Tamil News | Online Tamil News |
- தொழிற்சாலைகளுக்கான மின் வெட்டு தற்காலிகமாக நீங்கியது: செப்டம்பர் மாதம் வரை கவலையில்லை
- கல்லூரிகளில் இன்னமும் தொடரும் 'ராகிங்' கொடுமை: பதிவாகும் புகார்களில் 6 சதவீதமே வழக்காகும் அவலம்
- தகுதியில்லாத நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராஜா வழங்கினார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
- ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து 'அப்பீல்': கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- தி.மு.க., தேர்தல் நிதி: ரூ.6.81 கோடி வசூல்- கருணாநிதி
- 'டிஜிட்டல் இந்தியா' தூதர் முன்னாள் ஜனாதிபதி கலாம்?
- ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: பாக்., ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொடூர சித்ரவதை
- விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடிய கலெக்டர்: கடைசி வரை உதவாத '108' ஆம்புலன்ஸ்
- அமெரிக்கா - சீனா இடையே போர் வெடிக்குமா?
- இந்தியா குறித்து பாக்., புகார்? அமெரிக்காவிடம் 'பஞ்சாயத்து'
- ஜி.எஸ்.டி.,க்கு திடீர் ஆதரவு ஏன்?
- "கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?
- தள்ளி போகிறது தென்மேற்கு பருவ மழை: வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்யும்
| தொழிற்சாலைகளுக்கான மின் வெட்டு தற்காலிகமாக நீங்கியது: செப்டம்பர் மாதம் வரை கவலையில்லை Posted: புதிய அனல் மின் நிலையங்கள்; காற்றாலைகளில் இருந்து அதிகளவில் மின்சாரம் கிடைப்பதால் வரும் 5ம் தேதி முதல் தொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு மின் தடையை ரத்து செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தொழிற்சாலை 6.10 லட்சம்; வணிகம் 30.43 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தமிழகத்தில் 2008ல் மின் பற்றாக்குறை ஏற்பட்டதால் மின் தடை அமல்படுத்தப்பட்டது.அதன்படி வீடுகளுக்கு சுழற்சி முறையில் சென்னையில் இரண்டு மணி நேரம்; மற்ற இடங்களில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்ச மின் தேவை ... |
| கல்லூரிகளில் இன்னமும் தொடரும் 'ராகிங்' கொடுமை: பதிவாகும் புகார்களில் 6 சதவீதமே வழக்காகும் அவலம் Posted: புதுடில்லி: 'ராகிங்' செய்வது கடுமையான குற்றம் என, சட்டம் இயற்றப்பட்ட பின்னும், கல்லுாரிகளில், இன்னமும் ராகிங் கொடுமை நடந்து வருகிறது. கடந்த 2013 மற்றும் 2014ல், 1,183 ராகிங் குற்றங்கள் நடைபெற்றுள்ள கொடுமை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்து உள்ளது. அதில், 6 சதவீத புகார்களே, குற்ற வழக்குகளாக மாறியுள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.'திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை உணர்த்துவது போல, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களாக பார்த்து திருந்தாவிட்டால், ராகிங்கை ஒழிக்க முடியாது என்பது விளங்குகிறது. |
| தகுதியில்லாத நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராஜா வழங்கினார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு Posted: புதுடில்லி: 'முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, தகுதியற்ற நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக, '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கினார்' என, அமலாக்கத் துறை தரப்பில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டதற்கு கைமாறாக, கலைஞர் 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்த வழக்கை, மத்திய அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன் நடக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான ராஜா, தி.மு.க., தலைவர் ... |
| ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து 'அப்பீல்': கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு Posted: பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து தீவிரமாக விவாதித்தனர்.கூட்டத்துக்கு பின் கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயசந்திரா கூறியதாவது: 'சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற ... |
| தி.மு.க., தேர்தல் நிதி: ரூ.6.81 கோடி வசூல்- கருணாநிதி Posted: சென்னை:'தேர்தல் நிதியாக, ஆறு கோடியே, 81 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆளுங்கட்சியிடம் மலையளவு நிதி என்றால், தி.மு.க., அதை சந்திக்க, துளியள வாவது தேவையில்லையா என்ற உணர்வோடு தான், கட்சியினர், தேர்தல் நிதியை வழங்குகின்றனர். அந்த நிதியை என் கையால், வாங்கி, வாங்கி உதவியாளர்களிடம் நீட்டுகிற பணியை செய்த காரணத்தால், என் கையில் ஒருவித வலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று, அந்த வலியும், கட்சியினர் தொடர்ந்து காட்டி வரும் ஆர்வத்தினால், தற்போது மறைந்துள்ளது.தேர்தல் நிதி வேண்டு கோள் விடுத்து, இரண்டரை மாதங்கள் தான் ... |
| 'டிஜிட்டல் இந்தியா' தூதர் முன்னாள் ஜனாதிபதி கலாம்? Posted: புதுடில்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வின் விளம்பர துாதராக, தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசிடம் இருந்து பெற வேண்டிய சான்றிதழ்கள், அரசுக்கு தெரிவிக்க வேண்டிய விவரங்கள், கட்டணங்கள் போன்ற வற்றை இணையம் வாயிலாக செயல்படுத்தும் திட்டத்திற்கு, டிஜிட்டல் இந்தியா என, பெயரிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் இந்த கொள்கை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து, இதற்கு முன் கூடிய, மத்திய ... |
| ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: பாக்., ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொடூர சித்ரவதை Posted: புதுடில்லி : கார்கில் போரின் போது, ரோந்து சென்ற இந்திய வீரர்களை சிறை பிடித்து, கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற பாகிஸ்தான் ராணுவம் மீது, இப்போதைய அரசும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, பாதிக்கப்பட்ட வீரரின் தந்தை கவலை தெரிவித்து உள்ளார்.கடந்த 1999ம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீரின் கார்கில் பகுதியில், அத்து மீறிய பாகிஸ்தான் ராணுவத்தை, நம் இந்திய வீரர்கள் கடுமையாக போராடி தோற்கடித்தனர். அந்த போர் துவங்கிய போது, எல்லைப் பகுதி யில் ரோந்து சென்ற, கேப்டன் சவுரவ் காலியா தலைமையிலான, ஐந்து வீரர்களை, பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.இரு மாதங்களுக்கு பின், கேப்டன் காலியா ... |
| விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடிய கலெக்டர்: கடைசி வரை உதவாத '108' ஆம்புலன்ஸ் Posted: நாகப்பட்டினம்: விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, நாகை கலெக்டர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று போராடியதால், பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அழைத்தும், 108 ஆம்புலன்ஸ் வாகனம், கடைசி வரை வரவில்லை. நாகை, டாடா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 40; மீனவர். இவர், மோட்டார் சைக்கிளில், நாகூரில் இருந்து, நாகை நோக்கி, நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது, நாகை கலெக்டர் அலுவலகம் அருகே, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.அப்போது, கலெக்டர் பழனிசாமி, தன் வீட்டில் இருந்து, அலுவலகத்துக்கு வந்தார். விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை ... |
| அமெரிக்கா - சீனா இடையே போர் வெடிக்குமா? Posted: கொழும்பு: சீனாவின், தென்கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானம் பறந்த பிரச்னை, அந்தப் பகுதியில் போர் மேகம் சூழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் வர்த்தகம், ராணுவம், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் சீனாவும், அமெரிக்காவும், அண்மைக் காலமாக அதிக அக்கறை காட்டுகின்றன. சீனாவின் தென் கடற்பகுதி, சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மிகுந்தது. ஆகவே, அன்னிய நாட்டு போர் விமானங்கள் பறப்பதற்கு சீனா தடை விதித்துள்ள, சீனாவின் தென் கடல் பகுதியில், அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு விமானம் அண்மையில் பறந்து ... |
| இந்தியா குறித்து பாக்., புகார்? அமெரிக்காவிடம் 'பஞ்சாயத்து' Posted: இஸ்லாமாபாத் : 'இந்தியா, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது' என, அமெரிக்காவிடம், பாக்., புகார் கூற திட்டமிட்டுள்ளதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா', தலிபான்களுடன் இணைந்து, உள்நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயல்வதாக, பாக்., குற்றம் சாட்டி வருகிறது.இதை, வாஷிங்டன் சென்றுள்ள பாக்., வெளியுறவு செயலர் அய்ஸாஸ் சவுத்ரி, அமெரிக்க அரசிடம் தெரிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இன்று வாஷிங்டனில், பாக்., - அமெரிக்கா நிலைப்பாடு தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது.இதில், ஆயுதக் கட்டுப்பாடு, அணு ஆயுத பரவல் தடுப்பு மற்றும் சர்வதேச ... |
| ஜி.எஸ்.டி.,க்கு திடீர் ஆதரவு ஏன்? Posted: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து, எந்த எதிர்க்கட்சியுமே, ஒரு தெளிவான முடிவை எடுக்காத நிலையில், ஐக்கிய ஜனதா தளம், இந்த மசோதாவுக்கு தன் ஆதரவை, பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில், ஒரு அரசியல் வியூகம் இருப்பதும் தெரியவந்து உள்ளது. |
| "கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி? Posted: புதுடில்லி: தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் "ஹாக்' செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் "லாக் இன்' விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். எனவே நமது கணக்கு விபரங்கள் திருடப்படாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது.உங்களுடைய கூகுள் கணக்குகள் "ஹாக்' செய்யப்படாமல் இருக்க இதோ சில யோசனைகள்.1.வலிமையான கடவுச்சொல் (பாஸ்வேர்டு) அவசியம். உங்களுடைய கூகுள் கணக்குகளை கையாளப் பயன்படும் ... |
| தள்ளி போகிறது தென்மேற்கு பருவ மழை: வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்யும் Posted: 'நடப்பு ஆண்டில், இரு நாட்களுக்கு முன்னதாக துவங்கும் என, கணிக்கப்பட்ட தென்மேற்கு பருவ மழை, இம்மாதம், 5ம் தேதி தான் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'கேரள கடல் பகுதியில், தென்மேற்கு நோக்கி வீச வேண்டிய காற்று, வடமேற்கு நோக்கி வீசுவதே காரணம்' என, 'ஸ்கைநெட்' என்ற, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆண்டுதோறும், ஜூன், 1ம் தேதி, தென்மேற்கு பருவ மழை துவங்கும். நடப்பு ஆண்டில், அந்தமான் மற்றும் இலங்கையின் தென் பகுதியை, மே, 16ம் தேதி தென் மேற்கு பருவ மழை எட்டியது.இதனால் வழக்கத்தை விட, இரு நாட்கள் முன்னதாக, 'மே, 30ம் தேதி, கேரள கடல் பகுதியில், பருவ மழை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 02,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |