Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு

Posted: 20 Jun 2015 10:52 PM PDT

ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு கொடூரனால் வீசப்படும் ஆசிட் என்பது, அந்த பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீர் குலைத்துவிடுகிறது. இது போன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் வேலை தர முன் வராத நிலையில், வேலையின்றி வாடும் அவர்களுக்கு வேலை தந்து உதவ டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. டெல்லியின் ஒவ்வொரு நகரத்திலும் 35-க்கும் அதிகமான ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள், சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக

ராஜபாதையை யோகா பாதையாக மாற்றுங்கள்: மோடி பேச்சு

Posted: 20 Jun 2015 10:52 PM PDT

யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், இந்த ராஜபாதையை இனி யோகா பாதையாக மாற்றுங்கள், அமைதியான புது யுகத்தை தொடங்க யோகா உதவி செய்யும் என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் முதலாவது யோகா தினம் கொண்டாடும் அனைவரையும் வாழ்த்துவதாகவும், நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியை ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

35 நிமிடங்களில் 15 ஆசனங்கள் செய்த பிரதமர் மோடி

Posted: 20 Jun 2015 10:24 PM PDT

64 வயதாகும் பிரதமர் மோடி 35 நிமிடங்கள் வரை ராஜபாதையில் தரை விரிப்பில் அமர்ந்தும் படுத்துக் கொண்டும் யோகாசனம் செய்தார். அப்போது 15 வகையான ஆசனங்களை செய்தார். அவர் தூய வெள்ளை நிறத்தில் பைஜாமா குர்தாவும் தோளில் மூவர்ண துப்பட்டாவும் அணிந்து இருந்தார். அவருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டர்கள் வெள்ளி பனியனும், நீல நிற பேண்ட்டும் அணிந்து இருந்தனர். இதனால் ராஜபாதை முழுவதும் வெள்ளை மயமாக காட்சி அளித்தது.

தீவிரவாதிகள் யோகா செய்ய வேண்டும் - ராஜ்நாத் சிங்

Posted: 20 Jun 2015 10:22 PM PDT

தீவிரவாதிகள் யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழா ஒன்று டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். விழாவில் பேசுகையில் "யோகா மனிதனின் ஆளுமையில் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை

டெல்லியில் கின்னஸ் சாதனை படைத்த யோகா: பிரதமர் மோடி பொதுமக்களுடன் யோகா பயிற்சி செய்தார்

Posted: 20 Jun 2015 10:21 PM PDT

5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய யோகா கலையானது மனதுக்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் தந்து நோய்களை அண்ட விடாமல் விரட்டக்கூடிய வல்லமை வாய்ந்தது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நம்மை வைத்துக் கொள்ள உதவுகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஐ.நா. சபையில் பேசுகையில் இந்தியாவின் பாரம்பரிய மிக்க யோகா கலையின் பெருமைகளை எடுத்துக்கூறியதுடன்

உத்தரகாண்டில் பேருந்து கிடு கிடு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி - 21 பேர் படுகாயம்

Posted: 20 Jun 2015 10:17 PM PDT

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர்க் மாவட்டத்திலுள்ள முனிசியரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட பேருந்து, அம்மாநிலத்தின் அல்மோரா நகரையடுத்த தியாரியில் கிடு கிடு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் அப்பேருந்தில் பயணம் செய்த 38 பேரில் 17 பேர் பலியானார்கள்.

பலத்த மழை எதிரொலி: மும்பையில் ரெயில் சேவை 2-வது நாளாக பாதிப்பு- பயணிகள் அவதி

Posted: 20 Jun 2015 08:42 PM PDT

பலத்த மழை காரணமாக 2-வது நாளாக நேற்றும் மும்பையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். மும்பையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியது. இதையடுத்து மத்திய, மேற்கு மற்றும் துறைமுக வழித்தடங்களில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில்நிலையம் மற்றும் தண்டவாளபகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு: 5 பேர் சரண்

Posted: 20 Jun 2015 08:14 PM PDT

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பலினர் போலீசாரை தாக்க முயன்றனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் சரண் அடைந்தனர். திருப்பதியை அடுத்த சந்திரகிரி மண்டலம் முங்கிலிபட்டு கிராமம் அருகே, சேஷாசலம் வனப்பகுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி இந்த வனப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட 20 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

உலக யோகா தினம்: தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted: 20 Jun 2015 08:13 PM PDT

உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை தரும் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பிரதமர் மோடி எடுத்த தீவிர முயற்சிகளின் பலனாக இன்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோகா தினத்தை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஈஷா

சோனியாவை அவதூறாக பேசியதாக பா.ஜனதா எம்.பி. மீது காங்கிரஸ் வழக்கு

Posted: 20 Jun 2015 07:44 PM PDT

பீகார் மாநிலம் பக்சார் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், அஸ்வினி சவுபே. இவர் அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான மாநில காங்கிரசார், நேற்று பக்சார் நகரில் அஸ்வினி சவுபேவுக்கு சொந்தமான ஓட்டல் முன்பாக கூடி

யோகாவுக்கு மதச்சாயமா? பிரதமர் மோடி மீது வழக்கு

Posted: 20 Jun 2015 05:04 PM PDT

யோகாவுக்கு மதச்சாயம் பூசி, மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மீது பீகார் மாநிலம், பாட்னாவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்

இன்று சர்வதேச யோகா தினம்: டெல்லியில் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

Posted: 20 Jun 2015 02:57 PM PDT

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் இன்று 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்பட உலகம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கின்னஸ் சாதனை ஏட்டில் இடம் பெற காத்திருக்கும் சர்வதேச யோகா தினம்?

Posted: 20 Jun 2015 01:11 PM PDT

முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லியில் இன்று காலையில் நடக்கிற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை

Posted: 20 Jun 2015 12:55 PM PDT

நகர்ப்புறங்கள் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பெற்று, வளர்ச்சி அடைய வேண்டும், அதற்கு சவாலாக அமைந்துள்ள தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர், முதல் முறையாக நகர்ப்புற வளர்ச்சிக்காக நாடு முழுவதும் இருந்து 500 மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்களுடன் கலந்துரையாட அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நடுவானில் யோகா செய்து அசத்திய ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகள்

Posted: 20 Jun 2015 11:47 AM PDT

சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடுவானில் யோகா செய்து அசத்தியுள்ளனர் ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகள். இந்திய பிரதமர் மோடியின் முன் முயற்சியால் ஜூன் 21-ந் தேதி, உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் யோகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை

Posted: 20 Jun 2015 09:01 AM PDT

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங்(30). அதே பகுதியில் வசித்துவந்த கிரன்தீப் கவுர்(20) என்ற பெண்ணை இவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ

ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு

Posted: 20 Jun 2015 08:43 AM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வங்கி கேஷியரின் பிணம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கார்வா மாவட்டத்தில் உள்ள டாட்டிதிரி பகுதியில் இயங்கிவரும் வனாஞ்சல் வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்த ஜைனீல் பாண்டே

காதலுக்கு எதிர்ப்பு?: ரெயிலின் முன் பாய்ந்த பெண் பலி- படுகாயத்துடன் வாலிபர் உயிர் ஊசலாட்டம்

Posted: 20 Jun 2015 08:33 AM PDT

உத்தரப்பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் காதல் ஆசை கைகூடாததால் இன்று ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற ஜோடியில் இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்

Posted: 20 Jun 2015 07:52 AM PDT

மராட்டிய மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக தலைகளுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் தம்பதியர் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். போலீசாரை என்கவுன்ட்டரில் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பச்கோன் டலாம் பகுதியின் நக்சலைட் தளபதியாக செயல்பட்டு,

அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு

Posted: 20 Jun 2015 07:39 AM PDT

வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய இடத்தில் வேலைவாங்கி தருவதாக ஆசைகாட்டி சிலர் அழைத்து சென்று விட்டதாக அவளது பெற்றோர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™