மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானா அரசை உளவு பார்க்க ரூ.50 கோடியில் கருவி வாங்கிய ஆந்திரா
- அரபிக்கடலில் புயல்: குஜராத்தை இன்று தாக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
- தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 27–ந்தேதி வரை கனமழை
- ரெயில் என்ஜின் மேல் ஏறி நின்று விபரீத செல்பி: உயரழுத்த மின்சாரத்தால் தூக்கி வீசப்பட்ட வாலிபர்
- மேக் இன் இந்தியா திட்டம் பற்றி விமர்சனம்: மோடி மீது யஷ்வந்த்சின்கா தாக்கு
- திருப்பதி வனப்பகுதியில் கடத்தல் கும்பல் புதைத்து வைத்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
- லக்வி விடுதலை விவகாரம்: ஐ.நா.வில் சீனாவின் முட்டுக்கட்டையால் இந்தியா அதிர்ச்சி
- மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
- ரூ.4 லட்சம் கோடியில் 3 பிரமாண்ட திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்
- லலித் மோடிக்கு உதவுவது சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தவறானது: பா.ஜனதா எம்.பி. ஆர்.கே.சிங் சொல்கிறார்
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்
- நாங்கள் தோமரை நீக்கியதுபோன்று சுஷ்மா, வசுந்தராவை நீக்க வேண்டும்: கெஜ்ரிவால் சொல்கிறார்
- லக்வி விடுதலைக்கு எதிர்ப்பு: சீனாவிடம் இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார் மோடி
- டெல்லி மேல்-சபையில் நில மசோதா நிறைவேறாவிட்டால் பாராளுமன்ற கூட்டு கூட்டம்: அருண் ஜெட்லி தகவல்
- நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டுவர காரணம் யார்?: முன்னாள் அந்தரங்க உதவியாளர் வெளியிட்ட ரகசியம்
- அட்டார்னி ஜெனரல் கருத்து விவகாரம்: மத்திய அரசை கண்டித்து டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பேன்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு
- ரயில் பாதையை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்: பலாமு எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது
- அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு ஜூலை 25ல் நடைபெறும் என அறிவிப்பு
- 29 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஜூலை 1 முதல் சுவையூட்டிய பால்: ம.பி. அரசு அறிவிப்பு
- போராட்டம் நடத்திவரும் டெல்லி அரசு டாக்டர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது
| தெலுங்கானா அரசை உளவு பார்க்க ரூ.50 கோடியில் கருவி வாங்கிய ஆந்திரா Posted: 23 Jun 2015 11:39 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டது. இந்த இரண்டு மாநிலத்துக்கும் பொதுவான தலைநகராக ஐதராபாத் உள்ளது. |
| அரபிக்கடலில் புயல்: குஜராத்தை இன்று தாக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை Posted: 23 Jun 2015 10:52 PM PDT தென்மேற்கு பருவ மழை கேரளா, கர்நாடகம், மராட்டியம், குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. சமீபத்தில் அரபிக்கடலில் உருவான சோபியா புயல் மேற்கு மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திசை மாறி ஏமன் நாட்டுக்கு சென்று |
| தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 27–ந்தேதி வரை கனமழை Posted: 23 Jun 2015 10:51 PM PDT கேரளாவில் கடந்த 5–ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம், காசர்கோடு, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த கனமழை வருகிற 27–ந்தேதி |
| ரெயில் என்ஜின் மேல் ஏறி நின்று விபரீத செல்பி: உயரழுத்த மின்சாரத்தால் தூக்கி வீசப்பட்ட வாலிபர் Posted: 23 Jun 2015 10:46 PM PDT செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கீதம் பலகலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வருபவர் சதீஷ்(18). இவர் நேற்று தனது |
| மேக் இன் இந்தியா திட்டம் பற்றி விமர்சனம்: மோடி மீது யஷ்வந்த்சின்கா தாக்கு Posted: 23 Jun 2015 10:05 PM PDT முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்தவர் யஷ்வந்த்சின்கா. இவர் தற்போதைய மோடி மந்திரி சபையில் புறக்கணிப்பட்டார். கட்சி நடவடிக்கையிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளார். நேற்று மும்பையில் நடந்த அகில இந்திய தொழிற்சாலைகள் மற்றும் உலக வர்த்தக மைய கருத்தரங்கில் யஷ்வந்த் சின்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது சங்கத்தின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் |
| திருப்பதி வனப்பகுதியில் கடத்தல் கும்பல் புதைத்து வைத்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் Posted: 23 Jun 2015 09:49 PM PDT திருப்பதி அடுத்த சந்திரகிரி நடுமபள்ளியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களை சேர்ந்த ராமராஜன் (36), கோவிந்தன் (35), முருகன்(38), விமல்(32) மற்றொரு கோவிந்தன்(33) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது செம்மரங்களை பாலாப்பள்ளி வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்து வைத்து இருப்பதாக |
| லக்வி விடுதலை விவகாரம்: ஐ.நா.வில் சீனாவின் முட்டுக்கட்டையால் இந்தியா அதிர்ச்சி Posted: 23 Jun 2015 08:23 PM PDT மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி ஜாகியுர் லக்வி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் ஜாமீன் வழங்கியது. |
| மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது Posted: 23 Jun 2015 08:02 PM PDT மும்பை புறநகர், மால்வானியில் லட்சுமி நகர் குடிசை பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு விஷ சாராயம் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்தனர். |
| ரூ.4 லட்சம் கோடியில் 3 பிரமாண்ட திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார் Posted: 23 Jun 2015 05:20 PM PDT ரூ.4 லட்சம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள், நகரங்களை புதுப்பித்தல், அனைவருக்கும் வீடு ஆகிய பிரமாண்ட திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார். கிராம மக்கள் பெரிய நகரங்களை நோக்கி இடம் பெயர்வதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதிலும் 100 'ஸ்மார்ட்' நகரங்கள் |
| Posted: 23 Jun 2015 05:20 PM PDT ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியதும் அவர் தலைமறைவானார். இங்கிலாந்தில் குடியேறிய அவர் அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல பயண ஆவணங்களை வழங்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியதாக தகவல் வெளியானது. |
| வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம் Posted: 23 Jun 2015 05:01 PM PDT வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது. |
| நாங்கள் தோமரை நீக்கியதுபோன்று சுஷ்மா, வசுந்தராவை நீக்க வேண்டும்: கெஜ்ரிவால் சொல்கிறார் Posted: 23 Jun 2015 04:53 PM PDT டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில், மந்திரியாக இருந்த ஜிதேந்தர் தோமர் சான்றிதழ் மோசடி குற்றச்சாட்டில் சிக்கினார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் விளக்கம் தர வேண்டும் என்ற |
| லக்வி விடுதலைக்கு எதிர்ப்பு: சீனாவிடம் இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார் மோடி Posted: 23 Jun 2015 03:35 PM PDT மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லக்வியை விடுதலை செய்த பாகிஸ்தான் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியை சீனா முடக்க முயற்சிப்பது தொடர்பாக அந்நாட்டிடம் இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியுள்ளார் மோடி. |
| டெல்லி மேல்-சபையில் நில மசோதா நிறைவேறாவிட்டால் பாராளுமன்ற கூட்டு கூட்டம்: அருண் ஜெட்லி தகவல் Posted: 23 Jun 2015 02:41 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவை டெல்லி மேல்-சபையில் நிறைவேற்ற முடியாவிட்டால் பாராளுமன்றத்தின் கூட்டு குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து அதை நிறைவேற்றுவோம் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதி மந்திரி அருண் |
| நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டுவர காரணம் யார்?: முன்னாள் அந்தரங்க உதவியாளர் வெளியிட்ட ரகசியம் Posted: 23 Jun 2015 02:02 PM PDT அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை அடுத்து இந்திரா காந்தி நெருக்கடி நிலையை கொண்டு வர யார் காரணம் என்ற ரகசியத்தை அவரது முன்னாள் அந்தரங்க உதவியாளர் வெளியிட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந்தேதி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார். நெருக்கடி நிலை |
| Posted: 23 Jun 2015 11:59 AM PDT தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்.எல்.ஏ. எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி உள்பட 3 பேர் தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். |
| ரயில் பாதையை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்: பலாமு எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது Posted: 23 Jun 2015 11:17 AM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் ரயில் பாதையை வெடிவைத்து தகர்த்ததை தொடர்ந்து பலாமு எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. பலாமு எக்ஸ்பிரஸ் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் பார்காகானாவிற்கு சென்று கொண்டிருந்த போது சிகிபாதோஹர் மற்றும் |
| அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு ஜூலை 25ல் நடைபெறும் என அறிவிப்பு Posted: 23 Jun 2015 10:25 AM PDT இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, பல்மருத்துவ கல்லூரிகளில் முறையே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் 15 சதவீதம் மாணவர்கள் இட ஒதுக்கீடு பெறுகின்றனர். எனவே இந்த நுழைவுத் தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டுக்கான மருத்துவ |
| 29 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஜூலை 1 முதல் சுவையூட்டிய பால்: ம.பி. அரசு அறிவிப்பு Posted: 23 Jun 2015 09:05 AM PDT மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சுமார் 92 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 29 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழந்தைகளுக்கு இங்கேயே மதிய உணவு தயாரித்து அளிக்கப்படுகின்றன. இந்த மதிய உணவில் முட்டைகளையும் சேர்த்து |
| போராட்டம் நடத்திவரும் டெல்லி அரசு டாக்டர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது Posted: 23 Jun 2015 08:39 AM PDT உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவு வழங்க வேண்டும், பணியின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களுக்கு பணி நேரம் அறிவிக்க வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அரசு டாக்டர்கள் நேற்று காலவரையற்ற |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |