Tamil News | Online Tamil News |
- 90 சீட்: தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., நிபந்தனை: கருணாநிதியின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல்
- சபாஷ் மிதுன்: மோசடி நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை ஒப்படைத்தார்: சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்
- ஏற்றுமதி, இறக்குமதி மே மாதத்தில் கடும் வீழ்ச்சி
- தங்களுக்கு ஒரு நீதி... பிறருக்கு ஒரு நீதியா...?
- தமிழக சிறுமியர் ஆந்திரா, புதுச்சேரியில் ஏலம்: வீட்டு வேலைக்கு சென்ற மூன்று பேர் சாவு
- பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் உண்டா?
- ராணுவத்தை தூண்டிவிடுகிறாரா ராஜபக் ஷே?
- 'செல்பி' எடுப்பதே வேலையா? அதுவும் மனநோய் தான்
- 2 நாள் போலீஸ் காவலில் டி.எஸ்.பி., தங்கவேலு: கடத்தல் பெரும்புள்ளிகள் சிக்குவரா?
- மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ராக்கெட்: இந்தியாவுக்கு செலவு குறையும்
| 90 சீட்: தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., நிபந்தனை: கருணாநிதியின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல் Posted: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை இணைப்பதற்கு, அக்கட்சித் தரப்பில், சட்டசபை தேர்தலில், 90 'சீட்' உட்பட சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கருணாநிதியின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தற்போது அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அக்கட்சியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் உள்ளன. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க., தரப்பு பலமான கூட்டணியை ஏற்படுத்தும் பட்சத்தில், அந்த கூட்டணியை வலுவில்லாமல் எதிர்க்க, தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகள் தயாரில்லை.
|
| Posted: கோல்கட்டா:ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, சாரதா சிட்பண்ட் நிறுவனத்திடம் வாங்கிய, 1.2 கோடி ரூபாயை, நடிகரும், எம்.பி.,யுமான மிதுன் சக்ரவர்த்தி, அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்தார். நிதி மோசடி தொடர்பான விவகாரத்தில், பணத்தை திருப்பி அளித்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ள, மிதுன் சக்ரவர்த்தியின் செயல், அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் மிதுன்சக்ரவர்த்தி, 65; 'டிஸ்கோ டான்சர்' உட்பட,ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக, படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், மேற்குவங்கத்தின் ஆளுங்கட்சியான, திரிணமுல் ... |
| ஏற்றுமதி, இறக்குமதி மே மாதத்தில் கடும் வீழ்ச்சி Posted: புதுடில்லி: கடந்த மே மாதம், நாட்டின் ஏற்றுமதி, 20.19 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இந்த காலகட்டத்தில், 22.34 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கே ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது, தொடர்ந்து ஆறாவது மாதமாக ஏற்றுமதி அடைந்து வரும் வீழ்ச்சியை காட்டுகிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவையே, ஏற்றுமதி வீழ்ச்சிக்கு காரணம். இதற்கு முன் இந்திய ஏற்றுமதி, கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் தான் முன்னேற்றம் அடைந்திருந்தது.அப்போது, 7.27 சதவீதம் வளர்ச்சியை காண்பித்த இந்திய ஏற்றுமதி, ... |
| தங்களுக்கு ஒரு நீதி... பிறருக்கு ஒரு நீதியா...? Posted: 'பிரதமரின் மவுனத்தை, ஏற்க முடியாது. மத்திய அரசின் மீது, நம்பிக்கை இல்லை. எனவே, சுப்ரீம்கோர்ட் கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, லலித் மோடி விவகாரத்தை, விசாரிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கோரியுள்ளது.இதுகுறித்து, நேற்று டில்லியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, நிருபர்களிடம் கூறியதாவது: லலித்மோடி, இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி. அவருக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சுஷ்மா உதவியிருப்பதன் மூலம், சட்டம் மீறப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டில், மருத்துவமனையில், அவசர அறுவை சிகிச்சைக்காக ... |
| தமிழக சிறுமியர் ஆந்திரா, புதுச்சேரியில் ஏலம்: வீட்டு வேலைக்கு சென்ற மூன்று பேர் சாவு Posted: 'தமிழகத்தில் இருந்து வீட்டு வேலைக்கு, ஏல முறையில் சிறுமியரைக் கொண்டு செல்வது, கேரளா மட்டும் அல்லாமல், ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலும் நடந்து வருகிறது' என்ற அதிர்ச்சி தகவலை, தொண்டு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. |
| பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் உண்டா? Posted: தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், வரும், 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், வரும், 22ம் தேதி தான் திறக்கப்படுகின்றன. எனவே, இந்த பள்ளி நிர்வாகிகளும் விழி பிதுங்கியுள்ளனர்.சர்வதேச யோகா தினம் குறித்து, தமிழக அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு, இதுவரை அதிகாரபூர்வ வழிகாட்டுதல் வரவில்லை.யோகா தொடர்பான பொது நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்த விரும்பினால், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி முடிவெடுத்துக் கொள்ளலாம் என, மாவட்ட முதன்மை கல்வி ... |
| ராணுவத்தை தூண்டிவிடுகிறாரா ராஜபக் ஷே? Posted: இலங்கையில், அண்மையில் நடந்த தேர்தலில், அதிபர் பதவியை இழந்த மகிந்த ராஜபக் ஷே, தன் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது பாய்ந்துள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க, அரசில் ஒரு உயர் பதவியை பிடிக்க திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. |
| 'செல்பி' எடுப்பதே வேலையா? அதுவும் மனநோய் தான் Posted: மொபைல் போன் மூலம் தன்னை தானே போட்டோ எடுக்கும், 'செல்பி' என்ற நடவடிக்கையை வழக்கமாக கொண்டிருப்பதும் மன நோய்; கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து விடுபடுவது நல்லது என, அமெரிக்க மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். மொபைல் போன் மூலமும் கேமரா மூலமும் தன்னைத் தானே, 'செல்பி' படம் எடுத்து, சமூக வலை தளங்களில் அதை பதிவேற்றம் செய்வது, இளைஞர்களிடம் பொழுதுபோக்காக இருந்தது. இது தற்போது, அவர்களின் முழுநேர பணியாகவும் மாறி வருகிறது. இது, மனநோய் தான் என்கின்றனர், அமெரிக்க மனநல மருத்துவர்கள். இதை, மூன்று வகையாகவும் பிரித்து உள்ளனர்.* தினமும், மூன்று முறை, 'செல்பி' படம் ... |
| 2 நாள் போலீஸ் காவலில் டி.எஸ்.பி., தங்கவேலு: கடத்தல் பெரும்புள்ளிகள் சிக்குவரா? Posted: வேலுார்: செம்மரக் கடத்தலில் சிக்கிய டி.எஸ்.பி., தங்கவேலுவிடம், இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த விசாரணையில், செம்மரக் கடத்தலின் பின்னால் உள்ள பெரும்புள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, பாலுார் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன், கடந்த மாதம் 27ம் தேதி, படுகொலை செய்யப்பட்டார். செம்மரக் கடத்தலில் ஏற்பட்ட மோதல் சம்பவமே, கொலைக்கு காரணம் என, தெரியவந்தது. |
| மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ராக்கெட்: இந்தியாவுக்கு செலவு குறையும் Posted: புதுடில்லி: விண்ணில் துணைக்கோள்களை நிறுவ மீண்டும் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ராக்கெட்டுகளை பயன்படுத்த "இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இதனால் துணைக் கோள்களை நிறுவ ஆகும் செலவு கணிசமாக குறையும். இந்த தொழில்நுட்பத்தில் முதலாவதாக ஆஸ்ட்ரோசாட் எனப்படும் துணைக்கோளை அனுப்ப முடிவு செய்துள்ளது. மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ராக்கெட்டால் பத்தில் ஒரு பங்கு செலவு குறையும் என்று "இஸ்ரோ' மேலும் கூறியுள்ளது. ஆஸ்ட்ரோசாட்- ன் ஒரு பகுதியை சரி செய்ய தாமதம் ஆனதாகவும் தற்போது சரி செய்யப்பட்டு செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாகவும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |