Tamil News | Online Tamil News |
- 'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!
- டில்லி போலீசில் பீகார் அதிகாரிகள்: கெஜ்ரிவால் மீண்டும் அதிரடி
- ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும்
- பருவமழை பற்றாக்குறையாகவே இருக்கும் என கணிப்பு:வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் அதிர்ச்சி தகவல்
- தெலுங்கானா உதய தினவிழாவில் நல திட்டங்கள் அறிவிப்பு
- இன்று கருணாநிதியின் 92வது பிறந்த நாள்:ஆசி பெறுவாரா அழகிரி?
- நாடு முழுவதும் ஜூன் 15 முதல்'ரோமிங்' கட்டணம் 'அவுட்'
- ஒரு ஓட்டுக்கு ஒரு கவுன்சிலர்: அ.தி.மு.க., சூப்பர் திட்டம்
- மோடியை கைது செய்தால் ரூ.100 கோடி சன்மானமாம்: கொக்கரிக்கிறான் சிராஜ் உல் ஹக்
- மி.வா., தலைவர் சாய்குமார் முயற்சியால் ரூ.3,000 கோடி மிச்சம்: அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்காமல் சமாளிப்பு
- ஐ.நா., நிரந்தர உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு சுவீடன் ஆதரவு
- 'எய்ம்ஸ்' இயக்குனர் மீது டாக்டர் புகார்:சுனந்தா மரண மர்மம் சூடு பிடிக்கிறது
- சீனஆற்றில் கப்பல் மூழ்கியதில் 400க்கும் மேற்பட்டோர் பலி
| 'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது! Posted: புதுடில்லி:பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது எனவும், டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் மேகி நுாடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து இறக்கப்படுகின்றன.பீகாரில், 'மேகி' நுாடுல்ஸ்சை வாங்கி ... |
| டில்லி போலீசில் பீகார் அதிகாரிகள்: கெஜ்ரிவால் மீண்டும் அதிரடி Posted: புதுடில்லி:'டில்லி யூனியன் பிரதேசத்தில், நியமனங்கள், பணியிட மாற்றம் போன்ற வற்றிற்கான அதிகாரம் துணை நிலை கவர்னருக்கு தான் உண்டு' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ள நிலையில், டில்லி லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு, பீகாரிலிருந்து ஐந்து போலீஸ் அதிகாரிகளை நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.இதை அறிந்த துணை நிலை கவர்னர் நஜீப் ஜங், 'இதுபோன்ற நியமனங்களை மேற்கொள்ள, எனக்கு தான் அதிகாரம் உண்டு; இத்தகைய நியமனங்களை மேற்கொள்வதற்கு முன் என்னிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும்' என, கண்டிப்புடன், கெஜ்ரிவால் அரசுக்கு ... |
| ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும் Posted: மும்பை:ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்), 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக, வங்கிகள் வழங்கும், வீடு, வாகனம் மற்றும் நிறுவன கடன்களுக்கான வட்டி விகிதம், அதிரடியாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க, நடப்பாண்டில், மூன்றாவது முறையாக, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம், 7.50 ... |
| பருவமழை பற்றாக்குறையாகவே இருக்கும் என கணிப்பு:வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் அதிர்ச்சி தகவல் Posted: புதுடில்லி:'இந்த ஆண்டின் பருவமழை, பற்றாக்குறையாகவே இருக்கும்' என, வானிலை ஆய்வு மைய கணிப்பை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நேற்று அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஏப்ரலில், 'வழக்கத்தை விட, சற்று குறைவாகவே பருவமழை பெய்யும்' என, கணிக்கப்பட்ட நிலையில், நேற்று, 'பற்றாக்குறையாகவே, பருவமழை இருக்கும்' என, கூறப்பட்டுள்ளதால், பீதி ஏற்பட்டு உள்ளது. ஏப்ரலில், 93 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்ட, எல்.பி.ஏ., எனப்படும், நீண்டகால சராசரி மழையளவு, நேற்று, 88 சதவீதம் குறைவாக இருக்கும் என, திருத்தப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், இது ... |
| தெலுங்கானா உதய தினவிழாவில் நல திட்டங்கள் அறிவிப்பு Posted: ஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் உதயமானதன் முதலாமாண்டு விழா, நேற்று, அந்த மாநிலம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. 'ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானாவை பிரித்து, தனி மாநிலமாக்க வேண்டும்' என, கடந்த, 50 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு போராட்டங்கள், உயிர் தியாகங்களுக்கு இடையே, கடந்தாண்டு, தெலுங்கானா, நம் நாட்டின், 29வது மாநிலமாக உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான டி.ஆர்.எஸ்., கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அந்த கட்சியை சேர்ந்த சந்திரசேகர ராவ், முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், தெலுங்கானா ... |
| இன்று கருணாநிதியின் 92வது பிறந்த நாள்:ஆசி பெறுவாரா அழகிரி? Posted: 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, இன்று அவரை சந்தித்து, ஆசி பெறக்கூடும்' என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 'கேக்' வெட்டி... கருணாநிதி தன், 92வது பிறந்த நாளை ஒட்டி, இன்று அதிகாலை 4:30 மணிக்கு, சி.ஐ.டி., காலனி இல்லத்தில், துணைவி ராஜாத்தி, மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் குடும்பத்தினர், கட்சி பிரமுகர்களுடன், தன் பிறந்தநாள் விழாவை, 'கேக்' வெட்டி கொண்டாடுகிறார்.முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கடந்த சில நாட்களாக, சென்னையில் தங்கியிருக்கிறார். அதனால் அவர், கருணாநிதியை நேரில் சந்தித்து, ஆசி ... |
| நாடு முழுவதும் ஜூன் 15 முதல்'ரோமிங்' கட்டணம் 'அவுட்' Posted: புதுடில்லி:'நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் அலைபேசி சேவையில் ரோமிங் கட்டணம் ரத்து' என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓராண்டு நிறைவையொட்டி பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவையில் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும், இந்த இலவச ரோமிங் சேவை பி.எஸ்.என்.எல்., அலைபேசி தொடர்புகளுக்கு மட்டும் தான்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அலைபேசி ... |
| ஒரு ஓட்டுக்கு ஒரு கவுன்சிலர்: அ.தி.மு.க., சூப்பர் திட்டம் Posted: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, அ.தி.மு.க.,வினர் படு தீவிரமாக களம் இறங்க உள்ளனர். பிரசாரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக, அமைச்சர்கள் அடங்கிய, 50 பேர் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், சென்னை, தண்டையார்பேட்டையில், நேற்று முன்தினம் மாலை துவங்கி, மறுநாள் அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.முதலில் நடந்த கூட்டத்தில், யார் யாருக்கு எந்த பொறுப்பு ... |
| மோடியை கைது செய்தால் ரூ.100 கோடி சன்மானமாம்: கொக்கரிக்கிறான் சிராஜ் உல் ஹக் Posted: ரவாலாகோட் : ''இந்திய பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு, 100 கோடி ரூபாய் சன்மானம் வழங்குவேன்,'' என, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான, ஜமாயத் - இ - இஸ்லாமி கட்சித் தலைவன் சிராஜ் உல் ஹக் கொக்கரித்துள்ளான்.பாகிஸ்தான் பார்லிமென்டின் கீழ்சபையான, தேசிய அசம்பிளியின், 342 எம்.பி.,க்களில், நான்கு எம்.பி.,க்களை கொண்டுள்ளது, ஜமாயத் - இ - இஸ்லாமி கட்சி. எனினும், இக்கட்சி தலைவர்களின், பயங்கரவாத ஆதரவு பேச்சால், இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் நல்ல செல்வாக்கு உள்ளது.இதனால், மேடைதோறும், இந்தியா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் ... |
| Posted: தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சாய்குமாரின் முயற்சியால், கடந்த, ஆறு மாதங்களாக, தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், ஒரு மாதத்திற்கு, 500 கோடி ரூபாய் என, ஆறு மாதத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதற்கு, காரணமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய்குமாரை, மின் வாரிய ஊழியர்கள் பாராட்டி உள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம், தனியார் நிறுவனங்களான, மதுரை பவர், 106 மெகாவாட்; லேன்கோ, 113.2; பயோனிர் பவர், 52.8; எஸ்.டி.சி.எம்.எஸ்., 250; ஜி.எம்.ஆர்., 196; சமல்பட்டி, 105.66; பிள்ளை பெருமாள் நல்லுார், 330.50 என, 1,154 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ... |
| ஐ.நா., நிரந்தர உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு சுவீடன் ஆதரவு Posted: ஸ்டாக்ஹோம்:ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சுவீடன் ஆதரவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன் சென்றுள்ளார். அங்குள்ள தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறார்.நேற்று சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார்.அப்போது அவர் ஜனாதிபதியிடம் கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதே சுவீடனின் கோரிக்கை. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி ... |
| 'எய்ம்ஸ்' இயக்குனர் மீது டாக்டர் புகார்:சுனந்தா மரண மர்மம் சூடு பிடிக்கிறது Posted: புதுடில்லி:''சசிதரூர் மனைவி சுனந்தா மரணம், இயற்கையாக நடந்தது என, அறிக்கை தரும்படி, 'எய்ம்ஸ்' இயக்குனர் எனக்கு நெருக்கடி கொடுத்தார்,'' என, டாக்டர் சுதிர் குப்தா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். காங்கிரசைச் சேர்ந்தவரும், முன்னள் மத்திய அமைச்சருமான,சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்தாண்டு மர்மமான முறையில் இறந்தார். 'சுனந்தா மரணத்துக்கு, சசிதரூர் தான் காரணம்' என, புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த, டாக்டர் சுதிர் குப்தா கூறியுள்ளதாவது:சசிதரூருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனையின் ... |
| சீனஆற்றில் கப்பல் மூழ்கியதில் 400க்கும் மேற்பட்டோர் பலி Posted: பீஜிங்:ஆசியாவின் நீளமான நதியான சீனாவின் யாங்ட்சி நதியில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் முதியோர். திடீரென வீசிய சூறாவளியில் சிக்கிய சொகுசு கப்பல், ஆற்றில் மூழ்கியதாக உயிர் தப்பிய கேப்டன் கூறியுள்ளார். சீனாவின் பல நகரங்களைச் சேர்ந்தவர்கள் 6,300 கி.மீ., நீள, யாங்ட்சி நதியில் உல்லாச பயணம் மேற்கொண்டு கடந்த சில நாட்களாக நான்கு மாடிகளை கொண்ட சொகுசு கப்பலில் பயணித்தனர். ஒவ்வொரு நகரமாக சென்று வந்த அவர்களில் பெரும்பாலானோர் 55 வயதை தாண்டியவர்கள்.முப்பது மீட்டருக்கு தண்ணீர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 03,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |