Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திர மாநில பெண் மந்திரி வீட்டில் மர்ம பையில் ரூ.10 லட்சம்: ஊழலில் சிக்க வைக்க பெண் சதியா?

Posted: 02 Jun 2015 11:06 PM PDT

ஆந்திர மாநில மகளிர் மேம்பாடு மற்றும் கனிம வளத்துறை மந்திரி சுஜாதா. இவரது சொந்த வீடு மேற்கு கோதாவரி மாவட்டம் வீரவாகரம் என்ற ஊரில் உள்ளது. இன்று காலை மந்திரி சுஜாதாவை தேடி ஒரு பெண் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த வேலைக்காரர் சுப்பாராவ், 'மந்திரி வெளியே போய் இருக்கிறார் வருவதற்கு நேரம் ஆகும்' என்று கூறினார். சிறிது நேரம்

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் கடும் அவதி

Posted: 02 Jun 2015 11:00 PM PDT

திருப்பதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் கோவில் முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் விழா நடந்து வருகிறது. நேற்று மாலை

சந்திரபாபு நாயுடுவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: கவர்னரிடம் ஜெகன்மோகன் ரெட்டி மனு

Posted: 02 Jun 2015 10:55 PM PDT

தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்

Posted: 02 Jun 2015 10:45 PM PDT

ஆந்திர முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்று 1 ஆண்டு நிறைவடைந்துவிட்டது. தேர்தலின் போது அவர் 600–க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்லை தவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டினார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வேன். மகளிர்

சபரிமலையில் தங்க நகை திருட்டு சம்பவம்: தேவஸ்தான முன்னாள் அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 02 Jun 2015 09:05 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அய்யப்பன் திரு உருவம் பதித்த தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு அளவுகளில் தங்க நகைகள் தேவஸ்தான அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு, பின்னர் அந்த நகைகள்

மேகி நூடுல்ஸ் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது: கர்நாடக அரசு நடவடிக்கை

Posted: 02 Jun 2015 08:04 PM PDT

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான 'மேகி நூடுல்ஸ்' குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவாக உள்ளது. இதன் தரம் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில், இதில் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேக் இன் இந்தியா சிங்கம் சுவிஸ் வங்கி விளம்பரத்தை பார்த்து உருவாக்கப்பட்டதா?

Posted: 02 Jun 2015 05:33 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலச்சினையாக(Logo) உள்ள சிங்கத்தை சுவிஸ் வங்கியின் விளம்பரத்தை தழுவி உருவாக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள கண்டோனல் வங்கியின்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட்டால் பா.ஜனதா ஆதரிக்கும்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

Posted: 02 Jun 2015 05:11 PM PDT

டெல்லியில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சி மக்களுடன் மேற்கொள்ளும் தொடர்பை விஸ்தரிக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்த திட்டங்களை

மேகி நூடுல்ஸ் வினியோகத்துக்கு கேரள அரசு தடை

Posted: 02 Jun 2015 03:57 PM PDT

'மேகி' நூடுல்சில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கேரள அரசு அதன் வினியோகத்துக்கு நேற்று தற்காலிக தடை விதித்தது. 'சப்ளைகோ' எனப்படும் கேரள அரசின் சிவில் சப்ளை கழகத்துக்கு சொந்தமாக, மாநிலம் முழுவதும் ஆயிரத்து 400 சில்லரை விற்பனை கடைகள் உள்ளன.

சுனந்தாவின் சாவை இயற்கை மரணம் என்று அறிவிக்க நெருக்கடி கொடுத்தனர்: டாக்டர்கள் திடுக்கிடும் தகவல்

Posted: 02 Jun 2015 03:15 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் 52 வயது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை

தெலுங்கானா தனி மாநிலம் அமைந்து ஒரு ஆண்டு நிறைவு: ஒரு வார கோலாகல கொண்டாட்டம் தொடங்கியது

Posted: 02 Jun 2015 02:50 PM PDT

ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வந்தனர். பலரின் உயிர் தியாகத்திற்கு பின் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா தனி மாநில அந்தஸ்தை பெற்றது. தெலுங்கானா தனி மாநில அந்தஸ்து பெற்று நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது.

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் அரசு இணையதளம் தொடங்கப்பட்டது

Posted: 02 Jun 2015 01:35 PM PDT

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டனர்.

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி இல்லை: பா.ஜ.க. உறுதி

Posted: 02 Jun 2015 12:23 PM PDT

பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் போது மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலின் போது பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாள தளமும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும்

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது: டெல்லி அரசு அதிரடி

Posted: 02 Jun 2015 10:35 AM PDT

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என்று டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள 13 மேகி நூடுல்ஸ் பாக்கெட் மாதிரிகளை சோதனை செய்ததில் 10 மாதிரிகள் பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டதாக டெல்லி அரசு கூறியுள்ளது.

சாய்னாவையும் விட்டு வைக்காத டப்ஸ்மேஷ் காய்ச்சல்: க்யூட் வீடியோ

Posted: 02 Jun 2015 10:10 AM PDT

சல்மான் கான், சோனாக்‌ஷி ஐன்ஹா, அலியா பட் என்று பாலிவுட் நட்சத்திரங்களை சமீபத்தில் பிடித்த டப்ஸ்மேஷ் காய்ச்சல் இந்திய விளையாட்டுத் துறையில், முதல் முறையாக சாய்னா நேவாலுக்கும் பிடித்து விட்டது.

சுற்றுலா வளர்ச்சிக்காக 1100 தீவுகள் மேம்படுத்தப்படும்: நிதின் கட்காரி

Posted: 02 Jun 2015 09:37 AM PDT

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில், 1100 தீவுகளை மேம்படுத்த பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

பிடிவாரண்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி முறையீடு

Posted: 02 Jun 2015 09:15 AM PDT

அசாம் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டுக்கு எதிராக சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, மசூதிகள் தொடர்பாக அவர்

மதரீதியாக மக்களை பிரித்தாளும் அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை: முஸ்லிம் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

Posted: 02 Jun 2015 08:59 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் மக்களை பிரித்தாளும் அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காஷ்மீர் பகுதிகளில் தேர்தல் அறிவிப்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Posted: 02 Jun 2015 08:21 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கில்கிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில், வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் கூறியதாவது:-

ரூ. 100 கோடி கடனை வசூலிப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரி முன்னர் வங்கி ஊழியர்கள் போராட்டம்

Posted: 02 Jun 2015 06:56 AM PDT

நூறு கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாத பெங்களூர் விக்ரம் ஆஸ்பத்திரியின் முன்னர் இன்று யுனைட்டட் இந்தியா வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் அனுமதியின்றி இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெங்களூர் சரக யுனைட்டட் இந்தியா வங்கியின் தலைமை அதிகாரி மற்றும் உதவி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™