Tamil News | Online Tamil News |
- கேரள அரசின் மனுவை நிராகரிங்க:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- விமான நிலையத்தில் ஏன் துப்பாக்கி சூடு?
- செம்மரம் கடத்தல் டி.எஸ்.பி., பரபரப்பு வாக்குமூலம்: கோடிக்கணக்கில் கமிஷன் அள்ளியது அம்பலம்
- 23 சதவீதம் பேரின் ரத்தத்தில் காரீய நச்சு : இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில் 'பகீர்!'
- என் அதிகாரத்தில் தலையிடாதீங்க: உள்துறை அமைச்சகத்திற்கு கெஜ்ரிவால் கடிதம்
- டில்லி சட்டத்துறை அமைச்சராக இருந்த தோமரை தொடர்ந்து பி.ஏ., படித்ததாக மகா., அமைச்சர் 'டுபாக்கூர்!'
- அதிகாரிகளுடன் 'அப்பாயின்ட்மென்ட்!' இணையதளத்தில் கேட்கலாம்
- மியான்மர் தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகள் திட்டம்
- ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் முகாம்: தலைமை செயலகம் 'வெறிச்'
- தி.மு.க., தேர்தல் நிதி வசூல்: சென்னை தொழிலதிபர்கள் ஓட்டம்
| கேரள அரசின் மனுவை நிராகரிங்க:பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: சென்னை:'புதிதாக முல்லைப் பெரியாறு அணை கட்ட, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கேரள அரசு அளித்துள்ள விண்ணப்பத்தை நிராகரித்து, திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:'முல்லைப் பெரியாறு அணை, அனைத்து வகையிலும், பாதுகாப்பாகவும், உறுதியாகவும் உள்ளது' என, 2014 மே, 7ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, கேரளா சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவும், டிச., 2ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, முல்லைப் ... |
| விமான நிலையத்தில் ஏன் துப்பாக்கி சூடு? Posted: கோழிக்கோடு:கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் எனப்படும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக் கும், விமான நிலைய தீயணைப்பு படையினருக் கும் இடையே ஏற்பட்ட மோதலில், சி.ஐ.எஸ்.எப்., வீரர் ஒருவர் இறந்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவில் மூடப்பட்டிருந்த விமான நிலையம், நேற்று வழக்கம் போல இயங்கியது. கொலைக்கு காரணமான 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், விமான நிலைய பாதுகாப்பை, மாநில போலீசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.காங்கிரசை சேர்ந்த முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான கேரளாவின் ... |
| செம்மரம் கடத்தல் டி.எஸ்.பி., பரபரப்பு வாக்குமூலம்: கோடிக்கணக்கில் கமிஷன் அள்ளியது அம்பலம் Posted: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதான, டி.எஸ்.பி., தங்கவேலு, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். செம்மரம் கடத்தலில், அ.தி.மு.க., பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட, 37 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். செம்மரம் கடத்தல் கும்பலை மிரட்டி கோடிக்கணக்கில், அவர் கமிஷன் அள்ளியதும் அம்பலமாகி உள்ளது. வேலுார் மாவட்டம், மாதனுாரை அடுத்த பாலுாரைச் சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் சின்னப்பையன், செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் முன்விரோதம் காரணமாக, சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இதில், வேலுார் கலால் பிரிவு டி.எஸ்.பி., தங்கவேலுவுக்கும் தொடர்பு ... |
| 23 சதவீதம் பேரின் ரத்தத்தில் காரீய நச்சு : இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில் 'பகீர்!' Posted: புதுடில்லி : கண்ணுக்கே தெரியாமல், உணர்வுகளும் அறியாமல், காரீயம் என்ற நச்சு, நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, ரத்தத்தை விஷமாக்கி வரும் அதிர்ச்சி தகவலை, உலக சுகாதார அமைப்பான, டபிள்யு.எச்.ஓ., வெளியிட்டு உள்ளது; இதனால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அவர்களின் புத்திசாலித்தனம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.'நெஸ்லே இந்தியா' என்ற நிறுவனத்தின் தயாரிப்பான, 'மேகி' நுாடுல்ஸ்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, காரீயம் என்ற நச்சும், எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளூட்டாமேட்' என்ற ரசாயனமும் உள்ளதாக, பரிசோதனையில் சமீபத்தில் ... |
| என் அதிகாரத்தில் தலையிடாதீங்க: உள்துறை அமைச்சகத்திற்கு கெஜ்ரிவால் கடிதம் Posted: புதுடில்லி: 'டில்லி யூனியன் பிரதேச அதிகாரங்களில் தலையிட வேண்டாம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடிதம் எழுதியுள்ளார். |
| டில்லி சட்டத்துறை அமைச்சராக இருந்த தோமரை தொடர்ந்து பி.ஏ., படித்ததாக மகா., அமைச்சர் 'டுபாக்கூர்!' Posted: மும்பை : டில்லியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தோமர், போலி சான்றிதழ் சர்ச்சையில் கைதாகியுள்ள நிலையில், அது போன்றதொரு விவகாரம், மகாராஷ்டிராவிலும் வெடித்துள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிராவில், சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர், பாபன்ராவ் லோனிகர். இவர், 2004, 2009 சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில், பி.ஏ., முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார். 2014 சட்டசபைத் தேர்தலில், ஐந்தாம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி ... |
| அதிகாரிகளுடன் 'அப்பாயின்ட்மென்ட்!' இணையதளத்தில் கேட்கலாம் Posted: புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகளை மக்கள் சந்திக்க மத்திய அரசு புதுமுயற்சி மேற்கொண்டுள்ளன.குறிப்பிட்ட நேரத்தில், 'அப்பாயின்ட்மென்ட்' பெற்று, காலதாமதமின்றி அதிகாரியை சந்திக்க முடியும். |
| மியான்மர் தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகள் திட்டம் Posted: புதுடில்லி : மியான்மர் நாட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தரும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவு துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களில், உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், இம்மாதம் 4ம் தேதி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது, உள்நாட்டு, பிரிவினைவாத தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 18 வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், ... |
| ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் முகாம்: தலைமை செயலகம் 'வெறிச்' Posted: சென்னை : அமைச்சர்கள் யாரும் வராததால், தலைமைச் செயலகம், வெறிச்சோடி காணப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர், 27ம் தேதி, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.அதன்பின் அமைச்சர்கள், தலைமைச் செயலகத்திற்கு வருவது குறைந்தது. கோவில்களில் வழிபாடு நடத்துவதிலேயே, நேரத்தை செலவிட்டனர்.கடந்த மாதம், 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். எனவே, மீண்டும் அமைச்சர்கள் தவறாமல், தலைமைச் செயலகம் வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ... |
| தி.மு.க., தேர்தல் நிதி வசூல்: சென்னை தொழிலதிபர்கள் ஓட்டம் Posted: தேர்தல் நிதி வசூலிக்க, தி.மு.க.,வில் உள்ள வெளியூர் மாவட்ட செயலர்களில் சிலர், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களின் நச்சரிப்புக்கு தாக்குபிடிக்க முடியாமல், சென்னையில் உள்ள தொழிலதிபர்கள், வெளியூர்களுக்கு ஓட்டம் பிடிப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி, ஆளுங்கட்சிக்கு இணையாக தேர்தல் செலவுகளை ஈடுகட்ட, தி.மு.க., தேர்தல் நிதி வசூலிக்கிறது.குறைந்தபட்சம், 200 கோடி ரூபாய் வரை, தேர்தல் நிதி திரட்டுவது என, இலக்கு நிர்ணயித்து தி.மு.க.,வினர் செயலாற்றுகின்றனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும் கட்சியினர், தேர்தல் நிதி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 12,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |