதல் நேரம் பணிபுரிந்த அரசு ஊழியர்கள்

Posted: 30 Jul 2015 09:34 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் திடீர் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கியது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. 'நான் இறந்தால் எனக்காக அரசு விடுமுறை வழங்கக்கூடாது. என் மீது பாசம் கொண்டவர்கள் அன்று கூடுதல் நேரம் பணியாற்றி தேசத்திற்கு சேவை புரிய

பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது

Posted: 30 Jul 2015 09:13 PM PDT

பாகிஸ்தானில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை பஞ்சாப் மாநில ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பெண் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த சல்மான் கான் என்பவரின் மனைவி என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் அடாரி எல்லை வழியாக வரும் சம்ஜவுதா

பாராளுமன்ற செயலகம் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு ராபர்ட் வதேரா பதில்

Posted: 30 Jul 2015 08:57 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தனது 'பேஸ்புக்' பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், 'பாராளுமன்றம் கூடுகிறது. கீழ்த்தரமான அரசியல் தந்திரங்களில்

பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சபாநாயகர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

Posted: 30 Jul 2015 08:45 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே

அப்துல் கலாம் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம்: அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு

Posted: 30 Jul 2015 08:38 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அசாம் முதல்-மந்திரி தருண் கேகாய் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பீகாரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் நகருக்கு கலாம் பெயர்: மாநில மந்திரி சபையில் முடிவு

Posted: 30 Jul 2015 08:32 PM PDT

பீகார் மாநில மந்திரி சபை நேற்று பாட்னாவில் கூடியது. இதில் மாநில அரசின் 36 வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் அப்துல் கலாமுக்கு பெருமை சேர்க்கும் 2 திட்டங்கள் முக்கிய இடம் பிடித்தன.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ரூ.6½ கோடி செம்மரக்கட்டைகளை கடத்திய 19 தமிழர்கள் கைது

Posted: 30 Jul 2015 07:32 PM PDT

சித்தூர் மாவட்டம் பி.என். கண்டிகை அருகே 28 செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை ஆந்திர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடப்பா அருகே ரூ.6½ கோடி

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆதாயம் அளிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

Posted: 30 Jul 2015 07:08 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவருகிறது.

யாகூப் மேமனை தூக்கிலிட்டதை எதிர்த்து காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. கைது

Posted: 30 Jul 2015 04:51 PM PDT

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் நேற்று தூக்கிலிடப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் காஷ்மீர் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித் நேற்று தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். ஸ்ரீநகர் அருகே உள்ள லால் சவுக் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திய அவர்கள், பின்னர் அங்கிருந்து கண்டன பேரணி

தீவிரவாதிகள் தாக்குதலின் போது பலியான எஸ்.பி பல்ஜித் சிங்கின் மகன் டி.எஸ்.பி ஆக நியமனம்: பஞ்சாப் அரசு

Posted: 30 Jul 2015 03:18 PM PDT

பஞ்சாப் மாநிலம் டினா நகரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் (துப்பறியும் பிரிவு) பல்ஜித் சிங் கொல்லப்பட்டார். தனது, தந்தையின் மறைவைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த பல்ஜித் சிங் முதலில் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் சூப்பிரண்டாக ஆனார். அவருடைய தந்தை ஆச்சார் சிங் பஞ்சாப் போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய

நதிகளை இணைக்க கோரிக்கை: தமிழக விவசாயிகள் டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு

Posted: 30 Jul 2015 02:10 PM PDT

நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 29-ந் தேதி டெல்லி வந்தனர். இவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஊர்வலமாக வந்து தங்கள் சட்டைகளை கழற்றி சாலையின் நடுவில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை போலீசார் இவர்களை மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, உமாபாரதி வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

யாகூப் மேமனின் கடைசி ஆசை

Posted: 30 Jul 2015 01:34 PM PDT

இந்தியாவில் குற்றவாளி தூக்கிலிடப்படும் முன் அவரது கடைசி ஆசையை நிறைவேற்றுவது வழக்கம். இந்த வகையில் ஜெயில் அதிகாரிகள் யாகூப் மேமனை தூக்கிலிடும் முன் அவரது கடைசி ஆசையை கேட்டனர். அதற்கு அவர், '''என் மகளை சந்திக்க விரும்புகிறேன்'' என்றார். இதையடுத்து யாகூப் மேமன் அவரது 21 வயது மகள் சுபேதாவுடன் செல்போனில் பேச ஜெயில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும், நாளை (அதாவது இன்று) யாகூப் மேமனின் மகளுக்கு 22-வது பிறந்தநாள்.

இந்தியா-வங்கதேசம் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க எல்லை ஒப்பந்தம்: இன்று கையெழுத்தாகிறது

Posted: 30 Jul 2015 12:59 PM PDT

இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. முன்னதாக, கடந்த 1974-ம் ஆண்டு, இந்தியா வங்கதேசம் இடையே எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகள் இந்தியாவிற்குள்ளும் உள்ளன. இவற்றை சீரமைத்து நிரந்தரமாக வரையறை செய்து எல்லைப்பகுதியை நிர்ணயிக்கும் நடைமுறை இதுவரை கையெழுத்தாகவில்லை.

புனே திரைப்பட கல்லூரி தலைவர் நியமனத்தை எதிர்த்து 50 நாட்களாக போராடும் மாணவர்கள்: நாளை ராகுல் சந்திக்கிறார்

Posted: 30 Jul 2015 10:45 AM PDT

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 50 நாட்களாக மாணவர்கள் பல்வேறு விதமாக தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

Posted: 30 Jul 2015 10:15 AM PDT

மத்திய அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, டெல்லியில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துரைத்ததாக அங்குள்ள வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இது ஒரு

கவிஞர் அப்துல் கலாம் எழுதிய இந்த பாடலைக் கேட்டு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்: வீடியோ இணைப்பு

Posted: 30 Jul 2015 10:03 AM PDT

"அமைதியையும் அன்பையும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரப்புவோம். ஓ.. எல்லாம் வல்ல இறைவனே! இதுதான் என் பிரார்த்தனை." இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் இன்று ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட, இதுவரை இந்த நாடு கண்டிடாத குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இந்த நாளில் அவரால் எழுதப்பட்டு, பிரபல பின்னணி பாடகி உஷா உதூப்பால் பாடப்பட்ட இந்த பாடலைக் கேட்டு அண்ணல் அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

பஞ்சாப் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல: பாக்.விளக்கம்

Posted: 30 Jul 2015 08:11 AM PDT

பஞ்சாபின் குர்தாஸ்பூர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™