Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது: மேலிட நடவடிக்கை பாயுமோ என அ.தி.மு.க.,வினர் கலக்கம்

Posted:

இடைத்தேர்தல் நடந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், நேற்று, 74.40 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை விட, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துஉள்ளதால், மேலிடம் நடவடிக்கைஎடுக்குமோ என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா, களம் இறங்கினார். அதனால், முந்தைய இடைத்தேர்தல்கள் பாணியில், 50 பேர், தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, அ.தி.மு.க.,வினரும் தொகுதியில் முகாமிட்டனர்.தி.மு.க., - தே.மு.தி.க., - ...

'ஸ்மார்ட் சிட்டி' விஷயத்தில் கேரளாவுக்கு காங்கிரஸ் வக்காலத்து: தமிழகத்துக்கு அதிக திட்டம் ஒதுக்கியதால் பாய்ச்சல்

Posted:

- நமது டில்லி நிருபர் -'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு, தமிழகத்திலிருந்து, 12 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதை காங்கிரஸ் மேலிடம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த திட்டத்தில், கேரளாவிலிருந்து ஒரு நகரம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால்,அந்த மாநிலத்துக்காக காங்., வக்காலத்து வாங்கியுள்ளது.அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டி கள் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த சாலை வசதி, 24 மணிநேர மின்வசதி, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைகட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்படும். ...

மெட்ரோ ரயில் சேவை நாளை துவக்கம்?

Posted:

சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவிற்கானஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன.சென்னை மெட்ரோ ரயில் சேவை, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு துவக்கப்பட உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், நாளை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.நாளைய விழாவில் பங்கேற்க வரும்படி, தமிழக அரசு சார்பில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர், 'விழாவில் பங்கேற்க இயலாது' என, தெரிவித்துள்ளார்.எனவே, தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' ...

ஜூலை 1 முதல் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: ரூ.1 லட்சம் கோடியில் நிறைவேற்றம்

Posted:

புதுடில்லி: தே.ஜ., கூட்டணி அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, அடுத்த மாதம், 1ம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வசதி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. மக்கள், தங்கள் அன்றாடப் பணிகளை மட்டுமல்லாமல், அடிப்படை தேவைகளை கூட, இணையம் மூலமாகவே மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

கிராமங்கள் அதிகம்:
அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து, இணைய வசதியை ...

அரசு திட்டங்கள் 30 ஆக குறையும்? 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முக்கிய முடிவு

Posted:

புதுடில்லி: மத்திய அரசின் நிதிஉதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கை, 72ல் இருந்து, 30 ஆக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.திட்டக் கமிஷனுக்கு மாற்றாக, உருவாக்கப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பின், மாநில முதல்வர்கள் துணைக் குழு கூட்டம், டில்லியில் நடந்தது.

கருத்துக்கள்:
இந்த குழுவின் அமைப்பாளரான, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:இரண்டு பிரதான திட்டங்களின் கீழ், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களை குறைப்பது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நெகிழ்வு நிதிக்கான ...

ஜெ., வழக்கில் கர்நாடகா அரசு மேல்முறையீடு: தி.மு.க., தனியாக வழக்கு தொடருமா?

Posted:

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட, நால்வரை, கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது.அதன் மீதான விசாரணை விவரம், அடுத்த வாரத்தில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதில், தி.மு.க.,வின் நிலை குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தி.மு.க., சட்டப்பிரிவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வது என, முடிவு செய்து விட்டோம்; ஆனால், கர்நாடகா ...

ஒரே வாரம்; ஒரே நீதிபதி; மூன்று விதமான தீர்ப்புகள்: பாலியல் வன்முறை வழக்குகளில் புதுப்புது திருப்பங்கள்

Posted:

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலியல் வன்முறை வழக்குகளில், கடந்த வாரம், மூன்று விதமான தீர்ப்பு, ஒரே நீதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.முதல் வழக்கில் சமரசம்; அடுத்த வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி; மூன்றாவது வழக்கில், தண்டனையை குறைத்து விடுதலை என, மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு, 15 வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்த வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரிய மோகனின் மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கை, சமரச ...

விஜயகாந்துக்கும் வாசனுக்கும் குரு பெயர்ச்சி சாதகம்: பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Posted:

நிகழும் மன்மத வருடம், ஆனி மாதம், 20ம் தேதி (5.7.15), இரவு, 11:02 மணிக்கு, ஆயில்யம் நட்சத்திரம், நான்காம் பாதம், கடக ராசியில் இருந்து, மகம் நட்சத்திரம் முதல் பாதம் சிம்ம ராசிக்கு, குரு பெயர்ச்சி ஆகிறார்.சிம்ம ராசியில், 12 ஆண்டுக்கு ஒருமுறை, குரு வரும்போது தான், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில், மகாமகம் யாக பூஜை, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.நவக்கிரகங்களில், சுப கிரகமாக கருதப்படும், குரு பகவான், தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கிய ஆதார மாக திகழ்கிறார். பொன்னிற மேனியான குரு, மஞ்சள் வஸ்திரம் அணிந்து, வெள்ளை யானை வாகனத்தில் விண்ணில் வலம் ...

'ஹெல்மெட்'டுக்கு தனி கட்டணம்: 'பார்க்கிங்' குத்தகைதாரர் அதிரடி முடிவு

Posted:

இன்னும் மூன்றே நாள்... தமிழகம் முழுவதும், சாலைகளில், எங்கு பார்த்தாலும், ஒரே, 'ஹெல்மெட் தலைகளாக'த்தான் இருக்கும்!'ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்; அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முழுவீச்சில் அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வழக்கம் போல்...:
அபராதம் என்றால் கூட, வாகன ஓட்டிகள், வழக்கம்போல் அலட்சியமாக இருந்து விடுவர். ஆனால், இப்போது, எங்கே, லைசென்ஸ் பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில், அசட்டை ஆசாமிகள் கூட, இம்முறை, ஹெல்மெட்டுகளை வாங்கிவிட்டனர்.வரும், ஜூலை 1ம் ...

குடிமகன்கள் குடிப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு மருந்து

Posted:

வாஷிங்டன்: குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினைஅமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூளையில் ஆழமாக பதிந்து விடுவது தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சமீபகாலத்தில் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்குப் பயன்படும் "இஸ்ராடிபின்' எனப்படும் மருந்து ...

இணைய சமநிலை அறிக்கை விரைவில்!

Posted:

புதுடில்லி:''சர்ச்சைக்குரிய, இணைய சமநிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்,'' என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான, பார்தி ஏர்டெல், 'ஏர்டெல் ஜீரோ' திட்டத்தை அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், பல மொபைல் போன் செயலிகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்' என, ஏர்டெல் கூறியது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையதள சேவைக்கான கட்டணத்தை, ஆரம்ப கட்ட மற்றும் பெரிய நிறுவனங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள ஏர்டெல் திட்டமிட்டிருந்தது. இதற்கு, சமூக ஆர்வலர்கள், ...

சமையல்காரரை அடித்த விவகாரம்: நியூசி., இந்திய தூதர் பணியிட மாற்றம்

Posted:

புதுடில்லி: நியூசிலாந்தில், இந்திய துாதரக சமையல்காரர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்திய துாதர் ரவி தாப்பர், டில்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டு, வெளியுறவு அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.நியூசிலாந்தில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றியவர் ரவி தாப்பர். இவரின் மனைவி ஷர்மிளா. இவர்களின் வீட்டில், இந்தியாவைச் சேர்ந்த, 26, வயது நபர் ஒருவர் சமையல்காரராக பணியாற்றி வந்தார். ஷர்மிளா, அந்த சமையல்காரரை அடிமை போல் நடத்தி, அடித்து, துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.கொடுமையை தாங்க முடியாத அந்த சமையல்காரர், நள்ளிரவில் வீட்டில் இருந்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™