Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் கீர்த்தி சுரேஷ்

Posted:

கேரளாவுக்கும், தமிழகத்துக்கும்நான் தான் செல்லம்!

'குல்பி ஐஸ்' போல், 'ஜில்'லென இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உதடுகளை அளவாக விரித்து, பற்களை காட்டி, பளீரென சிரிக்கும்போது, நம் இதய துடிப்பு அநியாயத்துக்கு எகிறி, டிரம்ஸ் வாசிக்கிறது.கீர்த்தி நிஜமாகவே அழகு;அவர் பேசும் தமிழ், அவரைவிட அழகு. தமிழ் கூறும் திரைப்பட நல் உலகிற்கு ...

என்ன ஒரு தாராள மனது!

Posted:

'அந்த பொண்ணுக்கு என்ன ஒரு தாராள மனசு' என, சமந்தாவை பற்றி பெருமையாக பேசுகின்றனர், 'பத்து எண்றதுக்குள்ளே' படக்குழுவினர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டன; சமந்தா கொடுத்த, 'கால்ஷீட்'டும் ஓவராகி விட்டது. ஆனால், அவர் நடித்த சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியிருந்ததால், படக்குழுவினர் சமந்தாவை அணுகியுள்ளனர். ...

1 கோடி கிளப்பில் பிரியங்கா!

Posted:

நடிகை பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருக்கிறார். சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1 கோடியை தொட்டுள்ளது தான் இதற்கு காரணம்.
'என்மீது இவ்வளவு பேர் அன்பு வைத்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்கும்போது, ஆனந்த
கண்ணீர் வருகிறது. நான் நடிகையாக இருப்பது தான் இதற்கு காரணம். என் நடிப்பு பற்றி ...

நாளைய சென்னை எப்படி இருக்கும்?

Posted:

தமிழில் அறிவியலை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் அரிது. இந்த குறையை போக்குவதற்காக, 'இன்றுநேற்று நாளை' என்ற படம் தற்போது தயாராகியுள்ளது. 'டைம் மிஷின்' எனப்படும் கால இயந்திரம் தொடர்பான கதையை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.விஷ்ணு - மியா ஜார்ஜ் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சென்னை கடந்த காலத்தில்
எப்படி ...

நானும் இப்போ தமிழச்சி தான்!

Posted:

'மதராசபட்டணம்' படத்துக்கு பின்,எமி ஜாக்சனுக்கு கோலிவுட்டில் போதிய வரவேற்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் அடைக்கலம் ஆன அவர், தற்போது, மீண்டும் கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட, மூன்று தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

'நான் பிரிட்டனில் பிறந்த பெண்என்றாலும், 2010ல், ...

கமலின் பாபநாசத்திற்கு யு சான்று

Posted:

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் த்ரிஷ்யம். இப்படம் இப்போது இந்தியாவின் அநேக மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீ-மேக்காகியுள்ளது. கமல் ஹீரோவாகவும், கௌதமி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இப்படத்தையும் இயக்கியுள்ளார். ...

அட்லீ -கமல் = ஹிட் ; அட்லீ - ரஜினி......!!

Posted:

கமல் துவக்கி வைத்த "ராஜா ராணி" படம், அட்லீக்கு பெரும் ஹிட்டாக அமைந்தது. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே, அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், அட்லீ உடன் நடிகர் விஜய் கைகோர்த்துள்ளார்.
விஜய் 59 என்று தலைப்பு இடப்பட்டுள்ள இந்த ...

அனுஷ்காவுக்கு ஆலோசனை சொல்லும் ஆர்யா

Posted:

'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அனுஷ்கா இரு விதமான தோற்றங்களில் நடிக்கப் போகிறார். ஒரு தோற்றத்தில் குண்டானப் பெண்ணாகவும், மற்றொரு தோற்றத்தில் 'சைஸ் ஜீரோ' என்று சொல்லக் கூடிய அழகுப் போட்டிகளில் ...

கமலுக்கு கதை எழுதும் மலையாள இரட்டை கதாசிரியர்கள்..!

Posted:

தமிழ்சினிமாவில் கே.வி.ஆனந்துடன் இனைந்து கோலோச்சிவரும் இரட்டை இயக்குனர்களான சுபா போல, மலையாளத்தில் பாபி-சஞ்சய் என்கிற இரட்டை கதாசிரியர்கள் ரொம்பவே பிரசித்தம். இவர்களது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் 'மும்பை போலீஸ்' போல அதிரடி போலீஸ் கதையையும் எழுதுவார்கள். 'ஹவ் ஓல்டு ஆர் யூ' போல பெண்களின் சுய முன்னேற்றத்துக்கான கதையையும் ...

என் சிறுகதைகள் நெஞ்சில் அடிபோல் தாக்காது - சிறுமுள் போல் உறுத்தும் - வைரமுத்து!

Posted:

இதுவரை கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா நாவலாசிரியர் என்று இருந்த வைரமுத்து இப்போது ஒரு பிரபல வார இதழில் இதுவரை 25 சிறுகதைகள் எழுதித் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். இந்தப் புதுவகை எழுத்துபற்றி என்ன நினைக்கிறார்? இவரை எழுதத் தூண்டியது எது? இதோ அவரே சொல்கிறார்?

"இன்று உலகமயமாக்கல் என்கிற அசுரன் எல்லா நாட்டு மக்களையும் ...

செல்வமணிக்கும் ரோஜாவுக்கும் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள்!

Posted:

திரைப்படக் கல்லூரி மாணவ இயக்குநரான ஆர்.கே. செல்வமணி இப்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் செயலாளராகத் தீவிரமாகக் செயல்பட்டு வருகிறார். சங்கத்துக்கு விரைவில் தேர்தலும் நடக்கவுள்ளது. செல்வமணி இங்கே இயக்குநர் சங்கத்தில் செயல்பட்டு வருகிறார். மனைவி ரோஜாவோ ஆந்திராவின் நகரி தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ...

மேக்கப் போடாமல் ஒரு படம்!

Posted:

ராஜபாளையத்தை லொக்கேஷனாக வைத்து ஒரு படம் உருவாகி இருக்கிறது ஒரு தோழன் ஒரு தோழி என்பது படத்தின் பெயர். திரைப்டக் கல்லூரி மாணவர்கள் மோகன், சிவன் குமார், கிருத்திகா, மகாதாரா என 1999-2000ம் ஆண்டு படித்த இளைஞர்கள் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளார்கள். 90 நாட்கள் வெயிலில் சிரமப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்களாம். குறிப்பாக யாருக்கும் மேக்கப் ...

ஓவியாவுடன் டூயட்பாடும் சரவணன்!

Posted:

ஒருகாலத்தில், விஜயகாந்தைப் போல இருக்கிறார் என்று பேசப்பட்டவர் நடிகர் சரவணன். வைதேகி வந்தாச்சு, தாய் மனசு எனப் பல படங்களில் நடித்த அவர் பெரிதாக வர முடியவில்லை. எனவே குணச்சித்திர வேடங்களில் பாதைமாறினார். பருத்திவீரன் நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்தது. அதில் கார்த்தியின் சித்தப்பாவாக வந்தார். அந்த குற்றவாளி கோஷ்டியில் ...

திருக்குறளுக்கு இசை: கண்டு கொள்ளப்படாத பரத்வாஜ்

Posted:

தமிழ் மொழியின் பெயரைச் சொல்லி பிழைப்பவர்கள் தமிழுக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் ஓசைப்படாமல் சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு அரியசெயலைச் செய்து முடித்திருக்கிறார். சினிமா இசையமைப்பாளர்களில் எளிமையானவர் இந்த பரத்வாஜ். பல வெறிப்படங்களுக்கு இசையமைத்த இவர் சிறிது காலம் புகழ் மறைவுப்பிரதேசத்தில் இருந்தார். இருந்தவர் சும்மா ...

சிவாஜி படத்தில் மீனா... விஜய் படத்தில் மீனா மகள்...!

Posted:

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள "விஜய் 56" படத்தில், நடிகை மீனாவின் மகள் நைனிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள நடிகை, மீனா, குழந்தை நட்சத்திரமாக, 1982ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிவாஜி படத்தில் ...

உடல்நலக்குறைவு - எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு இன்று(ஜூன் 24ம் தேதி) 87வது பிறந்தநாள். சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வருகிறார் எம்.எஸ்.வி. இந்தசூழலில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக ...

மனைவியுடன் விவாகரத்து முடிவில் நடிகர் -பாலா : நடந்தது என்ன..?

Posted:

சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் பாலா தனது மனைவியை விவாகரத்து பண்ண இருப்பதாக வந்த தகவல்களை வெளியிட்டோம். இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர், கடந்த 2010ஆம் ஆண்டு ...

'இடம் பொருள் ஏவல்' - நிறைவான அனுபவம் தரும்... : இயக்குனர் சீனு ராமசாமி பேட்டி

Posted:

'தென்மேற்குப் பருவக்காற்று' படம் மூலம் தமிழ்த் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் சீனு ராமசாமி. அந்தப் படத்தில் யதார்த்த நாயகனான விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்குண்டு. அந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகம் இதுவரை காட்டியிருக்காத ஒரு புதிய அம்மாவாக சரண்யாவைக் காண்பித்து அவருக்கு தேசிய ...

தலைகவசம் - அஜித் படத்தை பயன்படுத்திய கோவை போலீஸ்

Posted:

கார் மற்றும் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அஜித். அதுமட்டுமல்ல, போக்குவரத்து விதிகளை மதிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளே இல்லை. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது என போக்குவரத்து விதிகளை மிகச்சரியாய் கடைபிடிப்பார் அஜித். சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூர், அங்கிருந்து ...

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பின்னணியில் உருவாகும் எங்க வீட்டுப் பெண்

Posted:

கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பலமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் எங்க வீட்டுப்பெண். வாழ்க்கையை கனவுகளோடு எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர் சுமித்ரா. அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தந்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™