மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே திடீர் போராட்டம்
- இன்று காலை 11 மணிக்கு வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேசுகிறார்
- விஜய் திவாஸ்: கார்கில் போரில் உயிர் நீத்த 490 வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
- அப்பாவி யாகூப்பை கொல்வதற்கு பதிலாக டைகர் மேமனை தூக்கிலிட வேண்டும்: சல்மான் கான் ஆவேசம்
- பாராளுமன்ற கேண்டீன்களில் விலையை உயர்த்தும் உத்தேசமில்லை: அதிகாரி திட்டவட்டம்
- பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் விடுத்த 7 கேள்விகள்
- தெலுங்கானாவில் 15 ஆயிரம் புதிய அரசுப் பணியாளர்களை நியமிக்க சந்திரசேகர் ராவ் உத்தரவு
- சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை: பி.வி.ஆச்சார்யா ஆஜராகிறார்
- போலீசாரை அவமரியாதையாக விமர்சித்த கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டார்
- பாராளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச அனுமதிக்கக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: தேவேகவுடா
- யாகூப் மேமன் கருணை மனு: மராட்டிய கவர்னர் முக்கிய ஆலோசனை
- மருத்துவ நுழைவுத்தேர்வில் கெடுபிடி: சிலுவை, முக்காடை அகற்றாததால் கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு
- காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு: ஒருவர் பலி - ராணுவ வீரர் உள்பட 6 பேர் காயம்
- வேறு பிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சதானந்த கவுடா
- விவசாயிகள் தற்கொலைக்கு முந்தைய ஆட்சியிலும் காதலை காரணமாக கூறினர்: அருண் ஜெட்லி
- சிறையில் கைதிகளை சந்தித்து ஆவணப்படம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
- பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை வருகை?
- மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை: வெங்கையா நாயுடு
- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நிச்சயமாக கிடைக்கும்: சந்திரபாபு நாயுடு
- இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு
| முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே திடீர் போராட்டம் Posted: 25 Jul 2015 10:41 PM PDT நாடு முழுவதும் 30 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களும் மறைந்த போர் வீரர்களின் விதவைகளும் உள்ளனர். இவர்களுக்கு சீரான முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பதவிக்கு ஒரு பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் மோடி 2014–ல் தனது தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். |
| இன்று காலை 11 மணிக்கு வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேசுகிறார் Posted: 25 Jul 2015 10:21 PM PDT மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் வானொலி மூலமாக 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். இம்மாத மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பேகிறார். இந்த நிகழ்ச்சியை அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மற்றும் சில தனியார் பண்பலை வரிசை வானொலி நிலையங்கள் நேரடியாக ஒலிபரப்பும். |
| விஜய் திவாஸ்: கார்கில் போரில் உயிர் நீத்த 490 வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி Posted: 25 Jul 2015 10:09 PM PDT அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999-ம் ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் உள்பட 490 பேர் வீர மரணம் அடைந்தனர். |
| அப்பாவி யாகூப்பை கொல்வதற்கு பதிலாக டைகர் மேமனை தூக்கிலிட வேண்டும்: சல்மான் கான் ஆவேசம் Posted: 25 Jul 2015 09:48 PM PDT தூக்கு கயிற்றை முத்தமிட காத்திருக்கும் யாகூப் மேமனுக்கு ஆதரவாக இன்று குரல் எழுப்பியுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் அப்பாவி யாகூப் மேமனுக்கு பதிலாக மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்து, அப்பாவி மக்களை கொன்றுகுவித்து, தப்பியோடிய குள்ளநரி டைகர் மேமனை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். |
| பாராளுமன்ற கேண்டீன்களில் விலையை உயர்த்தும் உத்தேசமில்லை: அதிகாரி திட்டவட்டம் Posted: 25 Jul 2015 09:24 PM PDT மிகவும் மலிவான விலையில் எம்.பி.க்களுக்கு அறுசுவை விருந்து படைத்துவரும் பாராளுமன்ற கேண்டீன்களில் உணவு வகைகளின் விலையை உயர்த்தும் உத்தேசம் ஏதுமில்லை என பாராளுமன்ற உணவு மேலாண்மை குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். |
| பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் விடுத்த 7 கேள்விகள் Posted: 25 Jul 2015 08:55 PM PDT பிரதமர் மோடி நேற்று பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் டுவிட்டர் மூலம் அவருக்கு 7 கேள்விகளை விடுத்தார். அவை வருமாறு:- |
| தெலுங்கானாவில் 15 ஆயிரம் புதிய அரசுப் பணியாளர்களை நியமிக்க சந்திரசேகர் ராவ் உத்தரவு Posted: 25 Jul 2015 08:44 PM PDT ஆந்திராவில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநில அரசின் 15 துறைகளில் காலியாக உள்ள சுமார் 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் புதிதாக ஆட்களை நியமிக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 25 Jul 2015 08:39 PM PDT தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, |
| போலீசாரை அவமரியாதையாக விமர்சித்த கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டார் Posted: 25 Jul 2015 08:33 PM PDT போலீஸ்காரர்களை அவமரியாதையாக குறிப்பிட்டு விமர்சித்தமைக்காக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தனியார் |
| Posted: 25 Jul 2015 08:22 PM PDT பெங்களூருவில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகள் தற்கொலை குறித்தும், விவசாயிகளின் பிரச்சினைகள் |
| யாகூப் மேமன் கருணை மனு: மராட்டிய கவர்னர் முக்கிய ஆலோசனை Posted: 25 Jul 2015 07:55 PM PDT 22 ஆண்டுகளுக்கு முன், மும்பையில் ஒரே நாளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நடத்தி, 257 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொன்று குவித்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு (வயது 53), மும்பை தடா கோர்ட்டு மரண தண்டனை |
| மருத்துவ நுழைவுத்தேர்வில் கெடுபிடி: சிலுவை, முக்காடை அகற்றாததால் கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு Posted: 25 Jul 2015 07:42 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி சகோதரி சைபா என்பவர் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக அங்குள்ள ஜவஹர் மத்திய பள்ளிக்கு வந்தார். பள்ளியின் முதல்வர் மத்திய கல்வி வாரியத்தின் வழிகாட்டு முறைகளை அவரிடம் எடுத்துக்கூறி, முக்காடையும், அவர் அணிந்திருந்த சிலுவையையும் அகற்றும்படி |
| காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு: ஒருவர் பலி - ராணுவ வீரர் உள்பட 6 பேர் காயம் Posted: 25 Jul 2015 07:34 PM PDT காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்துக்கு உட்பட்ட அச்சாபல் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பி ஓடினர். |
| வேறு பிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சதானந்த கவுடா Posted: 25 Jul 2015 02:51 PM PDT வேறு பிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குவதாக மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா குற்றம்சாட்டி உள்ளார். சதனாந்த கவுடா நேற்று பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது |
| விவசாயிகள் தற்கொலைக்கு முந்தைய ஆட்சியிலும் காதலை காரணமாக கூறினர்: அருண் ஜெட்லி Posted: 25 Jul 2015 02:09 PM PDT மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் நேற்றுமுன்தினம் டெல்லி மேல்-சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதில் அளித்தார். அப்போது, 'விவசாயிகளின் தற்கொலைக்கு காதல் விவகாரம், வரதட்சணை, ஆண்மைக்குறைவு, குடும்ப பிரச்சினைகள், வியாதி, போதை பழக்கம், |
| சிறையில் கைதிகளை சந்தித்து ஆவணப்படம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை Posted: 25 Jul 2015 01:35 PM PDT டெல்லியில் நிர்பயா என்ற பெண், இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கொடும் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை |
| பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை வருகை? Posted: 25 Jul 2015 12:35 PM PDT இந்திய பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து 2-வது ஆண்டு தொடங்கியுள்ளது. ஆனாலும், இதுவரை அவர் அலுவல் ரீதியாக தமிழ்நாடு வரவில்லை. மற்ற இடங்களுக்கு செல்வதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். |
| மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை: வெங்கையா நாயுடு Posted: 25 Jul 2015 10:52 AM PDT பிரதமர் நரேந்திர மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாததால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருவதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியவை பின்வருமாறு:- |
| ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நிச்சயமாக கிடைக்கும்: சந்திரபாபு நாயுடு Posted: 25 Jul 2015 10:12 AM PDT ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தர அம்மாநில அரசு பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். |
| இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு Posted: 25 Jul 2015 09:27 AM PDT டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்திச் செல்ல முயன்ற 21 நேபாள பெண்களை போலீசார் இன்று அதிரடியாக மீட்டனர். மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அங்குள்ள மஹிபால்பூர் என்ற |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |