Tamil News | Online Tamil News |
- பால், தண்ணீர், எண்ணெய் சோதனை: இந்திய தர ஆணையம் அதிரடி
- சுஷ்மா உதவியது தப்பு தான்: பா.ஜ., - எம்.பி., 'பளீர்' பேட்டி
- ஜெ., விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கர்நாடகா மனு
- 'ஸ்மார்ட் சிட்டி' - 12; 'அம்ருட்' - 33: தமிழகத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு
- மானிய விலையில் சாப்பிடும் எம்.பி.க்கள்
- அமெரிக்காவிலும் ஜெட்லிக்கு பீகார் மீது தான் 'கண்!'
- 'கண்ணை தோண்டிடுவேன்': மம்தா உறவினர் மிரட்டல்
- ஐ.நா.,வில் இந்தியா தீர்மானம்: பாக்.,கை காப்பாற்றிய சீனா
- நோன்பு கடைபிடிக்காத சிறுவர்களுக்கு 'தூக்கு'
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'
- அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி
| பால், தண்ணீர், எண்ணெய் சோதனை: இந்திய தர ஆணையம் அதிரடி Posted: புதுடில்லி: மேகியை தொடர்ந்து, பால், தண்ணீர், சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை பரிசோதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த, நெஸ்லே நிறுவனத்தின், 'மேகி' நுாடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ரசாயன உப்பு, மற்றும் காரீயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்பதால், நாடு முழுவதும், இதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, நெஸ்லே நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள், குளுகோஸ், ... |
| சுஷ்மா உதவியது தப்பு தான்: பா.ஜ., - எம்.பி., 'பளீர்' பேட்டி Posted: புதுடில்லி: 'லண்டனில் பதுங்கி வாழும், ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியது, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, லலித் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டது போன்றவை தவறில்லை.இதற்காக, இருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, பா.ஜ., தலைமை கூறி வரும் நிலையில், 'லலித் மோடியுடன் தொடர்பு வைத்திருப்பது, சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் தவறானது' என, பா.ஜ., - எம்.பி.,களில் ஒருவரான, ஆர்.கே.சிங் கூறியுள்ளார். மத்திய அரசின் உளவுத் துறையான, ஐ.பி.,யின் முன்னாள் இயக்குனரான, ஆர்.கே.சிங், உ.பி.,யின், பாந்தா லோக்சபா ... |
| ஜெ., விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கர்நாடகா மனு Posted: புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், கடந்த, மே 11ல், அவரை விடுவித்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.அதில், 'ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்; தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கர்நாடகா அரசு கோரியுள்ளது. |
| 'ஸ்மார்ட் சிட்டி' - 12; 'அம்ருட்' - 33: தமிழகத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு Posted: புதுடில்லி: மத்திய அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தமிழகத்தின், 12 நகரங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. அனைத்து அடிப்படை வசதிகளுடன் முன்மாதிரி நகரங்களாக, தமிழக நகரங்கள் மாற்றப்பட உள்ளன. அதுபோல, 'அம்ருட்' எனப்படும், ஏற்கனவே இருக்கும் நகரங்களை புனரமைத்து, அதற்கு புத்துயிர் ஊட்டி மேம்படுத்தும் திட்டப்படி, தமிழகத்திற்கு, 33 நகரங்கள் கிடைத்துள்ளன.இன்னும் ஏழாண்டிற்குள், நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகள் ஏற்படுத்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறது. வெங்கையா நாயுடுவை அமைச்சராக கொண்ட, மத்திய நகர்ப்புற ... |
| மானிய விலையில் சாப்பிடும் எம்.பி.க்கள் Posted: புதுடில்லி: நாடு முழுவதும், உணவுப் பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாதம் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறும் எம்.பி.,க்களுக்கு, பார்லி., கேன்டீனில், பெரும்பாலான உணவுகள், 90 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவது, ஆர்.டி.ஐ., மூலம் தெரியவந்து உள்ளது. டில்லியில் உள்ள பார்லி., வளாகத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்காக, ஐந்து கேன்டீன்கள் செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உணவுகள், எம்.பி.,க்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்த விவரங்களை வழங்குமாறு, சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் ... |
| அமெரிக்காவிலும் ஜெட்லிக்கு பீகார் மீது தான் 'கண்!' Posted: பத்து நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று, தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என, அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளார். அதற்காக அவர், கடந்த ஓராண்டில் மேற்கொண்ட பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார வளர்ச்சியையும் பட்டியலிட்டு வருகிறார்.அதே நேரத்தில், அரசியல் செய்யவும் அவர் தவறவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள பீகாரில், எப்படியும், ஆட்சியை பிடித்து விடுவது என, பா.ஜ., முடிவு செய்துள்ளது. அதற்கான ... |
| 'கண்ணை தோண்டிடுவேன்': மம்தா உறவினர் மிரட்டல் Posted: கோல்கட்டா" ''திரிணமுல் காங்கிரஸ் கட்சியை யாராவது எதிர்த்தால், அவர்களின் கைகளை வெட்டுவேன்; கண்களை தோண்டி எடுத்துவிடுவேன்,'' என, அனைவரையும் பயமுறுத்தும் வகையில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர், அபிஷேக் பானர்ஜி.கோல்கட்டாவில் தான் வசிக்கிறாரா அல்லது ஆப்ரிக்க காட்டில் வசிக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கோல்கட்டா அருகே நடந்த, திரிணமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அபிஷேக் பானர்ஜி இவ்வாறு பேசியது, பலத்த எதிர்ப்பை ஏற்படுத்திஉள்ளது.மேற்குவங்க முதல்வர் மம்தாவின் அண்ணன் ... |
| ஐ.நா.,வில் இந்தியா தீர்மானம்: பாக்.,கை காப்பாற்றிய சீனா Posted: ஐக்கிய நாடுகள்: 'பயங்கரவாதி லக்வியை சிறையிலிருந்து விடுவித்தது, ஐ.நா., விதிமுறைகளுக்கு எதிரானது' என, ஐ.நா., சபையில், பாகிஸ்தான் மீது இந்தியா கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை, சீனா அதிரடியாக தடை செய்தது.ஐந்து நிரந்தர உறுப்பினர்கள், 10 தற்காலிக உறுப்பினர்களை கொண்ட, ஐ.நா., பொருளாதார தடை கமிட்டி முன், பயங்கரவாதி லக்விக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருக்கும் விவகாரத்தை இந்தியா, இரு நாட்களுக்கு முன் கொண்டு வந்தது. 'மும்பையில், 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதல் மற்றும் அதில், 200க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு, பயங்கரவாதி லக்வி தான் காரணம்' என, இந்தியா ... |
| நோன்பு கடைபிடிக்காத சிறுவர்களுக்கு 'தூக்கு' Posted: பெய்ரூத் : சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அந்நாட்டில் ரமலான் நோன்பு கடைபிடிக்காத இரு சிறுவர்களை, பொது இடத்தில் துாக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அப்பகுதிகளில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றனர். தங்களுக்கென தனியாக காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்டவைகளை நடத்தி வரும் பயங்கரவாதிகள், தங்கள் கொள்கைக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, கடும் தண்டனைகளை வழங்கி ... |
| பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?' Posted: இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூலை, 1ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஹெல்மெட் அணிவதை, 100 சதவீதம் அமல்படுத்தும் வகையில், அரசு துறைகளும், தனியார் அமைப்பு களும், பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.வாகன பதிவின் போதும், லைசென்ஸ் எடுக்கச் செல்லும் போதும், ஹெல்மெட் அவசியமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் ... |
| அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி Posted: 'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:கடந்த 2014 அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிகளில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |