Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரதாப் போத்தன் விமர்சனத்துக்கு பதில் சொல்ல மறுத்த ஜெயராம்..!

Posted:

சில நாட்களுக்கு முன்பு இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன், நடிகர் ஜெயராமை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.. முதலில் சாடைமாடையாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டவர், பின்னர் அதுபற்றி மீடியா ஆட்கள் கேட்டபோது ஜெயராமைத்தான் சொன்னேன் என ஒப்புக்கொள்ளவும் செய்தார். இந்தப்பிரச்சனை உருவெடுக்க காரணம், ஜெயராம் தனது மகன் காளிதாஸை ...

யோகா தினத்தில் யோகாவுக்கு மோகன்லால் ஆதரவு..!

Posted:

இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி 35 நிமிடங்களில் 15 ஆசனங்கள் செய்து அசத்தியுள்ளார்.. மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லாலும் தனது ...

துவண்டு போக மாட்டேன் - வசனகர்த்தா விஜி

Posted:

சமீபத்தில் வெளியான, '36 வயதினிலே' படம், ஜோதிகாவிற்கு மட்டும் 'ரீ-என்ட்ரி' அல்ல; வசனகர்த்தா விஜிக்கும் தான்! கடந்த, 1995ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இருக்கும் இவர், 'அள்ளித் தந்த வானம், வெள்ளித்திரை' என, இரண்டு படங்களை இயக்கியவர். 'அழகிய தீயே, மொழி, மஜா, பொன்னியின் செல்வன், கவுரவம்' படங்களில், இவர் எழுதிய, 'விமர்சையான' வசனங்கள், ...

தமிழகத்தின் செல்ல ராசாத்திக்கு...

Posted:

அநேக கோடி ஆசிர்வாதங்கள். புகுந்த வீட்டிலிருந்து, நீண்ட நாட்களுக்குப் பின், தன் தாய் வீட்டிற்கு வந்திருக்கும் மகளைப் பார்த்த ஒரு அம்மாவின் பரவசத்தோடு, இந்த கடிதத்தை எழுதுகிறேன். முன்னை விட, இன்னும் கொஞ்சம் அழகாகி இருக்கிறாய்; ஆனாலும், கொஞ்சம் இளைத்து விட்டாய்.
தாய்மை தரும் பக்குவத்திற்குப் பின், பிறந்த வீட்டிற்கு வந்து, ...

புலி டீசர் ரிலீஸ் : ரசிகர்களுக்கு டபுள் டிரீட்

Posted:

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியிருந்த நிலையில், படத்தின் டீசரும் வெளியாகி, விஜய் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை தந்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் புலி. இந்த படம், ராஜா காலம் மற்றும் நகரத்து கெட்டப்புகளில் படம் உருவாகியுள்ளது. படத்தின் ...

சதம் கண்ட அரையாண்டு சாதனை - ஒரு பார்வை

Posted:

2015ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக ஒரு சாதனை ஆண்டாக இருக்கப் போவது மட்டும் உறுதி. 1931ம் ஆண்டு ஆரம்பமான தமிழ் சினிமா வரலாற்றில் இந்த 84 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே ஆண்டில், ஆறு மாதங்களுக்குள் வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட்ட சிறப்பு இந்த 2015ம் ஆண்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக ...

தீபிகாவின் கேரக்டர் பெயரே லக்கி தானாம்....

Posted:

பிகு படத்தின் வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்திலிருக்கும் தீபிகா படுகோனே, அடுத்து தான் நடிக்கும் படமான பஜ்ரங்கி பைஜான் படத்தில், அவரது கேரக்டரின் பெயர் லக்கி ஆகும். தீபிகாவின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. ஓம் சாந்தி ஓம் படத்தில், தீபிகாவின் கேரக்டர் சாந்தி, ராம்லீலா படத்தில், ...

வெளியானது "புலி" பர்ஸ்ட் லுக்

Posted:

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த "புலி" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஜய், ராஜா உடையில், கையில் வாளுடன் நிற்பது, பர்ஸ்ட்லுக் உள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் புலி. இந்த படம், ராஜா காலம் மற்றும் நகரத்து கெட்டப்புகளில் படம் உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ...

ரீமேக் ஆகிறது சடக்

Posted:

சஞ்சய் தத், பூஜா பட் நடிப்பில், 1991ம் ஆண்டு வெளியான சடக் படத்தை, ரீமேக் செய்ய பட் திட்டமிட்டுள்ளார். மகேஷ் பட் மற்றும் முகேஷ் பட், படத்தயாரிப்புகளில் முடிசூடா மன்னர்களாக விளங்கினர். அவர்களது படமும் தொடர்ந்து தோல்வியைத் தழுவவே, அவர்கள் படத்தயாரிப்புகளிலிருந்து தங்களை சிறிது சிறிதாக விலக்கிக்கொண்டனர். இந்நிலையில், 1991ம் ஆண்டு ...

ஷாகித் நடிக்கும் டொனேஷன் பாக்ஸ்

Posted:

ஷந்தார், உத்டா பஞ்சாப் படங்களை தொடர்ந்து, ஷாகித் கபூர், அடுத்ததாக, ஹரீஷ் கோட்டியன் மற்றும் சந்தீப் சவுத்ரி இயக்கத்தில் "டொனேஷன் பாக்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். ஹைடர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஷாகித்திற்கு, பல்வேறு இயக்குநர்களிடமிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அவருக்கு வந்த ...

என்னை சல்மானுடன் ஒப்பிடாதீர்கள் : சன்னி தியோல்

Posted:

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படம் வெளியாகும் நாளில், தனது படமான காயல் ஒன்ஸ் அகைன் படத்தை வெளியிடப்போவதில்லை என்று நடிகர் சன்னி தியோல் கூறியுள்ளார். பிரேம் ரத்தன் தான் பயோ படம், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்தாண்டு மட்டும், சல்மான் கான் நடிப்பில் பிரேம் ரத்தன் தான் பயோ மற்றும் பஜ்ரங்கி ...

வில் அம்பு படத்தின் சாட்சியாக ரசிகர்கள் இருப்பார்கள்: இயக்குனர் சொல்கிறார்

Posted:

வழக்கு எண் ஸ்ரீ, பொறியாளன் ஹரீஷ் கல்யாண், சாந்தினி, சிருஷ்டி டாங்கே, சமஸ்கிருதி, சமுத்திரகனி நடிக்கும் படம் வில் அம்பு. இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார், அரோரா இசை அமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி ...

முதல்நாளிலேயே ரூ.14 கோடி வசூல் செய்த ஏபிசிடி 2

Posted:

ரெமோ டி சோஷா இயக்கத்தில் வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏபிசிடி 2 படம், வெளியான முதல்நாளிலேயே, ரூ. 14.30 கோடி வசூல் செய்துள்ளது. 2015ம் ஆண்டில், முதல்நாளிலேயே, அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை, ஏபிசிடி 2 பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவான கப்பார் இஸ் பேக் படம், முதல்நாளில் ...

வாணி ஜெயராமுக்கு கண்ணதாசன் விருது

Posted:

கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கண்ணதாசன் தமிழ் சங்கத்தின் சார்பில் சென்னை தியாகராயர் நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது. பழம்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த விருதினை ...

காட்சிக்காக தூக்கில் தொங்கிய ஹீரோ

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சேட்டக்காரங்க. விஷ்வா, கீர்த்தி, ராகவா, அன்பு செல்வன், ஜெயசித்ரா, மணிபாரதி நடித்துள்ளனர். குமரன்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளனர், கவி கண்ணன் இசை அமைத்துள்ளார். எம்.முத்துமாணிக்கம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ஹீரோ தூக்கு மாட்டுவது போன்ற காட்சியில் நடிக்கும்போது நிஜமாகவே தூக்கில் ...

நட்புக்காக சீரியலில் நடிக்கும் பாண்டியராஜன்

Posted:

நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் தற்போது ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் என் தங்கை என்ற தொடரில் நடித்து வருகிறார். டி.வி ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பங்கேற்று வந்த பாண்டியராஜன் நட்புக்காக தொடரில் நடிப்பதாக கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த சீரியலில் நடிக்கும் முன்பு வரை சீரியலில் நடிக்கும் எந்த திட்டமும் ...

முடிவிற்கு வந்த ஜூனியர் என்.டி.ஆர் பட பிரச்சனை

Posted:

தெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற்று வந்தன. படக்குழுவினரின் விசா தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு இடையிலேயே ...

ஆகஸ்டில் சைமா விருது விழா: 9 பிரிவுகளில் மோதுகிறார் வேலையில்லா பட்டதாரி

Posted:

4வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) வருகிற ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 7ந் தேதி துபாயில் நடக்கிறது. தற்போது இந்த விழாவில் 2014ம் ஆண்டு விருக்கான போட்டியில் (நாமினி) இருக்கும் படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேலையில்லா பட்டதாரி படம் சிறந்த ஜனரஞ்சக இயக்குனர் (வேல்ராஜ்), சிறந்த நடிகை (அமலாபால்), சிறந்த நடிகர் (தனுஷ்), ...

செப்டம்பரில் திரைக்கு வரும் சிவம்

Posted:

தெலுங்கு நடிகர் ராம் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கும் சிவம் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ரஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நேகா சர்மா முதன்மை நாயகியாகவும் ரஷி கண்ணா இரண்டாவது நாயகியாகவும் நடிக்கின்றனர். நடிகை ரஷி கண்ணா ...

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பைக் கவர்ந்த பாகுபலி

Posted:

இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான பாகுபலி ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள பாகுபலி படத்தின் டிரைலரைப் பார்த்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ரானா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™