Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


யூ-டியூபைக் கலக்கும் தமிழ் பேசும் இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்

Posted: 10 Jun 2015 11:31 PM PDT

சமூகத்தில் மற்ற பாலினத்தவர்களைப் போலவே தாங்களும் வாழ்வதற்கான உரிமை கோரி மாற்று பாலினத்தவர்கள் காத்திரமாக போராடி வரும் காலமிது. சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட தனது மகனுக்காக அவரது தாய் மாப்பிள்ளை தேடியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதேபோல, தன்பாலின ஈர்ப்புள்ள பெண்களைப் புரிந்துகொள்ளும்

டெல்லி முன்னாள் சட்ட மந்திரி தோமரின் ஜாமின் மனு நிராகரிப்பு

Posted: 10 Jun 2015 11:24 PM PDT

சட்டப்படிப்பு படிக்காமலே, சட்டம் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்றதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் சட்ட மந்திரி ஜிதேந்தர் சிங் தோமரின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

நேபாளத்தில் 6 கிராமங்களில் நிலச்சரிவு: 15 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

Posted: 10 Jun 2015 11:17 PM PDT

நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 6 கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டின் டப்லேஜங் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள 6 கிராமங்களில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரளாவில் கேபிள் பதிக்கும் ஊழியர்கள் 2 பேர் லாரி மோதி பலி

Posted: 10 Jun 2015 10:42 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள புள்ளனூரில் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி அருகேயுள்ள பாப்பினம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(வயது 55),

சந்திரபாபு நாயுடு ஒரு திருடன்: சந்திரசேகரராவ் கடும் தாக்கு

Posted: 10 Jun 2015 10:40 PM PDT

தெலுங்கானா நியமன எம்.எல்.ஏ.க்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த்ரெட்டி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கும் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தனது தொலைபேசி உரையாடலை தெலுங்கானா அரசு ஒட்டு கேட்பதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் நேற்று டெல்லி

ஆந்திரா கவர்னரை மாற்றுங்கள்: பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

Posted: 10 Jun 2015 10:38 PM PDT

பிரதமர் மோடியை நேற்று ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெலுங்கானா மாநில அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி மோடியிடம் விளக்கிக் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது கவர்னர் நரசிம்மன் மீதும் சந்திரபாபு நாயுடு பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறினார். ஆந்திர மாநில மக்களின்

ஆசிய பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல்: இம்முறையும் சரிவை சந்தித்த இந்தியா

Posted: 10 Jun 2015 09:54 PM PDT

சமீபத்தில் வெளியான ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில், ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், மற்றும் சீனா போன்ற நாடுகளின் பல்கலைகழகங்களே ஆதிக்கம் செலுத்த, சென்ற முறையை விட மோசமான சரிவை சந்தித்துள்ளது இந்தியா.

திருப்பதி கோவிலில் லட்டு தட்டுப்பாடு பக்தர்கள் ஏமாற்றம்

Posted: 10 Jun 2015 09:48 PM PDT

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் லட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூலப்பொருள்கள் பற்றாக்குறை காரணமாக திருப்பதி கோவிலில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் தினமும்

துப்பாக்கி வெடித்து வீரர் பலி: கோழிக்கோடு விமான நிலையம் 10 மணி நேரம் மூடல்

Posted: 10 Jun 2015 09:46 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. அதிகாரிகளை சோதனை என்ற பெயரில் பாதுகாப்பு படை வீரர்கள்

ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீசு: நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

Posted: 10 Jun 2015 08:08 PM PDT

டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாள் ஆட்சியின்போது சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் சோம்நாத் பார்தி. வக்கீலான இவர், தற்போது மாளவியா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது, அவருடைய மனைவி லிபிகா நேற்று டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

நாப்தாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யூரியா உர உற்பத்திக்கு ஒப்புதல்

Posted: 10 Jun 2015 07:49 PM PDT

தமிழ்நாட்டில் சென்னை மணலியில் உள்ள 'எம்.எப்.எல்.' என்றழைக்கப்படுகிற சென்னை உர நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனம், நாப்தா இருப்பு இருக்கும் வரையில், அதை மூலப்பொருளாக கொண்டு யூரியா உரம் தயாரிப்பதற்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.

கெல்லாக்ஸ் உள்பட 500 பொருட்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

Posted: 10 Jun 2015 07:46 PM PDT

மேகி நூடுல்ஸ் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் 500 உற்பத்தி பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இவை டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ், வெங்கிஸ், ரான்பாக்ஸி உள்ளிட்ட

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு பரிசீலனை

Posted: 10 Jun 2015 07:37 PM PDT

பாராளுமன்றத்துக்கான தேர்தலும், மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் வெவ்வேறு சமயங்களில் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சில மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது உண்டு. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

தட்கல், பிரிமியம் ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் வாபஸ்: ரெயில்வே நிர்வாகம் முடிவு

Posted: 10 Jun 2015 07:33 PM PDT

'தட்கல்' முறையில் எடுக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தில் ஒரு பகுதி கூட திருப்பித்தரப்படுவது இல்லை. இந்நிலையில், உறுதி செய்யப்பட்ட 'தட்கல்' டிக்கெட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை

போலி சான்றிதழ் தொடர்பாக முன்னாள் மந்திரியிடம் விசாரணை: மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 10 Jun 2015 07:27 PM PDT

டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் சட்ட மந்திரியாக இருந்தவர் ஜிதேந்திர சிங் தோமர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சட்டப்படிப்பு படித்ததாக தனது வேட்புமனுவில் கூறியிருந்தார். தோமர் இணைத்திருந்த சான்றிதழ்கள் போலியானது என புகார் எழுந்தது. இது குறித்து கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை நடத்திய டெல்லி பார் கவுன்சில், தோமரின்

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிறுத்தையை துன்புறுத்திய காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர் கைது

Posted: 10 Jun 2015 02:56 PM PDT

ஐதராபாத் உயிரியல், பூங்காவில் சிறுத்தையை பிடித்து இழுத்து துன்புறுத்திய காட்சியை 'பேஸ்புக்'கில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பகதூர்புரா பகுதியில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில், ஆமையின் மீது

எங்கள் நாட்டிற்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை: மியான்மர் அரசு மறுப்பு

Posted: 10 Jun 2015 12:29 PM PDT

எங்கள் நாட்டிற்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என மியான்மர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் சென்று இந்திய

மியான்மரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்: 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

Posted: 10 Jun 2015 10:47 AM PDT

மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் சென்று இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் வேட்டையாடினர்.

தென்னிந்தியாவில் ஏர்செல் ரோமிங் கட்டணம் ரத்து: இன்கமிங் இனி இலவசம்

Posted: 10 Jun 2015 08:53 AM PDT

ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் தென்னிந்தியாவில் ரோமிங் கட்டணத்தை இன்று ரத்து செய்து இலவச இன்கமிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. 'ஐந்து மாநிலங்கள், ஒரே கட்டணம்' என்ற திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையைப் பெறுவதற்காக புதிதாக ரீசார்ஜ்

30 வயது புற்றுநோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Posted: 10 Jun 2015 08:47 AM PDT

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் 30 வயது நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்குமாறு டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த சதிஷ்(30) என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சதிஷை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்து வந்த விபரம் கடந்த மார்ச் மாதம் தெரிய வந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™