Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டின் மறுசீரமைப்புக்கு இந்தியா ரூ.6300 கோடி உதவி

Posted: 24 Jun 2015 10:35 PM PDT

நேபாள நாட்டில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானதில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அந்நாட்டின் புராதன சின்னங்கள் சேதம் அடைந்து அழிந்துவிட்டது. பூகம்ப மீட்பு பணிக்கு இந்தியா உதவியதுடன் ராணுவத்தையும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் அனுப்பி வைத்தது.

கேரள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரச்சாரம்

Posted: 24 Jun 2015 10:27 PM PDT

கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஓ.ராஜகோபால், கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் மந்திரி விஜயக்குமாரும்

காந்தி பிறந்தநாளில் மது சப்ளை செய்வதா?: அருண்ஜெட்லி மீது வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. எம்.பி. போர்க்கொடி

Posted: 24 Jun 2015 10:25 PM PDT

லலித் மோடி விவகாரத்தில் சிக்கி தவித்து வரும் பா.ஜ.க. அரசுக்கு அந்த கட்சியின் சொந்த எம்.பி.க்கள் சிலர் சத்ருக்களாக மாறி வருகின்றனர். அவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி கீர்த்தி ஆசாத் தொடர்ந்து பா.ஜ.க. மந்திரிகளை விமர்சனம் செய்து வருகிறார். லலித் மோடிக்கு உதவி செய்த சர்ச்சை வெளியானதும் சுஷ்மாவும், வசுந்தராவும் பதவி விலக வேண்டும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

குஜராத்தில் கனமழைக்கு 35 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 24 Jun 2015 09:14 PM PDT

குஜராத்தில் பெய்த கனமழைக்கு 35 பேர் பலியாகியுள்ளனர். அரேபிய கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நேற்றிலிருந்து குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது.

அவசர நிலைக்காலம் இந்தியாவின் இருண்ட காலம்: பிரதமர் மோடி

Posted: 24 Jun 2015 09:01 PM PDT

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனத்தை அறிவித்து அவசர நிலையை கொண்டு வந்தார். இந்த சம்பவம் இதே நாளில்தான் (ஜூன் 25) நடந்தது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

Posted: 24 Jun 2015 08:46 PM PDT

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது

விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு

Posted: 24 Jun 2015 08:26 PM PDT

மும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜீலம் நதியில் அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளத்தால் அபாய எச்சரிக்கை

Posted: 24 Jun 2015 08:21 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்

6 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் உதயம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 24 Jun 2015 04:49 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 'ஐ.ஐ.எம்.' என்று அழைக்கப்படக்கூடிய 6 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இவை, விசாகப்பட்டினம் (ஆந்திர பிரதேசம்), புத்தகயா (பீகார்), சிர்மார் (இமாச்சல பிரதேசம்), நாக்பூர்

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Posted: 24 Jun 2015 04:31 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் நகலா சத்தராபன் என்ற இடத்தில் கடந்த மே 25-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தனது செல்போனில் இருந்து போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது

Posted: 24 Jun 2015 04:05 PM PDT

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்கா சப்-டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கேரள சோதனைச் சாவடிகளில் உணவு பொருள் தர பரிசோதனைக்கூடம்: பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை

Posted: 24 Jun 2015 03:00 PM PDT

உணவு பொருட்களின் தர பரிசோதனைக்காக நாட்டிலேயே முதல் முறையாக கேரள சோதனைச்சாவடிகளில் நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசிடம் சமீபத்தில் கேரளா தெரிவித்து உள்ளது.

பா.ஜனதா எம்.பி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Posted: 24 Jun 2015 01:56 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம்-ஜபுவா தொகுதியின் பா.ஜ.க எம்.பி திலீப் சிங் பூரியா. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் ஆவார். 71 வயதான இவர் மூளையில் ரத்த கசிவு மற்றும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது

மானிய விலையில் உணவு வழங்கும் பிரச்சினை: பாராளுமன்ற குழுக்கள் கவனம் செலுத்த வேண்டும் - வெங்கையா நாயுடு

Posted: 24 Jun 2015 01:25 PM PDT

பாராளுமன்ற கேன்டீன்களில் எம்.பி.க்களுக்கு 150 சதவீத மானியத்தில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதும், இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ரூ.60 கோடியே 70 லட்சத்தை மானியமாக வழங்கி இருக்கும் தகவலும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து மதுபானத்துக்கு தர நிர்ணயம் செய்ய முடிவு

Posted: 24 Jun 2015 12:07 PM PDT

உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மதுபானங்களுக்கு தர நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின், பீர் உள்பட ஒவ்வொரு மதுவகையிலும் எந்த அளவுக்கு தரம் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.

டெல்லி மருத்துவமனைகளில் சராசரியாக 1000 பேருக்கு 2.71 படுக்கைகள்

Posted: 24 Jun 2015 11:36 AM PDT

டெல்லி மருத்துவமனைகளில் சராசரியாக 1000 பேருக்கு 2.71 படுக்கைகள் மட்டுமே உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள ஆயிரம் பேருக்கு 5 என்பதில் பாதியளவே ஆகும். கடந்த 2014-15-ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வேயில் டெல்லி

வசுந்தரா மீதான குற்றச்சாட்டை ஏற்காத பா.ஜனதா - போராட்ட எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்

Posted: 24 Jun 2015 09:19 AM PDT

லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும், போலி கல்விச்சான்றிதழ் சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இராணியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதே விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதனை பா.ஜனதா தலைமை

யோகா தினத்தை தொடர்ந்து ரக்‌ஷா பந்தன் விழாவையும் விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்?

Posted: 24 Jun 2015 09:03 AM PDT

டெல்லியில் கடந்த 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தை மிக சிறப்பான வகையில் கொண்டாடியதுபோல், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்‌ஷாபந்தன்' விழாவையும் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள்

வாலிபருக்கு திடீர் நெஞ்சு வலி: சிட்னியில் இருந்து துபாய் சென்ற விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்

Posted: 24 Jun 2015 08:57 AM PDT

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த 22 வயது ஆஸ்திரேலிய வாலிபருக்கு பயணத்தின் இடையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

200 கலைஞர்கள் வரைந்த சார்லி சாப்ளின் ஓவியங்கள்: நாளை மும்பையில் மாபெரும் கண்காட்சி

Posted: 24 Jun 2015 08:17 AM PDT

சொந்த வாழ்க்கையில் மூட்டை கணக்கில் சோகங்களை சுமந்தபடி உலக மக்களை சிரிக்க வைத்த உன்னதக் கலைஞன் சார்லி சாப்ளினின் உருவத்தை பல கோணங்களில் பதிவு செய்துள்ள மாபெரும் ஓவியக் கண்காட்சி மும்பையில் நாளை தொடங்குகின்றது. சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாளையொட்டி அவரது திரையுலக சாதனைகளை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™