Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை குழு புறப்பட்டு சென்றது

Posted: 26 Jul 2015 11:34 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பகுதியில் இன்று காலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து, பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை குழு புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும்

ஏ.சி. சோபாவை வடிவமைத்து குஜராத் மெக்கானிக் சாதனை

Posted: 26 Jul 2015 11:18 PM PDT

அகமாதாபாத், ஜூலை 27- முக்கிய கண்டுபிடிப்புகள், மிகவும் சாதாரண பின்னணி அல்லது மிகக் குறைந்த கல்வி தகுதி கொண்டவர்களால் உருவாக்கப்படுவது காலம் காலமாக தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான். அந்தவகையில் மற்றொரு கண்டுப்பிடிப்பாக குஜராத் மெக்கானிக் ஒருவர் ஏ.சி. சோபா ஒன்றை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளார். காந்தி நகரை சேர்ந்த தாஸ்ராத் படேல் என்ற ஏ.சி. மெக்கானிக், மத்திய அரசின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கித் வியாஸ் என்ற முன்னாள் மாணவரின் உதவியுடன் ஏ.சி. சோபா ஒன்றை வடிவமைத்துள்ளார். முதன் முதலில் 2008-ம் ஆண்டில் ஏ.சி.சோபாவை உருவாக்கும் எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும், ஆனால் முதலில் உருவாக்கிய சோபாவின் எடை 175 கிலோ இருந்ததால் மத்திய அரசின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியை நாடியதாக தாஸ்ராத் படேல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கித் வியாஸ் என்ற வடிவமைப்பாளரின் உதவியுடன் 35 கிலோ எடைக்கொண்ட ஏ.சி.சோபாவை உருவாக்கியுள்ளார் தாஸ்ராத் படேல். இதன் விலை ஒரு லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாயாக இருக்கும் என படேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் செட்டில்

Posted: 26 Jul 2015 11:10 PM PDT

இங்கு படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவதாக இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் விமர்சனத்திற்கு ஆளாகிவரும் நிலையில், இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கோதாவரி புஷ்கரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி ஏழுமலையான் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Posted: 26 Jul 2015 10:45 PM PDT

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த 14–ந்தேதியில் இருந்து 25–ந்தேதி வரை 12 நாட்களாக நடந்த கோதாவரி மகா புஷ்கரம் விழாவில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலை போல், மாதிரி ஏழுமலையான் கோவிலை வடிவமைத்துப் பக்தர்களை சாமி தரிசனம்

திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி பதவி காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: ஆந்திர மாநில அரசு உத்தரவு

Posted: 26 Jul 2015 10:35 PM PDT

திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரியாக கே.எஸ்.சீனிவாசராஜுவை, கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19–ந்தேதி ஆந்திர மாநில அரசு நியமித்தது. அவர், மறுநாள் 20–ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். அன்றிலிருந்து 2 ஆண்டுகள் வரை பக்தர்களுக்கு

நேபாளத்தில் கொடூரம்: பேயை விரட்ட 10 வயது சிறுவன் நரபலி

Posted: 26 Jul 2015 10:23 PM PDT

நேபாளத்தில் ஒருவரது மகன் கடும் நோயினால் அவதிப்பட்டான். இதுகுறித்து ஒரு மந்திரவாதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவன் சிறுவனை பேய் பிடித்திருக்கிறது. எனவே அந்த கெட்ட ஆவியை விரட்ட ஒரு சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு சம்மதித்த நபர் 10 வயது சிறுவனிடம் 50

குஜராத்தில் தேரோட்டத்தின் போது பரிதாபம்: உயரழுத்த மின்சாரம் தாக்கி 3 பக்தர்கள் பலி

Posted: 26 Jul 2015 09:34 PM PDT

குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டத்தில் நடைபெற்ற ஜகநாதர் தேரோட்டத்தின் போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்சார கம்பி வழியாக சென்ற மின்சாரன் தேரின் மீது பாய்ந்ததில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக பலியாகினர்.

செல்போனில் நிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 14 வயது மாணவியை கற்பழித்த தந்தை–மகன் கைது

Posted: 26 Jul 2015 09:27 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள பத்தனாபுரத்தை அடுத்த திறவூர் பகுதியை சேர்ந்தவர் ரோயி (வயது 45). இவரது மகள் வின்சி (22). மகன் ராபின் (20). வின்சியும் பத்தனாபுரத்தை சேர்ந்த ஒரு 14 வயது மாணவியும் தோழிகள். அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி அடிக்கடி வின்சியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்து செல்வார்.

பஞ்சாப்பில் தீவிரவாதிகள் கைவரிசை: போலீஸ் நிலையம், பஸ் மீது தாக்குதல் - 8 பேர் பலி

Posted: 26 Jul 2015 09:13 PM PDT

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் மற்றும் பேருந்து மீது நடத்திய ஆவேச தாக்குதலில் 8 பேர் பலியானதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு கூடுதலாக எல்லை பாதுகாப்பு படையினரை

ஆந்திராவில் கிருஷ்ணா-கோதாவரி நதிகளை இணைக்க திட்டம்: சந்திரபாபு நாயுடு தகவல்

Posted: 26 Jul 2015 08:44 PM PDT

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில், 12 நாள் 'கோதாவரி மகாபுஷ்கரம் திருவிழா' நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு நடந்தது. இதில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

தூக்கு தண்டனைக்கு தடைகோரும் யாகூப் மேமன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை

Posted: 26 Jul 2015 08:44 PM PDT

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 30-ந்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாகூப் மேமன், மராட்டிய கவர்னருக்கு ஒரு கருணை மனு அனுப்பியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் ரூ.5 கோடி பரிசு: குஜராத் அரசின் அபார அறிவிப்பு

Posted: 26 Jul 2015 08:32 PM PDT

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் '2016- ஒலிம்பிக்' போட்டிகள் வரும் அவ்வாண்டின் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் உள்ள சமா உள்விளையாட்டு அரங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை உருவாக்கும் விவேகானந்தா விளையாட்டு

சத்தீஷ்கார் மாநிலத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா அரசு வெற்றி

Posted: 26 Jul 2015 08:30 PM PDT

சத்தீஷ்கார் மாநிலத்தில் ராமன்சிங் தலைமையிலான பாரதீய ஜனதா அரசில், அரிசி பொது வினியோகத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்ததாகவும், ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி ராமன்சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த பிரச்சினை தொடர்பாக, அரசு மீது காங்கிரஸ் கட்சி சார்பில்

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடக்கோரி லாலு பிரசாத் உண்ணாவிரதம்: பிரதமர் மோடி மீது தாக்கு

Posted: 26 Jul 2015 08:27 PM PDT

பீகாரில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, தேர்தல் பிரசாரம் களை கட்டத்தொடங்கி விட்டது. அங்கு முசாபர்பூரில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் அரசியல் ஆதாயத்துக்காக ஐக்கிய ஜனதாதள தலைவர்

முன்னாள் மத்திய மந்திரி ஹண்டிக் மரணம்: சோனியாகாந்தி இரங்கல்

Posted: 26 Jul 2015 08:23 PM PDT

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிலக்கரி சுரங்கத்துறை மந்திரியாக இருந்தவர் பி.கே.ஹண்டிக். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அசாம் மாநிலத்தில் இருந்து 6 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹண்டிக், உள்துறை, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் ரசாயன உரத்துறை

ஜார்க்கண்டில் தேர் சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து வாலிபர் பலி

Posted: 26 Jul 2015 08:16 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜகநாதர் ஆலய திருவிழாவின்போது தேரின் வடத்தை பிடிக்க முயன்ற வாலிபர், தேர் சக்கரத்தில் சிக்கி நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஜகநாத்பூர் பகுதியில் சில

டெல்லியில் கார்கில் போர் தியாகிகளுக்கு ராணுவ மந்திரி அஞ்சலி

Posted: 26 Jul 2015 08:11 PM PDT

காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இணைந்து கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் ஆக்கிரமித்தனர். இதை கண்டுகொண்ட இந்திய ராணுவம், அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 2 மாதங்களாக நடந்த தீவிர போர், ஜூலை 26-ந்தேதி முடிவடைந்தது.

அமர்நாத் யாத்திரை: 3 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்

Posted: 26 Jul 2015 08:10 PM PDT

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 59 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதியிடம் மனு

Posted: 26 Jul 2015 08:02 PM PDT

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக யாகூப் மேமன் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை 30-ந்தேதி

கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பெங்களூரு வருகை

Posted: 26 Jul 2015 07:53 PM PDT

மைசூரு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால மருத்துவ உபகரணங்கள் அடங்கிய நவீன அருங்காட்சியகம் தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வரும் அவர் சிறப்பு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™