மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை
- பீகாரில் இன்று பிரசாரம்: மனித வெடிகுண்டு மூலம் மோடியை தாக்க சதி-உளவுத்துறை எச்சரிக்கை
- பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுமையாக ரத்தானால் ரூ.260 கோடிக்கு இழப்பு ஏற்படும்
- ராஜீவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பை ரத்து செய்யக் கோரும் மனு மீது 28–ந் தேதி விசாரணை
- மத்திய துணைராணுவ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: காவலர் பலி
- கேரளாவில் பாதுகாப்பு அனுமதி பெற தமிழக காய்கறி லாரிகளுக்கு ஆகஸ்டு 4–ந் தேதி வரை கெடு
- கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உசேன் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது
- வெளியூர் சிறையில் பொழுது போகாததால், அங்கிருந்து தப்பித்து உள்ளூர் ஜெயிலுக்கு திரும்பிய பாசக்கார கைதி
- உரிமை மீறல் பிரச்சினை: சோனியா காந்தி மருமகன் வதேராவுக்கு பாராளுமன்ற செயலாளர் நோட்டீசு
- ஜனாதிபதியாக மூன்றாண்டுகள் நிறைவு: பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
- நாக்பூர் ஜெயிலில் யாகூப் மேமனை தூக்கில் போட ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு
- ஆட்டோ டிரைவரின் உயிரை காப்பாற்ற திருவனந்தபுரத்தில் இருந்து கப்பற்படை விமானம் மூலம் கொச்சிக்கு பறந்த இதயம்
- கேரளாவில் மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள்
- கருப்பு பணத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகளுக்கான நன்கொடைக்கு புதிய கட்டுப்பாடு
- சென்னை சென்டிரல் குண்டு வெடிப்பு: 4 சிமி தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் பரிசு
- அமர்நாத்தில் மேகம் வெடித்து பெருமழை: பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்களின் இரு குழந்தைகள் பலி
- உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி
- காதல் விவகாரத்தால் விவசாயிகள் தற்கொலையா? டெல்லி மேல்-சபையில் மந்திரி பதிலால் அதிர்ச்சி
- யாகூப் மேமனுக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சி தலைவர் கூறிய கருத்தால் சர்ச்சை
- இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை
| ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை Posted: 24 Jul 2015 10:57 PM PDT ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் செயல்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் சில்வெஸ்டர் மின்ஸ். பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கிய சில்வஸ்டர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் |
| பீகாரில் இன்று பிரசாரம்: மனித வெடிகுண்டு மூலம் மோடியை தாக்க சதி-உளவுத்துறை எச்சரிக்கை Posted: 24 Jul 2015 10:45 PM PDT பீகார் மாநில சட்ட சபைக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அட்டவணை இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் முதல்–மந்திரி |
| பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுமையாக ரத்தானால் ரூ.260 கோடிக்கு இழப்பு ஏற்படும் Posted: 24 Jul 2015 10:42 PM PDT பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13–ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கடந்த 4 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் 91 சதவீத பாராளுமன்ற அலுவல்கள் முடங்கியது. 9 சதவீத அலுவலே நடந்தது. |
| ராஜீவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பை ரத்து செய்யக் கோரும் மனு மீது 28–ந் தேதி விசாரணை Posted: 24 Jul 2015 10:37 PM PDT ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருவதால் முருகன், சாந்தன், பேரறிவாளன் தவிர ஏற்கனவே ஆயுள் கைதிகளாக இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ் |
| மத்திய துணைராணுவ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: காவலர் பலி Posted: 24 Jul 2015 10:26 PM PDT டெல்லியில் துணை ராணுவ பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தலைமைக் காவலர் ஒருவர் தீயி்ல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியில் துணை மத்திய ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பயிற்சி மையத்தில் உள்ள |
| கேரளாவில் பாதுகாப்பு அனுமதி பெற தமிழக காய்கறி லாரிகளுக்கு ஆகஸ்டு 4–ந் தேதி வரை கெடு Posted: 24 Jul 2015 10:23 PM PDT தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கேரள அரசு குற்றம்சாட்டியது. இதனை தமிழக விவசாயிகள் மறுத்தனர். என்றாலும் கேரள அரசின் உணவு |
| கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உசேன் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது Posted: 24 Jul 2015 10:00 PM PDT குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002–ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. அதில் இருந்த 59 அயோத்தி கரசேவகர்கள் உயிரோடு தீயில் எரிந்து பலியானார்கள். இதைத் தொடர்ந்து குஜராத்தில் மிகக் கொடூரமான இனக்கலவரம் ஏற்பட்டு 1200 பேர் |
| வெளியூர் சிறையில் பொழுது போகாததால், அங்கிருந்து தப்பித்து உள்ளூர் ஜெயிலுக்கு திரும்பிய பாசக்கார கைதி Posted: 24 Jul 2015 10:00 PM PDT மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அத்தையை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட கைதி அந்த சிறையில் இருந்து தப்பி, நேராக உள்ளூர் சிறைக்கு சென்று சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சின்ட்வாரா மாவட்டம், துர்க்கி காப்பா கிராமத்தை சேர்ந்த பங்கஜ் பஹாடே(22) என்பவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு அத்தையை கொன்ற |
| உரிமை மீறல் பிரச்சினை: சோனியா காந்தி மருமகன் வதேராவுக்கு பாராளுமன்ற செயலாளர் நோட்டீசு Posted: 24 Jul 2015 09:53 PM PDT சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்ததை பயன்படுத்தி அரசு நிலங்களை மிக குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடு செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதியாக மூன்றாண்டுகள் நிறைவு: பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Posted: 24 Jul 2015 09:46 PM PDT இந்தியாவின் ஜனாதிபதியாக மூன்றாண்டுகள் நிறைவு செய்த பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசில் முன்னர் நிதிமந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் இந்தியாவின் ஜனாதிபதியாக |
| நாக்பூர் ஜெயிலில் யாகூப் மேமனை தூக்கில் போட ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு Posted: 24 Jul 2015 09:40 PM PDT மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளில் ஒருவனான யாகூப் மேமனுக்கு வருகிற 30–ந் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதை எதிர்த்து அவன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நாளை |
| Posted: 24 Jul 2015 09:22 PM PDT இந்தியாவிலேயே முதல்முறையாக கடற்படைக்கு சொந்தமான 'டுரோனியர்' ரக விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லப்பட்ட இதயத்தை தானமாக பெற்றதன் மூலம் 47 வயது ஆட்டோ டிரைவர் உயிர் பிழைத்த சம்பவம் நம் நாட்டின் பாதுகாப்பு படையினரின் மனிதநேயத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. |
| கேரளாவில் மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள் Posted: 24 Jul 2015 08:33 PM PDT கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தேளம்பாடி பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் |
| கருப்பு பணத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகளுக்கான நன்கொடைக்கு புதிய கட்டுப்பாடு Posted: 24 Jul 2015 08:16 PM PDT வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா செயல்பட்டு வருகிறார். கருப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பாக, அக்குழு தனது 3-வது அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு அதிரடி யோசனைகளை |
| சென்னை சென்டிரல் குண்டு வெடிப்பு: 4 சிமி தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் பரிசு Posted: 24 Jul 2015 08:08 PM PDT சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், கடந்த ஆண்டு மே 1-ந் தேதி குண்டு வெடித்தது. பெங்களூரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், அன்றைய தினம் காலை 7.10 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வந்து சேர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில், படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகளில் அடுத்தடுத்து இரு |
| அமர்நாத்தில் மேகம் வெடித்து பெருமழை: பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்களின் இரு குழந்தைகள் பலி Posted: 24 Jul 2015 08:05 PM PDT வானத்தில் திரளும் கருமேக கூட்டங்கள் ஒன்றோடொன்று வேகமாக மோதும் வேளைகளில் மேகங்களில் உள்ள வேதிப் பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்து, இடி, மின்னலுடன் பெருமழையாக பெய்வதுண்டு. சில வேளைகளில் ஆலங்கட்டி மழையாகவும் இது மாறுவதுண்டு. இதைப்போன்ற |
| உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி Posted: 24 Jul 2015 08:00 PM PDT கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. 4 நாட்களுக்கு முன்பு சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு சென்றார். அன்று இரவு திடீரென்று தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது. |
| காதல் விவகாரத்தால் விவசாயிகள் தற்கொலையா? டெல்லி மேல்-சபையில் மந்திரி பதிலால் அதிர்ச்சி Posted: 24 Jul 2015 07:43 PM PDT நாடு முழுவதும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விவசாயத்துறை மந்திரி ராதாமோகன் சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. |
| யாகூப் மேமனுக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சி தலைவர் கூறிய கருத்தால் சர்ச்சை Posted: 24 Jul 2015 07:31 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 30-ந் தேதி அதிகாலையில் அவரை தூக்கில் போடுவதற்கு மராட்டிய மாநிலம், நாக்பூர் மத்திய சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், யாகூப் மேமனை தூக்கில் |
| இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை Posted: 24 Jul 2015 07:20 PM PDT கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ரகீம். இவருடைய தாயார் ஆயிஷா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகீம் சேர்த்தார். பின்னர் அவரை தனது மனைவி பிஸ்மி, மகன் முகமது (வயது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |