Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் அசத்தல்: 200க்கு 200 எடுத்து முதலிடம் பெற்ற 23 பேரில் ஒருவர்

Posted:

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.

*குமாரபாளையத்தைச் சேர்ந்த ...

பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: பொதுமக்களின் தங்க தாகத்திற்கு தடை போட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, தங்க பத்திரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து, முதிர்ச்சியின் போது, தங்கத்திற்கு ஈடாக பணம் பெற வசதி செய்யப்பட உள்ளது.தங்கத்தின் மீதான தணியாத ஆசையால், முடிந்த அளவுக்கு தங்கத்தை வீட்டில் இருப்பு வைத்துக் கொள்வதை நம்மவர்கள் வழக்கமாக கொண்டுஉள்ளனர். அவசர காலத்தில், எளிதாக பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதால், பொதுமக்கள் தங்களின் முதலீட்டில், தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ...

அடுத்த 2 - 3 ஆண்டுகள் சிரமமான ஆண்டுகளே!

Posted:

வாஷிங்டன்: பத்து நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த அருண் ஜெட்லி, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை, அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்திடம் பட்டியலிட்டு, அதிக முதலீடுகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஈர்த்து வருகிறார்.அந்த வகையில், அமெரிக்க நிதியமைச்சர் திமோதி கெய்த்னர் மற்றும் பொருளாதார அறிஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அருண் ஜெட்லி நேற்று பேசியதன் முக்கிய அம்சங்களாவன:

கட்சியை விட உயர்ந்தவர் மோடி:
நடந்து முடிந்த, 2014 லோக்சபா ...

பதவி இருக்கு; வசிக்க பங்களா இல்லை: ஊரகத்துறை அமைச்சர் சவுத்ரி புலம்பல்

Posted:

புதுடில்லி: மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், 'பதவியேற்று, ஏழு மாதங்களான பின்னரும், எனக்கு, அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை' என, சோகத்துடன் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில், கேபினட் அந்தஸ்து கொண்ட, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக, சவுத்ரி பிரேந்தர் சிங் பதவி வகித்து வருகிறார். டில்லியில் நேற்று, வீட்டு வசதி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சவுத்ரி பேசியதாவது:ஒவ்வொரு மனிதருக்கும், உணவு, உடை, இருக்க வீடு, மிகவும் அவசியம். இவை மூன்றும் கிடைத்தால், ஒரு மனிதனின் செயல் திறன் நிச்சயம் அதிகரிக்கும்.ஆனால், மத்திய கேபினட் ...

'பாரத ரத்னா' விருதை திருப்பி ஒப்படைக்க வேண்டும்: டெண்டுல்கருக்கு எதிராக வழக்கு

Posted:

போபால்: நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் அதை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதால், திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, ம.பி., உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2013, நவம்பரில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, சச்சின் டெண்டுல்கர், 42, ஓய்வுபெற்றார். கடந்த பிப்ரவரியில், பாரத ரத்னா விருது டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தற்போது அவிவா லைப் இன்சூரன்ஸ், பூஸ்ட், எம்.ஆர்.எப்., லுாமினஸ் உள்ளிட்ட, 12 நிறுவனங்களின் விளம்பர படங்களில் சச்சின் ...

உதவி கமிஷனர் ஆர்.கே.நகரில் பிரசாரம்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா?

Posted:

சேலம் சூரமங்கலம், போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த காட்சி, 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவியது.இதையடுத்து, அரசு பணியில் உள்ள அவர் மீது, தேர்தல் ஆணையம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சேலம் மாநகரில், மேற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் கணேசன். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினருடன் இணைந்து, இவர் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்சி, தமிழகம் முழுவதும் புகைப்படத்துடன், 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவியது.இதை கண்டித்து, பா.ம.க., ...

'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்பினால் தண்டனை? 'பேஸ்புக்' நிறுவனத்தை நாடியது தமிழக சைபர் கிரைம்

Posted:

அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.இணையதளங்களை விட, வாட்ஸ் ஆப் பதிவுகள், காட்டுத் தீ போல, சில நிமிடங்களில் நாடு முழுவதும் பரவுகின்றன. இதில், பல சமூக அக்கறை கருத்துகள் இருந்தாலும், தீய நோக்கத்தோடு செய்யப்படும் பதிவுகள், அதிகரித்து வருகின்றன.சில நாட்களுக்கு முன், சில தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு, 'இவை தீவிரவாதிகளின் எண்கள்; இதைத் தொடர்பு கொண்டால், குண்டு வைப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கும். எனவே, இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, ...

சகாரா அதிபருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின்: ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தினால் வெளியே வரலாம்

Posted:

புதுடில்லி: நிதி மோசடி வழக்கில், திகார் சிறையில் அடைபட்டிருக்கும், சகாரா குழும அதிபர் சுப்ரதா ராய், 5,000 கோடி ரூபாய் ரொக்கம், அதே தொகைக்கான வங்கி உத்தரவாதம் அளித்தால் ஜாமின் வழங்கப்படுமென, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சகாரா குழும நிதி நிறுவனத்தில், லட்சக்கணக்கானோர், 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். இதற்கு வட்டி, அசல் தராமல் மோசடி செய்ததாக, ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இவ்வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், 65, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முதலீட்டாளர்களிடம் ...

திரிசங்கு நிலையில் உடன்குடி மின் திட்டம்: கருணாநிதி

Posted:

சென்னை: 'உடன்குடி மின் திட்டம் திரிசங்கு நிலையில் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு, 1,360 ரூபாயாக உள்ளது. குவிண்டாலுக்கு, 50 ரூபாய் உயர்த்தி, இந்த ஆண்டுக்கான விலையாக, 1,410 ரூபாய் வழங்க, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நெல் விலையை குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் என்ற அளவிலாவது நிர்ணயிக்க வேண்டும்.பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்த, என் பெயரை நீக்க, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்காக, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்வது, அ.தி.மு.க., ஆட்சியினருக்கு, கை ...

சுஷ்மா, வசுந்தரா ராஜே பதவிக்கு ஆபத்தில்லை

Posted:

புதுடில்லி: 'மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை, பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை; அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை' என, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு உதவியதாக, வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுபோல, ராஜஸ்தான், பா.ஜ., முதல்வர் சுஷ்மா சுவராஜ் மீதும், லலித் மோடிக்கு மறைமுகமாக உதவியதாக புகார்கள் எழுந்தன.இதனால், அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை, பா.ஜ., மேலிடம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™