மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வேன் கவிழ்ந்து 22 பேர் பலி: டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் கோர விபத்து- முதல் கட்ட விசாரணையில் தகவல்
- பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து
- மாங்காய் பறித்தபோது சண்டை: மைனர் பெண்ணை உயிரோடு எரித்த கும்பல்
- அருவிக்கரை இடைத்தேர்தல்: மக்களுக்கு நன்மை செய்யாத காங்கிரஸ் வெற்றி பெற முடியாது- அச்சுதானந்தன்
- ஆல் கெமிஸ்ட்ரி இஸ் ஒன் கெமிஸ்ட்ரி: விசாரணையில் திருதிருவென முழிக்கும் டெல்லி முன்னாள் மந்திரி தோமர்
- கோழிக்கோடு விமான நிலைய மோதல்: தீயணைப்பு அதிகாரிகள் 9 பேர் ஜெயிலில் அடைப்பு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 20 மணிநேரம் ஆகிறது
- மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
- பெங்களூருவில் அசாம் தீவிரவாதிகள் 4 பேர் கைது
- அணு உலை விபத்து இழப்பீடுக்காக ரூ.1,500 கோடி காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு
- காவிரியில் கழிவுநீர் கலப்பதாக தமிழக அரசு கூறும் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதில் அளிக்க வேண்டும்: தேவேகவுடா
- குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு
- இந்திய நிறுவனமான ஹல்திராம்சின் தயாரிப்புகள் உண்ணத் தகுந்ததல்ல: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி
- புனே பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் போராட்டம்: தலைவராக பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது
- தொடர்ந்து வெளுக்கும் மேகியின் சாயம்: உத்தரகாண்டில் நடந்த தர சோதனையிலும் தோல்வி
- முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு
- தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: 4 பேர் துடிதுடித்து பலி
- நாளை இந்தியாவுக்கு எதிரான கருத்தரங்கு நடத்த திட்டம்: காஷ்மீர் ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் கிலானிக்கு வீட்டுச்சிறை
- போலி வக்கீல் பட்டம்: தோமரின் போலீஸ் காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு
- கார் தலைகீழாக கவிழ்ந்து தெலுங்கானா நிதி மந்திரி காயம்
| Posted: 13 Jun 2015 11:32 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மோசையபேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் (55). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 23 பேருடன் கோவில்களுக்கு 8 நாள் சுற்றுலா புறப்பட்டார். அப்பாராவுக்கு சொந்தமான வேனிலேயே அவர்கள் அனைவரும் சென்றனர். ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று முன்தினம் |
| பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து Posted: 13 Jun 2015 11:26 PM PDT பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் சமஸ்திபூரில் மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பி.ஏ. 2–வது பகுதி தேர்வு நடந்தது. அப்போது மாணவிகள் எதிர்எதிரில் அமர்ந்து ஒட்டு மொத்தமாக அனைவரும் |
| மாங்காய் பறித்தபோது சண்டை: மைனர் பெண்ணை உயிரோடு எரித்த கும்பல் Posted: 13 Jun 2015 10:47 PM PDT உத்தரப்பிரதேசத்தின் பதேஹ்பூர் மாவட்டத்தில் நேற்று மாங்காய் பறித்தபோது நடந்த சண்டையில் மைனர் பெண் ஒருவர் உயிரோடு தீ வைத்து கொல்லப்பட்டார். அம்மாவட்டத்தில் உள்ள கீஷண் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவ்பூஷண். இவர் தனது தோட்டத்தில் மாங்காய் மரங்களை பயிரிட்டுள்ளார். |
| அருவிக்கரை இடைத்தேர்தல்: மக்களுக்கு நன்மை செய்யாத காங்கிரஸ் வெற்றி பெற முடியாது- அச்சுதானந்தன் Posted: 13 Jun 2015 10:39 PM PDT திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சபரிநாதன், பாரதீயஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஓ.ராஜகோபால், கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் மந்திரி விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல்படி இந்த தொகுதியில் மொத்தம் 16 |
| ஆல் கெமிஸ்ட்ரி இஸ் ஒன் கெமிஸ்ட்ரி: விசாரணையில் திருதிருவென முழிக்கும் டெல்லி முன்னாள் மந்திரி தோமர் Posted: 13 Jun 2015 10:02 PM PDT போலி பட்டம் பெற்ற டெல்லியின் முன்னாள் சட்ட மந்திரி தோமர் போலீஸ் விசாரனையின் போது ஆல் கெமிஸ்ட்ரி இஸ் ஒன் கெமிஸ்ட்ரி என தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வக்கீலுக்கு படிக்காமல் போலியாக வக்கீல் பட்டம் பெற்றதாக |
| கோழிக்கோடு விமான நிலைய மோதல்: தீயணைப்பு அதிகாரிகள் 9 பேர் ஜெயிலில் அடைப்பு Posted: 13 Jun 2015 09:29 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீயணைப் புத்துறையினருக்கும் பயங்கர மோதல் நடந்தது. இந்த மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பெரும் |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 20 மணிநேரம் ஆகிறது Posted: 13 Jun 2015 09:28 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் வரை கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மதியத்துக்குமேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி ஆகிய இரு மலைப்பாதைகளிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து திருமலைக்கு |
| மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து Posted: 13 Jun 2015 08:26 PM PDT மும்பை வடாலா-சிவ்ரி பகுதிகளுக்கு இடையே உள்ள பி.பி.டி. சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் கியாஸ் குழாயில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவியது. அங்குள்ள மரங்கள், செடி, கொடிகள் தீயில் கருகின. பல மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. |
| பெங்களூருவில் அசாம் தீவிரவாதிகள் 4 பேர் கைது Posted: 13 Jun 2015 08:12 PM PDT பெங்களூரு ராஜகோபால் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீகந்தகாவல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். |
| அணு உலை விபத்து இழப்பீடுக்காக ரூ.1,500 கோடி காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 13 Jun 2015 07:52 PM PDT அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, அந்த நாடுகள், இந்தியாவில் அணு உலை அமைப்பதற்கு தேவையான சாதனங்களையும், அணு மின்சாரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களையும் சப்ளை செய்து வருகின்றன. |
| Posted: 13 Jun 2015 07:40 PM PDT ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது நான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன். இந்த பதவியை முழுமையாக நிறைவு செய்வேன். அப்போது எனக்கு 87 வயதாகிவிடும். |
| குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு Posted: 13 Jun 2015 07:19 PM PDT மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்தவர் பெண் வக்கீல் ஜான்வி (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் செம்பூர் ஆர்.சி.எப். பகுதியில் உள்ள கிழக்கு தனி வழிச்சாலையில் விதிமுறையை மீறி தவறான பாதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். தாறுமாறாக ஓடிய அவரது கார் ஒரு டாக்சி மீது மோதியது. |
| Posted: 13 Jun 2015 03:49 PM PDT மேகி சர்ச்சை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு பொருட்களை சோதனை செய்யக் காரணமாகியுள்ளது. அந்த வகையில் இந்தியத் தயாரிப்பான ஹல்திராம்ஸ் உண்ணத்தகுந்ததல்ல என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான FDA தெரிவித்துள்ளது. |
| Posted: 13 Jun 2015 02:56 PM PDT மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொடர்ந்து வெளுக்கும் மேகியின் சாயம்: உத்தரகாண்டில் நடந்த தர சோதனையிலும் தோல்வி Posted: 13 Jun 2015 01:16 PM PDT மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நெஸ்லே இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது. இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள ருத்ராபூரில் மாநில மருந்துகள் |
| முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு Posted: 13 Jun 2015 11:14 AM PDT குஜராத்தில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழா மேடையில், கை மணிக்கட்டை, பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் பாவ்லா நகரைச் சேர்ந்தவர் மொமாஜி தாகூர், |
| தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: 4 பேர் துடிதுடித்து பலி Posted: 13 Jun 2015 11:09 AM PDT மேகாலயா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். அங்குள்ள கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கும் தேசிய |
| Posted: 13 Jun 2015 09:22 AM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நாளை (14-ம் தேதி) இந்தியாவுக்கு எதிரான கருத்தரங்கை நடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீர் ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்பட பிரிவினைவாத தலைவர்கள் சிலர் இன்றிரவு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் |
| போலி வக்கீல் பட்டம்: தோமரின் போலீஸ் காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு Posted: 13 Jun 2015 08:22 AM PDT வக்கீலுக்கு படிக்காமல் போலியாக வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்திர சிங் தோமரின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலி வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை கைது செய்து கடந்த |
| கார் தலைகீழாக கவிழ்ந்து தெலுங்கானா நிதி மந்திரி காயம் Posted: 13 Jun 2015 08:21 AM PDT தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் இன்று கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் தெலுங்கானா நிதி மந்திரி எடேலா ராஜேந்தர் காயம் அடைந்தார். ஹுசுராபாத்தில் இருந்து கரிம்நகர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எடுலா கட்டேபல்லி என்ற கிராமத்தின் அருகே டிரைவரின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |