மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ: செவிக்குணவாய் கிட்டார் இசை- ஆட்டோ ஓட்டுனரின் இரட்டை முக வீடியோ
- ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல்
- சந்திரபாபு நாயுடுவுடன் மோதியதால் ஆந்திரா கவர்னர் நரசிம்மன் வேறு மாநிலத்துக்கு மாற்றம்? மத்திய அரசு முடிவு
- பாராளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு - கூச்சல், குழப்பத்தால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு
- அமர்நாத் யாத்திரை: 1,050 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேரும் இந்திய இளைஞர்கள்: 10 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை
- கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த மலையாள நடிகை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்
- குள்ள மனிதர்களுக்கு ரூ.800 உதவித்தொகை அளிக்கும் உத்தரகாண்ட் அரசு
- ராஜஸ்தானில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா நிலமோசடிக்கு உதவியவர் கைது
- அமெரிக்காவைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் சிங்கப்பூர் செல்கிறார்: நவீன நகரங்களை உருவாக்க ஒப்பந்தம்
- பாலக்காடு அருகே தோழிகளுடன் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–1 மாணவி சாவு: காரணம் தெரியாமல் போலீசார் திணறல்
- கேரளாவில் 120 நாட்களில் 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: போலீசாரின் ஆய்வறிக்கையில் தகவல்
- அசாமில் கொடூரம்: சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்
- கோவா முந்தைய காங்கிரஸ் அரசுக்கு அமெரிக்க நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை: பா.ஜனதா கோரிக்கை
- இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த இரு கடற்படை வீரர்கள் கைது
- மும்பை தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளி யாகூப் மேமனுக்கு 30-ந்தேதி நாக்பூர் சிறையில் தூக்கு?
- மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
- பாஸ்போர்ட் புதுப்பிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: சி.பி.ஐ. வலையில் சிக்கிய அதிகாரி
- கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பெங்களூரு முதலிடம்
- தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு உத்தரவு
| வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ: செவிக்குணவாய் கிட்டார் இசை- ஆட்டோ ஓட்டுனரின் இரட்டை முக வீடியோ Posted: 20 Jul 2015 11:50 PM PDT மும்பை வாலிபர் ஒருவர் கிட்டார் வகுப்புக்கு சென்று திரும்பும்போது, ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு கிளம்பினார். கையில் கிட்டாருடன் ஆட்டோவில் ஏறியவரிடம், ஓட்டுனர் கிட்டார்களைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே வந்தார். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிட்டாரின் மீது இருந்த ஆர்வத்தைப் பார்த்து வாலிபர் மெய்சிலிர்த்துப் போனார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் தானும் |
| ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் Posted: 20 Jul 2015 11:45 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் தண்டனை |
| Posted: 20 Jul 2015 11:22 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது கவர்னர் பொறுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த நரசிம்மன் இருந்தார். ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொதுவான தலைநகரமாக ஐதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. |
| பாராளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு - கூச்சல், குழப்பத்தால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு Posted: 20 Jul 2015 11:16 PM PDT இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடாரில் இன்று சரவெடி தெறிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இறந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் முடிவடைந்த இன்றைய மக்களவை கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூட்டத்தின்போது ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கி இங்கிலாந்தில் வசித்துவரும் லலித் மோடிக்கு விசா கிடைக்க |
| அமர்நாத் யாத்திரை: 1,050 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 20 Jul 2015 10:57 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. 59-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், |
| ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேரும் இந்திய இளைஞர்கள்: 10 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை Posted: 20 Jul 2015 10:56 PM PDT ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அமைப்பு செயல்படுகிறது. இவர்கள் ஈராக்கிலும், சிரியாவிலும் சில பகுதிகளை பிடித்து கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு தனிநாடாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். |
| கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த மலையாள நடிகை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் Posted: 20 Jul 2015 10:56 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மகள் ஷில்பா (வயது 19). பிளஸ்–2 முடித்துள்ள ஷில்பா பிரபல மலையாள டைரக்டர் பாலசந்திரமேனன் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. |
| குள்ள மனிதர்களுக்கு ரூ.800 உதவித்தொகை அளிக்கும் உத்தரகாண்ட் அரசு Posted: 20 Jul 2015 09:58 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் 4 அடி உயரத்துக்கும் குறைவான குள்ள மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். உயரம் குறைவாக இருப்பதால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் சரிவர வேலை செய்ய முடிவதில்லை. இதனால் வேலை கிடைக்காமல் குடும்பம் நடத்த கஷ்டப்படுகிறார்கள். |
| ராஜஸ்தானில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா நிலமோசடிக்கு உதவியவர் கைது Posted: 20 Jul 2015 09:57 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் அரசு நிலங்களை வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி |
| Posted: 20 Jul 2015 09:41 PM PDT பிரதமர் மோடி பதவி ஏற்ற ஓராண்டில் 20–க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டிலும், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார். |
| பாலக்காடு அருகே தோழிகளுடன் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–1 மாணவி சாவு: காரணம் தெரியாமல் போலீசார் திணறல் Posted: 20 Jul 2015 09:26 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 பெண்கள் ரெயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே 2 பெண்கள் இறந்து விட்டனர். ஒருவர் |
| கேரளாவில் 120 நாட்களில் 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: போலீசாரின் ஆய்வறிக்கையில் தகவல் Posted: 20 Jul 2015 08:49 PM PDT கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015–ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 120 நாட்களில் இங்கு 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. இது பற்றி கேரள போலீசாரின் |
| அசாமில் கொடூரம்: சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கிராம மக்கள் Posted: 20 Jul 2015 08:41 PM PDT மூடநம்பிக்கைக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கும் பெயர்போன அசாம் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 60 வயது பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 20 Jul 2015 08:22 PM PDT கோவா மாநிலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டத்தை புதுப்பிக்கும் பணிகளை ஜப்பான் நிதியுதவியுடன் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள லூயிஸ் பெர்கெர் என்ற கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. இந்த பணிகள் 2009-ம் ஆண்டு முதல்-மந்திரி திகம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் அரசு இருந்தபோது நடந்தது. |
| இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த இரு கடற்படை வீரர்கள் கைது Posted: 20 Jul 2015 08:17 PM PDT பழைய காதலை நிச்சயிக்கப்பட்டுள்ள புது மாப்பிள்ளையிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மைனர் பருவத்தை தாண்டாத இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த இரு கடற்படை வீரர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். |
| மும்பை தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளி யாகூப் மேமனுக்கு 30-ந்தேதி நாக்பூர் சிறையில் தூக்கு? Posted: 20 Jul 2015 08:06 PM PDT 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பை நகரில் 13 இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய |
| மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் Posted: 20 Jul 2015 07:58 PM PDT பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்தபோது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய |
| பாஸ்போர்ட் புதுப்பிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: சி.பி.ஐ. வலையில் சிக்கிய அதிகாரி Posted: 20 Jul 2015 07:53 PM PDT கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்த நபரிடம் 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொச்சியை சேர்ந்த அந்த நபர் இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் |
| கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பெங்களூரு முதலிடம் Posted: 20 Jul 2015 07:43 PM PDT கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தொடர் மழையும் ஒரு காரணம் ஆகும். மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் (ஜூலை) இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 6 |
| தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு உத்தரவு Posted: 20 Jul 2015 07:31 PM PDT உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அமேதி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |