Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் எல்லையருகே இன்று ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

Posted: 12 Jul 2015 11:01 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக இன்று அதிகாலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லை வழியாக காஷ்மீரில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை

144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கோதாவரி புஷ்கரம்: நாளை தொடங்குகிறது

Posted: 12 Jul 2015 10:40 PM PDT

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை 'கோதாவரி புஷ் கரம்' விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் 'கும்ப மேளா' போல ஆந்திராவில் நடக்கும் 'கோதாவரி புஷ்கரம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'கோதாவரி புஷ்கரம்' விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது

டெல்லியில் சோனியா இன்று அளிக்கும் இப்தார் விருந்தில் மம்தா, லல்லு பங்கேற்க மாட்டார்கள்

Posted: 12 Jul 2015 10:28 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லியில் அளிக்கும் இப்தார் விருந்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பாணர்ஜி பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது. ரம்ஜான் நோன்பையொட்டி டெல்லியில் இன்று மாலை இப்தார் விருந்தளிக்க முடிவு செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த விருந்தின் மூலம்

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நடத்திய பிரமாண்ட இப்தார் விருந்து: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 12 Jul 2015 10:26 PM PDT

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் நேற்று தெலுங்கானா அரசு சார்பில் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்தார். ஐதராபாத் நிஜாம் கல்லூரியில் நடந்த இந்த இப்தார் விருந்தில் சந்திர

கோதாவரி புஷ்கரம் விழாவில் ரூ.1000 கோடி ஊழல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 12 Jul 2015 10:23 PM PDT

ஆந்திர மாநிலம் கோதாவரியில் ''மகா கோதாவரி புஷ்கரம்'' விழா நாளை தொடங்குகிறது. இதற்காக ஆந்திர அரசு ரூ.1650 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து உள்ளது. மேலும் மத்திய அரசும் ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதில் ரூ.800 முதல் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய பிரதேச நுழைவுத் தேர்வு ஊழல்: சி.பி.ஐ. விசாரணை இன்று தொடங்கியது

Posted: 12 Jul 2015 10:18 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் 2007–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை நடந்த நுழைவுத் தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. அம்மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவ் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை சுமார் 2600 பேர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு

டெல்லியில் நடைபாதை வியாபாரிகளுடன் ராகுல்காந்தி சந்திப்பு

Posted: 12 Jul 2015 10:04 PM PDT

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் நடைபயணம் சென்று விவசாயிகளை

திருப்பதியில் கூடுதல் லட்டு டோக்கன் மையத்தை தடை செய்ய ஆலோசனை

Posted: 12 Jul 2015 09:41 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு 20 ரூபாய்க்கு 2

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் நிறுத்தம்

Posted: 12 Jul 2015 09:37 PM PDT

அமர்நாத் குகைக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மோசமான வானிலை நீடித்து வருவதால் பனி லிங்கம் வடிவில் தோன்றும் சிவ பெருமானை தரிசிப்பதற்கு செல்ல தயாராக இருந்த யாத்ரீகர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அடிவார முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான

டெல்லியில் தெருநாயை துன்புறுத்திய இளைஞர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்

Posted: 12 Jul 2015 09:19 PM PDT

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரு நாயை கடுமையாக தாக்கியது தொடர்பான வீடியோ முகநூலில் வைரலாக பரவி வருகிறது. 23 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், நாயின் காலைப்பிடித்த இளைஞர் அதனை காரின் மீது அடிப்பதாக காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் வைரலாக ஹிட்டடித்த இந்த வீடியோ தொகுப்பு, பிராணிகள் நல ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயை

2590 தபால் நிலையங்களில் வங்கி சேவை அறிமுகம்: மத்திய மந்திரி அறிவிப்பு

Posted: 12 Jul 2015 08:23 PM PDT

நாட்டில் 2,590 தபால் நிலையங்களில் வங்கி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தகவல் தொழில் நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அகர்தலாவில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் வங்கி சேவையை தொடங்கி வைத்த அவர் பேசும்போது 'நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக

கேரளாவில் மது விற்பனை குறைந்தது

Posted: 12 Jul 2015 08:01 PM PDT

கேரளாவில் மது விற்பனை குறைந்துள்ளது. அந்த அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 418 பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளாவில் மதுவிற்பனை 18 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முன்பு

சுப்ரீம் கோர்ட்டு கிளை சென்னையில் அமைக்கப்படுமா? இன்று விசாரணை

Posted: 12 Jul 2015 07:32 PM PDT

இந்திய நீதித்துறையின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டு, தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து ஏதாவது வழக்குக்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது மிகவும் சிரமமான

வட மாநிலங்களில் கனமழை: உத்தரபிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Posted: 12 Jul 2015 05:13 PM PDT

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. காஷ்மீரில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மக்கள்

இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு 11 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு: அமித்ஷா தகவல்

Posted: 12 Jul 2015 05:10 PM PDT

டெல்லியில் பா.ஜனதா சார்பில் வட மாநிலங்களுக்கான மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. இதில் டெல்லி, அரியானா, பஞ்சாப், சண்டிகார், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த

வியாபம் ஊழலை அம்பலப்படுத்தியது பாவமா? காங்கிரசுக்கு சிவராஜ் சிங் சவுகான் கேள்வி

Posted: 12 Jul 2015 04:15 PM PDT

வியாபம் என்னும் மத்திய பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரிய ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலம் கையகப்படுத்தும் மசோதா - முதல்-மந்திரிகளுடன் நாளை மறுநாள் மோடி ஆலோசனை: காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு?

Posted: 12 Jul 2015 02:48 PM PDT

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. கடந்த காங்கிரஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

Posted: 12 Jul 2015 02:18 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் கே.ரோசய்யா தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் விடுதியில் இருந்து பேட்டரி

ஜூன் மாதத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

Posted: 12 Jul 2015 01:53 PM PDT

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்த கடந்த பட்ஜெட்டில், ரெயில்வே சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 85 மெட்ரிக் டன் அளவு உயரும் என அறிவித்திருந்தார். ஆனால் இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எதிர்விளைவையே ஏற்படுத்தி உள்ளது.

விழா மேடைக்கு மந்திரி வந்த போது போலீஸ் அதிகாரி எழுந்து நிற்காததால் சர்ச்சை

Posted: 12 Jul 2015 01:16 PM PDT

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள போலீஸ் அகாடமியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அந்த மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கலந்து கொண்டார். அவர் விழா மேடைக்கு வந்த போது, அதில் அமர்ந்து இருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று அவருக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™