Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி: மத்திய அரசிடம் டெப்ராய் கமிட்டி பரிந்துரை

Posted:

புதுடில்லி : ரயில்வே துறையை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரையின் படி ஏற்படுத்தப்பட்ட, டெப்ராய் கமிட்டி, தன் அறிக்கையை நேற்று மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், 'பயணிகள் ரயில்களை இயக்க, தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்; ரயில் பெட்டிகள் தயாரிப்பு, இன்ஜின் தயாரிப்பிலும், தனியார் துறைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்' என்பன போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.திட்டக்கமிஷனுக்கு மாற்றாக, மத்திய அரசு துவக்கியுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான, பொருளாதார வல்லுனர், தீபக் டெப்ராய் தலைமையில் வல்லுனர்கள் குழு, கடந்த ...

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை: மோடிக்கு முஸ்லிம் தலைவர் கடிதம்

Posted:

புதுடில்லி : மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக, பரவலாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இத்தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, முஸ்லிம் மதத் தலைவர்களில் ஒருவரான, மவுலானா தவுகீர் ரஸாகானா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ஜ., ஆளும் மகாராஷ்டிராவில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, மாட்டிறைச்சி வியாபாரிகளும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், அம்மாநிலத்தில், மாட்டிறைச்சிக்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.இந்நிலையில், இத்தேஹாத் இ - ...

தொழில் முனைவோரை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் முந்துகிறது: நடைமுறை சிக்கல்களால் தமிழகத்தில் புதிய முதலீடுகளுக்கு ஆபத்து

Posted:

தமிழக முதலீட்டாளர்களை ஈர்த்து தங்கள் மாநிலங்களில் முதலீடுகளை குவிக்க ஆந்திராவும், தெலுங்கானாவும் போட்டி போடுகின்றன. தாராளமான சலுகைகளுடன் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளதன் மூலம் தமிழகத்தில் புதிய முதலீடுகள் குறையும். இந்த சிக்கலை தீர்க்க, அனுமதி உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை தமிழக அரசு தீர்ப்பது அவசியம் என தொழில் துறையினர் கருதுகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மின்வெட்டு, தொழில் துறையை பெரிதும் பாதித்தது. தற்போது மின்வெட்டு சிக்கல் தீர்ந்தாலும் பெரிய அளவில் முதலீடுகள் இல்லை.ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ...

மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு 4வது இடம்: முதலிடத்தை பிடித்து சண்டிகார் அசத்தல்

Posted:

புதுடில்லி : நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்குநான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது.எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும், அவர்களின் விருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ...

தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது ஏன்? கருணாநிதி விளக்கம்

Posted:

சென்னை : 'தேர்தல் அறிவித்த பின், ஆர்.கே.நகரில், நடக்கும் வளர்ச்சிப் பணிகளை, தேர்தல் ஆணையம், தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்ற தகவலே, எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க காரணம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆர்.கே.நகரில், சாலைகள் புதுப் பொலிவு பெற்றுள்ளன; ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது; மாநகராட்சி அலுவலகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.இரவு, பகலாக, அரசு அதிகாரிகள் மேற்பார்வையில், இப்பணிகள் நடக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்த பின் ...

மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பு: செத்து ஒதுங்கும் மீன்களால் மீனவர்கள் அதிர்ச்சி

Posted:

மேட்டூர் : கர்நாடக மாநில கழிவுநீர், மேட்டூர் அணை யில் கலப்பதால், அணை நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், அணையில் வாழும் சிறு மீன்கள், சுவாசிக்க முடியாமல், குவியல் குவியலாக இறந்து, கரை ஒதுங்குவது, மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும்...:
சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. அணையில், மீன்வளத்துறை சார்பில், ஆண்டுதோறும், 25 லட்சம் முதல், 30 லட்சம், 'கட்லா, மிர்கால், ரோகு' ஆகிய மீன் குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகின்றன.அணையில், மீன்வளத்துறை உரிமம் பெற்று, 2,000 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ...

வலுவிழக்கும் 'மாஜி'க்கள் வழக்கு: முடுக்கி விடப்படும் லஞ்ச ஒழிப்பு துறை

Posted:

முன்னாள் தி.மு.க., அமைச்சர்கள் மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் வலுவிழந்து வருவதால், ஆளுங்கட்சி வட்டாரத்தில் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு:
கடந்த தி.மு.க., ஆட்சி யில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர்; நிறைய விவரங்களையும், ஆவணங்களையும் திரட்டினர்.அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட ...

குப்பையை அள்ளும் விஷயத்திலும் 'கமிஷன்': 3 சக்கர சைக்கிள் வாங்கும் டெண்டரில் முறைகேடு?

Posted:

கிராம ஊராட்சிகளில் குப்பையை அள்ள, மூன்று சக்கர சைக்கிள் வாங்கும், டெண்டரில், சைக்கிள் உற்பத்தியில் தொடர்பில்லாதவர்கள் எல்லாம் பங்கேற்றுள்ளனர்.கிராம ஊராட்சிகளில், குப்பையை அள்ள, மூன்று சக்கர சைக்கிள் வாங்க, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, இத்தொகை, 160 கோடி ரூபாயாக, அதிகரிக்கப்பட்டு உள்ளது.ஒதுக்கீட்டுத் தொகையில், மத்திய அரசு, 60; மாநில அரசு, 30; உள்ளாட்சி அமைப்புகள், 10 சதவீத நிதி அளிக்க வேண்டும்.முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட, 40 கோடி ரூபாயை கொண்டு, சென்னை மாவட்டம் தவிர, 31 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, கிராம ஊராட்சிகளில், மூன்று சக்கர சைக்கிள் வாங்க, ...

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 28 பேர்: இறுதி பட்டியல் வெளியானதால் பிரசாரம் சூடுபிடிப்பு

Posted:

சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, 28 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த மாதம், 23ம் தேதி, தமிழக முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்றார்.

ராஜினாமா:
அவர் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட வேண் டும் என்பதற்கு வசதியாக, ஆர்.கே.நகர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி வேல், தன் பதவியை, ராஜினாமா செய்தார்.காலியான தொகுதிக்கு, இம்மாதம் 27ம் தேதி, இடைத்தேர்தல் ...

ஆந்திரா - தெலுங்கானா விவகாரங்கள் கவர்னரிடம் ஒப்படைப்பு: முதல்வர்களின் 'குடுமிப்பிடி'க்கு மத்திய அரசு தீர்வு

Posted:

ஐதராபாத்: தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர்சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது, மிகவும் சிக்கலான பிரச்னை என்பதால், இருவரையும்சமரசப்படுத்தும் பொறுப்பை, அம்மாநிலங்களின் கவர்னர் நரசிம்மனிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத் தில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்தாண்டு தனி தெலுங்கானா மாநிலம் உதயமானது; இது, இந்தியாவின், 29வது மாநிலம் என்ற பெருமையையும் பெற்றது. மாநில பிரிவினையின்போது, 'அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, ஆந்திரா - தெலுங்கானா ஆகிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™