Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மேலும் ஒரு சாவு: வியாபம் முறைகேடு தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் பயிற்சி உதவி ஆய்வாளர் தற்கொலை

Posted: 05 Jul 2015 11:30 PM PDT

மத்திய பிரதேசத்தின் வியாபம் முறைகேடு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், இந்த வழக்கில் ஆஸ்பத்திரி டீன், பத்திரிகையாளர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சிறுவனை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்

Posted: 05 Jul 2015 11:12 PM PDT

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்த சிறுவனை இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லாஸ்வா அத்முகம் பகுதியை சேர்ந்த முகமத் ராபிக் என்பவரது 11 வயது மகன் சமீர் கயானி தவறுதலாக,

மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்: பிரதமர் மோடி முடிவு

Posted: 05 Jul 2015 11:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு பதவி ஏற்றபோது முதலில் அதில் 45 பேர் இடம் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மந்திரி சபையை பிரதமர் மோடி விரிவுபடுத்தினார். புதிதாக 21 மந்திரிகள் பதவியேற்றனர். இதனால் மொத்த மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 45–ல் இருந்து 66ஆக உயர்ந்தது. தற்போது பா.ஜ.க. அரசு பதவி ஏற்று ஓராண்டு முடிந்த நிலையில்

உ.பி.யில் கைதி சாவு: ஜெயிலில் கைதிகள் -வார்டன்கள் மோதல்

Posted: 05 Jul 2015 10:47 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு ஷியாம் குமார் என்ற விசாரணைக் கைதி அடைக்கப்பட்டிருந்தார். தாலிப் என்ற அந்த நபர் சிறை காவலர்களுக்கு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகள் செலவுக்காக பணம் கேட்ட மனைவியை ஆசிட் குடிக்க வற்புறுத்திய கணவன்

Posted: 05 Jul 2015 10:18 PM PDT

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கபாரா ஷேக் (வயது 40). இவர் ஓசூர் சாலையில் உள்ள சோமசுந்தர பாளையம் என்ற ஊரில் தங்கியிருந்து கடந்த ஏழு வருடமாக கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புரோமிலா ஹடுன் (வயது 35). இவர் தன் இரண்டு குழந்தைளுடன் தனது தயார் வீட்டில் வசித்து வந்தார்.

கேரளாவில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்குகள் இன்று வேலை நிறுத்தம்

Posted: 05 Jul 2015 10:13 PM PDT

கேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று நள்ளிரவு வரை 24 மணி நேரத்திற்கு இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இரவு முழுவதும் துப்பாக்கி சூடு

Posted: 05 Jul 2015 09:24 PM PDT

காஷ்மீர் எல்லையையொட்டி இந்திய- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எல்லையில் அமைதி நிலவும்போது எல்லாம் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறல்களில்

கேரளாவில் படகுடன் சிக்கிய 12 பேர் நாச வேலைக்கு சதியா? தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

Posted: 05 Jul 2015 07:52 PM PDT

இந்தியாவுக்குள் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவமானப்படுத்தியதாக விமானி மீது பணிப்பெண் போலீசில் புகார்

Posted: 05 Jul 2015 07:51 PM PDT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூத்த விமானி மீது அந்த விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவர் கேரள மாநிலம் நெடுமஞ்சேரி போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில் அவர் ' பணி செய்யும் இடத்தில் விமானி தன்னை அவமானப்படுத்தியதாக' தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு, கேரளாவில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு: தேசிய தலைவர் அமித் ஷா பேச்சு

Posted: 05 Jul 2015 07:41 PM PDT

'மகா தொடர்பு முகாம்' குறித்து தென்மண்டல பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகத்தை சேர்ந்த கட்சியின்

வெளிநாட்டு சொத்து குவிப்பு தகவல்களை இணையதளம் மூலமாக தாக்கல் செய்ய அனுமதி

Posted: 05 Jul 2015 07:40 PM PDT

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு 'வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) சட்டம்-2015' கொண்டு வந்துள்ளது. இது கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் வரி

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருவது நியாயமற்றது: முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

Posted: 05 Jul 2015 07:35 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி, லண்டனில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல பயண ஆவணங்கள் பெற உதவிய மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே இருவரும் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.

ஆடிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந் தேதி நடைதிறப்பு

Posted: 05 Jul 2015 07:25 PM PDT

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை மிக பிரசித்தி பெற்றவையாகும். இந்த பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்து, பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். இதுதவிர ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படும். மேலும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் பூஜையில் நிறைபுத்தரிசி பூஜையும் ஒன்று. இப்பூஜையின் போது வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அய்யப்பனுக்கு காணிக்கையாக செலுத்தி பூஜை நடத்தப்படும், பூ

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு ஜப்பான் பயணம்

Posted: 05 Jul 2015 07:21 PM PDT

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று ஜப்பான் சென்றார். அவருடன் மந்திரிகள் யானமாலா ராமகிருஷ்ணுடு, நாராயண் மற்றும் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் சென்று உள்ளனர்.

அமர்நாத் யாத்திரை: 3 நாட்களில் 30 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்

Posted: 05 Jul 2015 07:09 PM PDT

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இந்திய ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்தியாவில் பிச்சை எடுத்து வாழும் 6½ லட்சம் குடும்பங்கள்: அதிர்ச்சி தகவல்

Posted: 05 Jul 2015 03:46 PM PDT

இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் குடும்பங்களின் வாழ்வாதாரம், சொத்து, கல்விநிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. கிராமப்புறங்களில் 17 கோடியே 59 லட்சம் குடும்பங்களை இந்த

பிரதமர் மோடி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம்

Posted: 05 Jul 2015 03:03 PM PDT

நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே 26-ந்தேதி பதவி ஏற்றது. பிரதமர் மோடி கடந்த ஓராண்டில் அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா

வியாபம் ஊழல்: மர்மமான வகையில் மரணமடைந்த செய்தியாளரின் உடல் உள்ளுறுப்புகள் டெல்லி எய்ம்ஸில் ஆய்வு

Posted: 05 Jul 2015 01:30 PM PDT

மத்தியப்பிரதேசத்தில் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் 'வியாபம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் தேர்வுகள் மூலம் 131 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதில் 48 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதாக

அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

Posted: 05 Jul 2015 12:41 PM PDT

இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரும், அமெரிக்க ராணுவ மந்திரி ஆஸ்டன் கார்ட்டரும் கடந்த மாதம் 3-ந் தேதி 10 ஆண்டுக்கு ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டனர். சீனா தெற்கு கடலோர பகுதியிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதை

ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை

Posted: 05 Jul 2015 08:42 AM PDT

ஒடிசாவில் உள்ள பலசோர் மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 65 வயது நபரும் அவரது 24 வயது மகனும் தலை துண்டித்த நிலையில் இன்று பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சலாபனி பழங்குடியின பகுதியை சேர்ந்த சானியா சிங் (65) என்பவரும் அவரது மகனான பாபுலி சிங் (24) என்பவரும் இன்று காலை அவர்களது வீட்டில் தலையில்லாத பிணங்களாக கிடந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™