Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


யாகூப் இறுதிச்சடங்கில் தீவிரவாதிகள் பங்கேற்றனர்: திரிபுரா கவர்னர் தகவல்

Posted: 31 Jul 2015 10:06 PM PDT

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டான். அன்று இரவு மும்பையில் இறுதிச்சடங்கு நடந்தது. யாகூப் மேமன் இறுதிச்சடங்கில் தீவிரவாதிகள் பங்கேற்றதாக திரிபுரா கவர்னர் ததகட்டராய் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரை: 418 பேர் கொண்ட குழு புறப்பட்டு சென்றது

Posted: 31 Jul 2015 10:05 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 418 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத்

ஆலப்புழா அருகே நடு ஆற்றில் படகு மூழ்கியது: 53 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

Posted: 31 Jul 2015 09:59 PM PDT

கேரள மாநிலம் ஆலப்புழா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு அஷ்டமுடிகாயல், குன்னமடைகாயல் போன்றவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்வதாக உள்ளது. இந்த காயல்களில் படகு மூலம் சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை

கேரள மந்திரி வீட்டில் புகுந்த 15 அடி நீள ராட்சத மலை பாம்பு

Posted: 31 Jul 2015 09:37 PM PDT

கேரள மந்திரி ஜோசப்பின் வீடு தொடுபுழாவில் உள்ளது. இந்த வீட்டு அருகே அவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டமும் உள்ளது. மேலும் இது வனப்பகுதியை ஒட்டிய இடம் என்பதால் இந்த தோட்டங்களில் அடிக்கடி பெரிய மலைப்பாம்புகள் புகுந்துவிடுவது வாடிக்கை. நேற்று இந்த ரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 15 அடி நீளம் உள்ள ஒரு

சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 25 வார கரு கலைக்கப்பட்டது

Posted: 31 Jul 2015 09:31 PM PDT

இந்திய நீதித்துறை சார்ந்த மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் கற்பழிக்கப்பட்டதால் கருத்தரித்த 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்திருந்த 25 வார கரு நேற்று சட்ட அனுமதியுடன், பாதுகாப்பான முறையில் கலைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால்

மானியமில்லா சமையல் எரிவாயு விலை ரூ.23.50 குறைப்பு: ரூ.585-க்கு கிடைக்கும்

Posted: 31 Jul 2015 08:37 PM PDT

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 23 ரூபாய் 50 காசுகள் வரை விலை குறைப்பு செய்து எரிவாயு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு

சசிபெருமாள் மரணத்தில் சந்தேகங்கள்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted: 31 Jul 2015 08:20 PM PDT

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த பல ஆண்டுகளாக மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை

ரூ.25,500 கோடி கூடுதல் செலவினங்கள்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை கேட்கிறது, மத்திய அரசு

Posted: 31 Jul 2015 07:59 PM PDT

பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், ரூ.17 லட்சத்து 77 ஆயிரம் கோடி செலவினங்கள் காட்டப்பட்டு இருந்தது. மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று துணை

ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் கடும் தாக்கு: அரசு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதாக புகார்

Posted: 31 Jul 2015 05:11 PM PDT

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள இந்திய திரைப்பட, டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் தலைவர் பொறுப்பில் இருந்து டி.வி. நடிகர் கஜிந்தர் சவுகானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களது போராட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், கொள்கை வகுக்கும் இடத்தில் உள்ள அதன் சிந்தனையாளர்களும் கல்வி நிறுவனங்களின் அந்தஸ்தை

ரெயில் பயணத்தில் அவசர மருத்துவ உதவிக்கு 138

Posted: 31 Jul 2015 02:35 PM PDT

ரெயில் பயணத்தின் போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் பயணிகள் தங்கள் மொபைல் போனிலிருந்து 138 என்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைக்கலாம் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நேற்று, எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மாநில ரெயில்வே அமைச்சர் மனோஜ் சின்கா,

நதிகளை இணைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம் நோக்கி சென்ற தமிழக விவசாயிகள் கைது

Posted: 31 Jul 2015 02:15 PM PDT

நதிகளை இணைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம் நோக்கி சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை செல்லும் ரெயிலில் ஏற்றி விடப்பட்டனர். நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 29-ந்தேதி டெல்லி வந்தனர்.

காஷ்மீர் சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Posted: 31 Jul 2015 11:58 AM PDT

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா-ஸ்ரீ நகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிகளுக்காக உள்ள சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்றிரவு 9.15 மணியளவில் தவேரா காரில் வந்த சிலரை, சோதனை செய்வதற்காக சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் காரை நிறுத்துமாறு சிக்னல் செய்துள்ளனர். அப்போது காருக்குள் மறைந்திருந்த 2 தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் 3 போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Posted: 31 Jul 2015 11:22 AM PDT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.43 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.60 காசுகளும் குறைத்துள்ளன.

உ.பி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கலாம் பெயர்: முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

Posted: 31 Jul 2015 10:32 AM PDT

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், உ.பி. தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பெயர், 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம்' என மாற்றப்படும் என்று மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் அப்துல் கலாம் நினைவாக மிகப்பெரிய அளவில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும்

கிலோ 50 ரூபாயைத் தொட்டது: மலிவு விலை வெங்காய கடைகளைத் திறக்க டெல்லி அரசுக்கு மத்திய அரசு யோசனை

Posted: 31 Jul 2015 09:01 AM PDT

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கிலோ 40 ரூபாயைத தாண்டிய வெங்காயத்தின் விலை தற்போது மேலும் அதிகரித்து 50 ரூபாயை எட்டியுள்ளது. மேலும் உயரும் அபாயம் உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் விரைவில் பீகார் பயணம்

Posted: 31 Jul 2015 08:22 AM PDT

பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி விரைவில் பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

எழுச்சி பெற்ற இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் ஒரே நாளில் 409 புள்ளிகள் உயர்வு

Posted: 31 Jul 2015 08:22 AM PDT

புதிய மூலதனத் திட்டங்கள் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து இன்று இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் விறுவிறுவென உயர்ந்தன.

ஒடிசாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

Posted: 31 Jul 2015 07:31 AM PDT

ஒடிசாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒடிசாவின் மல்கன்கிரி- சத்தீஷ்கர் எல்லைப்பகுதியில் உள்ள தாண்டிகி

அப்சல் குருவின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: தேசிய மாநாட்டு கட்சி

Posted: 31 Jul 2015 07:05 AM PDT

யாகூப் மேமனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததை போல அப்சல் குருவின் உடலையும் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. 2001-ம் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த ராணுவ வீரர்

Posted: 31 Jul 2015 06:26 AM PDT

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாய்க் கோகுல குமார். இவர் காஷ்மீரில் உள்ள ஷாதா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™