மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மராட்டிய கல்வி மந்திரியும் போலி பட்டம் பெற்றாரா?: காங்கிரஸ் கட்சி புகார்
- சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது கர்நாடகா
- பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா கூட்டணியில் குழப்பம்
- கர்நாடகத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விற்பனை: உடல் நலத்தை பேண நடவடிக்கை
- கிராமங்கள் தோறும் பரவ செய்ய யோகா கலை வளர்ச்சிக்கு ரூ.500 கோடியில் திட்டம்: மத்திய அரசு பரிசீலினை
- அன்னை தெரசாவின் அன்பின் துறவற சபை தலைவராக பணியாற்றிய அருட்சகோதரி நிர்மலா காலமானார்
- கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்
- அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. மறக்கவில்லை: ஆனால் வளர்ச்சிக்கே முன்னுரிமை - மத்திய மந்திரி
- மும்பையில் விஷச்சாராயம் குடித்து 105 பேர் பலியான சம்பவத்தில் 2 பெண்கள் கைது
- நெருக்கடி நிலை பற்றிய கருத்து: அத்வானிக்கு சிவசேனா கேள்வி
- வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கருப்பு பணக்காரர்களுக்கு சலுகை திட்டம் விரைவில் அறிவிப்பு
- கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில்
- சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசிதரூரின் கார் டிரைவர் உள்பட 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
- யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
- டெல்லியில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம்
- கடத்தி கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் இறுதி சடங்குகளை நடத்த பெற்றோர் மறுப்பு
- காபூலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதர் தகவல்
- கிரிடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் வரிச்சலுகை: மத்திய அரசு பரிசீலனை
- உலக யோகா தின நிகழ்வு: ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்பு கேட்டது மத்திய அரசு
- எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் - இரு வாரிசுகளுக்கு அரசு வேலை: அகிலேஷ் யாதவ் உத்தரவு
| மராட்டிய கல்வி மந்திரியும் போலி பட்டம் பெற்றாரா?: காங்கிரஸ் கட்சி புகார் Posted: 22 Jun 2015 11:03 PM PDT மராட்டிய மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசில் கல்வி மந்திரியாக இருப்பவர் வினோத் தாவ்டே. இவர் தன் வேட்பு மனுவில் தான் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பு படித்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். புனேயில் உள்ள செயிண்ட் |
| சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது கர்நாடகா Posted: 22 Jun 2015 11:02 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அப்பீல் செய்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறி முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், பெங்களூர் சிறப்பு |
| பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் Posted: 22 Jun 2015 10:57 PM PDT பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜனதாவுடன் |
| கர்நாடகத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விற்பனை: உடல் நலத்தை பேண நடவடிக்கை Posted: 22 Jun 2015 10:35 PM PDT கர்நாடகத்தில் கன்னடர்களின் வீடுகளில் இன்றும் கேழ்வரகு உணவு இடம் பெறுகிறது. திருமணம் விழாக்கள், விசேஷங்களில் கேழ்வரகு உணவு தான் சம்பிரதாயப்படி முதலில் வழங்கப்படும். அதன்பிறகு தான் மற்ற உணவு வகைகள் பரிமாற்றப்படும். கேழ்வரகில் கால்சியம், புரோட்டீன், இரும்பு சத்துக்கள், தாதுக்கள் அதிக அளவிலும் கொழுப்பு சத்து குறைவாகவும் உள்ளது. எனவே கேழ்வரகை |
| கிராமங்கள் தோறும் பரவ செய்ய யோகா கலை வளர்ச்சிக்கு ரூ.500 கோடியில் திட்டம்: மத்திய அரசு பரிசீலினை Posted: 22 Jun 2015 10:13 PM PDT சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21–ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மிகவும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. அதில் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வெளிநாட்டுத் தூதர்கள் 84 பேர் பங்கேற்றனர். இவை இரண்டும் புதிய கின்னஸ் சாதனையாக |
| அன்னை தெரசாவின் அன்பின் துறவற சபை தலைவராக பணியாற்றிய அருட்சகோதரி நிர்மலா காலமானார் Posted: 22 Jun 2015 10:12 PM PDT அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்டவரும், இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரசா கொல்கத்தாவில் கடந்த 1950 ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ந் தேதி பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். இதன் நோக்கம் "உண்ண |
| கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல் Posted: 22 Jun 2015 10:11 PM PDT வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல மாணவர்களின் கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை சகோதரர்கள் ராஜூ(18) மற்றும் பிரிஜேஸ்(19). இவர்களது அப்பா தினக்கூலியாக வேலை செய்து வரும் |
| அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. மறக்கவில்லை: ஆனால் வளர்ச்சிக்கே முன்னுரிமை - மத்திய மந்திரி Posted: 22 Jun 2015 10:10 PM PDT ராமர் கோவில் பிரச்சனையை பாரதிய ஜனதா கட்சி இன்னும் மறந்துவிடவில்லை அதேநேரம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வளர்ச்சிக்கே முன்னுரிமை என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மீரட் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் "நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக |
| மும்பையில் விஷச்சாராயம் குடித்து 105 பேர் பலியான சம்பவத்தில் 2 பெண்கள் கைது Posted: 22 Jun 2015 09:39 PM PDT மும்பை மால்வாணியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை கூலித்தொழிலாளர்கள் வாங்கி குடித்தார்கள். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்திற்கு இதுவரையிலும் 105 பேர் பலியாகி விட்டனர். தொடர்ந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. |
| நெருக்கடி நிலை பற்றிய கருத்து: அத்வானிக்கு சிவசேனா கேள்வி Posted: 22 Jun 2015 07:51 PM PDT பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''நாட்டில் நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படாது என்று சொல்ல முடியாது'' என்று கருத்து கூறியிருந்தார். தவிர, இன்றைய தலைவர்களின் தலைமைப்பண்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய சில |
| வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கருப்பு பணக்காரர்களுக்கு சலுகை திட்டம் விரைவில் அறிவிப்பு Posted: 22 Jun 2015 07:38 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டு வருகிறது. அத்துடன், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள |
| கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில் Posted: 22 Jun 2015 05:16 PM PDT வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் என்னை ஏன் குள்ளமாக படைத்தாய், நான் இப்படி ஏன் இல்லை அப்படி இல்லை என்று கடவுளிடம் புலம்பி இருப்போம் இல்லையா..? |
| சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசிதரூரின் கார் டிரைவர் உள்பட 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை Posted: 22 Jun 2015 04:40 PM PDT முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் விஷம் கலந்து இருப்பதாக 'எய்ம்ஸ்' டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அது எந்த வகையான விஷம் என்பதை கண்டறிவதற்காக, சுனந்தாவின் உள் |
| யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு Posted: 22 Jun 2015 04:18 PM PDT பீகாரில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் வினய் குமார் சிங் என்பவர் பாட்னாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- |
| டெல்லியில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் Posted: 22 Jun 2015 04:10 PM PDT பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில மற்றும் டெல்லி மாநகராட்சியை சேர்ந்த 20 அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். |
| கடத்தி கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் இறுதி சடங்குகளை நடத்த பெற்றோர் மறுப்பு Posted: 22 Jun 2015 12:44 PM PDT மத்திய பிரதேச மாநிலம் பலாகாட் மாவட்டம் கதாங்கி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் கோத்தாரி. மணல் கொள்ளை தொடர்பாக உள்ளூர் கோர்ட்டில் இவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை திரும்பப் பெறும்படி அவரை சிலர் மிரட்டியும் திரும்ப பெறாததால் ஒரு கும்பல் |
| காபூலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதர் தகவல் Posted: 22 Jun 2015 12:11 PM PDT காபூல் நகரில், ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது நேற்று தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் உள்பட 7 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலை படை தீவிரவாதி குண்டுகளை நிரப்பிய காரை வெடிக்கச் செய்தபோது பலியானார். இந்த தாக்குதலில் ஒரு பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். |
| கிரிடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் வரிச்சலுகை: மத்திய அரசு பரிசீலனை Posted: 22 Jun 2015 11:30 AM PDT கரன்சி நோட்டு பயன்பாட்டை குறைப்பதற்காக, கிரிடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் பங்கில் பயன்படுத்துவதற்கும், ரெயில் டிக்கெட் எடுப்பதற்கும் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது. |
| உலக யோகா தின நிகழ்வு: ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்பு கேட்டது மத்திய அரசு Posted: 22 Jun 2015 10:41 AM PDT நேற்று டெல்லியில் நடந்த உலக யோகா தின நிகழ்விற்கு ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பபட்ட விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளது. முன்னதாக பா.ஜ.காவின் மூத்த தலைவர் ராம் மாதேவ், உலக யோகா தின நிகழ்வில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொள்ளாதது பற்றி |
| Posted: 22 Jun 2015 09:25 AM PDT உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலையும் வழங்க அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |