Tamil News | Online Tamil News |
- காலியாக உள்ளது தலைமை தகவல் ஆணையர் பதவி:லட்சக்கணக்கில் மனுக்கள் தேக்கம்
- சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் 200 கோடி போ பங்கேற்பு: டில்லியில் மோடி தலைமையில் இன்று பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு
- 'ஸ்மார்ட் சிட்டி' உட்பட மூன்று திட்டங்கள் துவக்கம்: 25ம் தேதி பிரதமர் தலைமையில் விழா
- நாடு முழுவதும் உள்ள யோகா பயிற்சியாளர்களுக்கு கிராக்கி: அரசின் நடவடிக்கையால் சுற்றுலாவும் அதிகரிக்கும்
- தஞ்சையை தவிர்க்கும் ராகுல்: காவிரி பிரச்னை காரணமா?
- அடுத்த இலக்கு பிரதமர் நரேந்திர மோடி: யோகா கற்றுத்தரும் முஸ்லிம் சிறுமி விருப்பம்
- இந்த ஆண்டு இறுதியில் சவுதி செல்கிறார் மோடி
- அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,600 கோடி: .பணம் வராததால் போக்குவரத்து கழகங்கள் தள்ளாட்டம்
- சர்ச்சை மன்னன் லலித் மோடி கைதாவாரா?
- ஜெ., வழக்கில் நாளை 'அப்பீல்':கர்நாடக அரசு தீவிரம்
- மாணவர்களை 'மாவோயிஸ்ட்'களாக மாற்றும் பேராசிரியர்கள்: கல்லூரிகளில் 'கம்யூனிச பாடம்'; விசாரித்த போலீஸ் அதிர்ச்சி
| காலியாக உள்ளது தலைமை தகவல் ஆணையர் பதவி:லட்சக்கணக்கில் மனுக்கள் தேக்கம் Posted: அரசு துறைகளில், வெளிப்படையான நிர்வாகம் நடைபெறவும், முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், பொதுமக்கள் விரும்பும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, யார் வேண்டுமானா லும், அரசு துறையில், எந்தத் தகவலையும் கேட்டு பெறலாம். பொதுமக்கள் கேட்கும் தகவலை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்காவிட்டால், மேல் அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம்.அந்த மேல் அதிகாரி கள், 45 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். இல்லையெனில், மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்யலாம். பதில் தராத ... |
| Posted: புதுடில்லி: இன்று, உலகம் முழுவதும் நடக்கும், சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில், 200 கோடி பேர் பங்கேற்கவுள்ளனர். டில்லியில், பிரதமர் மோடி தலைமை யில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி, அரசு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்து, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, ஜூன், 21ம் தேதியான இன்றைய தினத்தை, சர்வதேச யோகா தினமாக, ஐ.நா., சபை அறிவித்தது. மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் யோகக் கலையின் பிறப்பிடம், நம் நாடு என்பதால், யோகா தினத்தை ... |
| 'ஸ்மார்ட் சிட்டி' உட்பட மூன்று திட்டங்கள் துவக்கம்: 25ம் தேதி பிரதமர் தலைமையில் விழா Posted: புதுடில்லி: வரும் 25ம் தேதி, டில்லியில், மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று திட்டங்களை துவக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 500 உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் மத்தியில் பேசவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும், சர்வதேச நகரங்களுக்கு இணையாக, 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும், 100 நவீன நகரங்கள் உருவாக்கல் திட்டம், 'அம்ருத்' எனப்படும், 'அடல்' நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்துயிர் அளித்தல் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும், பிரதமர் 'அவாஸ்' திட்டம் (பி.எம்.ஏ.ஒய்.,) ஆகிய மூன்றுக்கும் ... |
| Posted: மும்பை : சர்வதேச யோகா தினம் பின்பற்றப்படுவதாலும், மத்திய அரசு யோகாவை ஊக்குவிப்பதாலும், நாடு முழுவதும் உள்ள யோகா பயிற்சியாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இம்மாதம், 21ம் தேதியை (இன்று) சர்வதேச யோகா தினமாக, ஐ.நா., அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இந்த அறிவிப்பை ஐ.நா., வெளியிட்டது. இதனால், தலைநகர் டில்லியில் இன்று, பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் யோகா தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... |
| தஞ்சையை தவிர்க்கும் ராகுல்: காவிரி பிரச்னை காரணமா? Posted: தஞ்சை விவசாயிகளை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் சந்தித்துப் பேச இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, திருச்சியில் நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.த.மா.கா., சார்பில், தஞ்சையில் காமராஜர் பிறந்த நாள் விழா, அடுத்த மாதம், 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு போட்டியாக, திருச்சியில் நடக்கும் விழாவில், ராகுல் பங்கேற்பார் என, தமிழக காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், தஞ்சை விவசாயிகளுடன், ராகுல் ... |
| அடுத்த இலக்கு பிரதமர் நரேந்திர மோடி: யோகா கற்றுத்தரும் முஸ்லிம் சிறுமி விருப்பம் Posted: பாட்னா : சர்வதேச யோகா தினமான இன்று, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்களுக்கு யோகா சொல்லித் தரவுள்ள, இரு முஸ்லிம் சிறுமியர், அடுத்ததாக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் யோகா கற்றுத்தர விருப்பம் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலம், சம்பரான் மாவட்டம், லால் சரையா கிராமத்தைச் சேர்ந்த, முஸ்லிம் சிறுமியர், ரேஷ்மா காட்டூன், 16, பிஸ்மில்லா காட்டூன், 14. இவ்விருவரும், யோகா கலை மேல் ஏற்பட்ட ஆர்வத்தால், கற்கத் துவங்கி, தற்போது நிபுணத்துவம் பெற்றுள்ளனர். |
| இந்த ஆண்டு இறுதியில் சவுதி செல்கிறார் மோடி Posted: புதுடில்லி: பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதிக்குள் சவுதி அரேபியா செல்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல, மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, சவுதி உள்ளிட்ட மூன்று வளைகுடா நாடுகளுக்கு அவர் செல்வார் என, தெரிகிறது. அரசியல் ரீதியாக, இஸ்ரேல் செல்வதற்கு முன், அரபு நாடுகளுக்கு செல்வது தான் சிறந்தது. ஆனால், இஸ்ரேல் பயண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அடுத்த இரண்டு மாதங்களில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு செல்ல ... |
| அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,600 கோடி: .பணம் வராததால் போக்குவரத்து கழகங்கள் தள்ளாட்டம் Posted: தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், இலவச பஸ் பாஸ், கட்டண சலுகை பஸ் பாஸ்களுக்காக, போக்குவரத்துக் கழகங்களுக்கு, அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 1,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகங்கள், இந்த நிலுவைத்தொகை பாக்கியால் பெரும் தள்ளாட்டத்தில் உள்ளன.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின், எட்டு கோட்டங்களின் சார்பில், 22 ஆயிரத்து 501 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும், 3,531 நகர பேருந்துகளிலும், பிற மாவட்டங்களில், 6,902 நகர பேருந்துகளிலும், 9,164 புறநகர் ... |
| சர்ச்சை மன்னன் லலித் மோடி கைதாவாரா? Posted: புதுடில்லி: பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள லலித் மோடியை, கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக, சர்வதேச போலீசிடம், லலித் மோடியை கைது செய்வதற்கான, 'சிவப்பு அறிக்கை' வெளியிடுமாறு, இந்தியா கோரிக்கை விடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.லலித் மோடி, தற்போது சர்வதேச போலீசின், 'நீல அறிக்கை'யின் கீழ், தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.அவரை கைது செய்வதன் மூலம், பார்லி., மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.இதனிடையே, 'லலித் மோடி ... |
| ஜெ., வழக்கில் நாளை 'அப்பீல்':கர்நாடக அரசு தீவிரம் Posted: பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு, நாளை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது. விடுதலை:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பினால், ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்து, சில வாரங்கள், சிறை தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது. இவரைப்போல், மற்ற மூவரும் சிறைவாசம் அனுபவித்தனர்.பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், மேல் ... |
| Posted: மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு மாணவர்களை தயார்படுத்தி, ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக, கோவை கல்லுாரி பேராசிரியர்கள் நான்கு பேரை, 'நிழல் ஒற்றர்' கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர் உளவுப் போலீசார். பயிற்சிக்குச் சென்றவர்களில் ஒரு மாணவர், பல மாதமாகியும் வீடு திரும்பாதது குறித்து விசாரணை நடக்கிறது.'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற பெருமை பெற்ற கோவை, கடந்த 1998ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரத்துக்குப்பின், நிலைகுலைந்து போனது. அந்த பாதிப்பிலிருந்து பொதுமக்களும், தொழில்துறையினரும் மீள, ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கும் மேலானது.'பயங்கரவாதம் ஓய்ந்தது' என, கோவை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 21,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |