Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மரண தண்டனையை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Posted: 29 Jul 2015 11:02 PM PDT

கண்ணுக்கு கண் என்பது இந்திய நீதித்துறையின் கொள்கையாக இருக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான டி.ராஜா கூறியுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது

யாகூப்மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்: மும்பை–டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Posted: 29 Jul 2015 09:53 PM PDT

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியான யாகூப்மேமனுக்கு நாக்பூர் ஜெயிலில் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முதலே மும்பையில் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொண்டனர்.

யாகூப் மேமனின் தூக்குத் தண்டனை: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆதரவு

Posted: 29 Jul 2015 09:40 PM PDT

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதன் மூலம் நாட்டு மக்களுக்கு உச்ச நீதிமன்றம் சரியான செய்தியை கூறியுள்ளதாக முன்னாள் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நள்ளிரவுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் யாகூப்பிற்கு

மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

Posted: 29 Jul 2015 09:22 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவ வகை செய்யும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

யாகூப் மேமனுக்கு நள்ளிரவில் பிறந்த நாள் கேக் அனுப்பிய குடும்பத்தினர்

Posted: 29 Jul 2015 09:22 PM PDT

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன், தனது 53-வது பிறந்த நாளான இன்று துக்கிலிடப்பட்டுள்ளார். யாகூப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நிராகரித்த நிலையில், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற

பீகார் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் - 3 கூட்டங்களில் பேசுகிறார்

Posted: 29 Jul 2015 09:17 PM PDT

பீகார் மாநில சட்ட சபைக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி முறிந்த பின்பு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படு தோல்வி அடைந்தது.

திருமண ஆசைகாட்டி இளம் பெண்ணை கற்பழித்த கேரள கிரிக்கெட் வீரர் கைது

Posted: 29 Jul 2015 09:09 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள மலையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 30). கிரிக்கெட் வீரரான இவர் கேரள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராகவும் பணியாற்றி

விமான கடத்தல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 29 Jul 2015 08:55 PM PDT

விமான கடத்தல் தடுப்பு சட்டத்தை கடுமையாக்கும் வகையிலான புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. முந்தைய மசோதாவில், விமான கடத்தலின்போது, பணயக்கைதிகளாக சிக்குவோர் கொல்லப்பட்டால் மட்டுமே, விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வழி இருந்தது. ஆனால், இந்த புதிய

சரக்கு, சேவை வரியால் வருவாய் இழப்பு: மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 29 Jul 2015 08:52 PM PDT

சரக்கு, சேவை வரி அமல் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக

அக்டோபர் 15-ந்தேதி: கலாம் பிறந்த நாள் வாசிப்பு தினமாக கொண்டாடப்படும்- மராட்டிய அரசு அறிவிப்பு

Posted: 29 Jul 2015 08:45 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு அவர் ஆற்றிய சிறந்த தொண்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ந்தேதியை 'வாசிப்பு தினமாக' கொண்டாட மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

கனவு நாயகன் கலாமின் நிறைவேறாத கனவு: பேரன், உறவினர்கள் உருக்கமான தகவல்கள்

Posted: 29 Jul 2015 08:40 PM PDT

அப்துல் கலாம், 5 ஆண்டு ஜனாதிபதி பதவி காலத்தை 2007-ம் ஆண்டு நிறைவு செய்திருந்தாலும், என்றென்றும் 'மக்கள் ஜனாதிபதி'யாக மதிக்கப்படுகிறார். ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராக பணி ஆற்றினார். ஜனாதிபதி

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 29 Jul 2015 08:39 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி 2014-ம் ஆண்டு இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு கடந்து வந்த பாதை

Posted: 29 Jul 2015 08:32 PM PDT

* மார்ச் 12, 1993:- மும்பையின் 13 இடங்களில் குண்டுவெடித்தது. இதில், 257 பேர் பலி. 713 பேர் படுகாயம். * நவம்பர் 4:- நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 189 பேர் மீது கோர்ட்டில் 10 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்.

2 இந்தியர்களுக்கு மகசாசே விருது

Posted: 29 Jul 2015 08:32 PM PDT

பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த ஜனாதிபதி ரமோன் மகசாசே நினைவாக 1957-ம் ஆண்டு முதல் மகசாசே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என வர்ணிக்கப்படும் இந்த விருதுகள் துணிச்சலாக செயல்படுவோருக்கும், சிறந்த சேவை செய்யும் தொண்டு

அப்துல் கலாமின் கடைசி உரை அவரது புதிய புத்தகத்தில் இடம்பெறும்: உதவியாளர் தகவல்

Posted: 29 Jul 2015 08:24 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) திங்கட்கிழமை மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது - காலை 7 மணிக்கு நாக்பூரில் தூக்கிலிடப்பட்டார்

Posted: 29 Jul 2015 08:23 PM PDT

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இன்று காலை 7 மணிக்கு நாக்பூரில் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யாகூப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நிராகரித்த நிலையில், அபெக்ஸ் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,

கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும்: சட்டசபையில் உம்மன் சாண்டி அறிவிப்பு

Posted: 29 Jul 2015 08:13 PM PDT

கேரள சட்டசபை நேற்று கூடியது. அப்போது முதல்-மந்திரி உம்மன் சாண்டி பேசியதாவது:- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். ஒரு

யார் இந்த யாகூப் மேமன்?

Posted: 29 Jul 2015 07:40 PM PDT

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளி யாகூப் மேமனின் முழுப்பெயர், யாகூப் அப்துல் ரசாக் மேமன். 1962-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி மும்பையில் பிறந்தவர். மும்பையில் பள்ளிக் கல்வியையும், எம்.காம்., பட்டப்படிப்பையும் முடித்தார். 1986-ம் ஆண்டு 'இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா'

உலகை உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு

Posted: 29 Jul 2015 07:30 PM PDT

உலகையே உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டது. சில மணி நேரத்தில் 13 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.

காஷ்மீரில் தீவிரவாதி குண்டு வீச்சில் 4 போலீசார் உள்பட பலர் காயம்

Posted: 29 Jul 2015 07:10 PM PDT

தெற்கு காஷ்மீரின் அனந்த்னாக்- பகல் காம் சாலையில் மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அவர்களது வாகனம் கியாசி பாக் கே.ரோடு பகுதியில் பெண்கள் கல்லூரி அருகே சென்றபோது மறைந்திருந்த ஒரு தீவிரவாதி அந்த வாகனம் மீது சக்தி வாய்ந்த கையெறி குண்டை வீசினான். அது பயங்கரசத்தத்துடன் வெடித்து சிதறியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™