மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
- போலி பட்டம் விவகாரம்: விசாரணைக்கு தோமர் ஒத்துழைக்க மறுப்பு - டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு
- நெஸ்லேவை தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ் தரமனதாக இல்லை: பரிசோதனையில் கண்டுபிடிப்பு
- சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது
- முன்னாள் மத்திய மந்திரி ஷீலா கவுல் மரணம்: சோனியா காந்தி இரங்கல்
- டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு
- பீகார் சட்டமன்ற தேர்தலில் புதுசு: வெளிநாடுகளில் இருந்தபடியே என்.ஆர்.ஐ.க்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
- கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்
- மோடியின் ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது: மாயாவதி பேச்சு
- ரூ.100 கோடி செலவில் 5 ஆயிரம் பஸ்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்: டெல்லி அரசு முடிவு
- லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல்
- செம்மரங்களை பாதுகாக்க விரிவான கொள்கை தேவை: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்
- லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய அரசு ஆதரவு
- நாடு முழுவதும் ஒரே கட்டணம்: பி.எஸ்.என்.எல் இலவச ரோமிங் இன்று முதல் அமலுக்கு வருகிறது
- ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்படும்: மனோகர் பாரிக்கர் உறுதி
- பூமியைப் போன்று சந்திரனிலும் நிலநடுக்கம்
- நாடு முழுவதும் 5 ஆயிரம் பிடிஎஸ் டவர்களை அமைக்கும் பி.எஸ்.என்.எல்
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 4 புதிய அணைகள்: கர்நாடக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்
- 2 நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று சத்தீஷ்கார் செல்கிறார்
- மழைநீரால் சூழப்பட்ட ஷீரடி சாய்பாபா கோவில்: பக்தர்கள் கடும் அவதி
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு Posted: 14 Jun 2015 09:48 PM PDT பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆனி மாத பிறப்பையொட்டி இன்று (15–ந்தேதி) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி |
| போலி பட்டம் விவகாரம்: விசாரணைக்கு தோமர் ஒத்துழைக்க மறுப்பு - டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு Posted: 14 Jun 2015 09:46 PM PDT டெல்லியில் திரிநகர் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வென்று சட்ட சபைக்கு தேர்வானவர் ஜிதேந்தர்சிங் தோமர். 49 வயதாகும் இவரை சட்ட மந்திரியாக முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நியமனம் செய்தார். |
| நெஸ்லேவை தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ் தரமனதாக இல்லை: பரிசோதனையில் கண்டுபிடிப்பு Posted: 14 Jun 2015 09:16 PM PDT இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அதிக ரசாயன கலப்பு இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது Posted: 14 Jun 2015 09:10 PM PDT ஒடிசா ரெயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். |
| முன்னாள் மத்திய மந்திரி ஷீலா கவுல் மரணம்: சோனியா காந்தி இரங்கல் Posted: 14 Jun 2015 09:09 PM PDT முன்னாள் மத்திய மந்திரி ஷீலா கவுல் (வயது 101). நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மைத்துனி. 5 முறை எம்.பி. பதவி வகித்திருக்கிறார். நரசிம்மராவ் பிரதமர் பதவி வகித்தபோது, அவரது மந்திரிசபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தார். இமாசல பிரதேச மாநில கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். |
| டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு Posted: 14 Jun 2015 09:09 PM PDT டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு மாநில லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக எம்.கே.மீனா |
| Posted: 14 Jun 2015 09:06 PM PDT அடுத்த சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிப்பதை தவிர்க்கும் வகையில், புதிய முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர் Posted: 14 Jun 2015 08:55 PM PDT கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பைசன்வாலி பகுதியில் குருநாதன் என்பவருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள ஏலக்காய் செடிகளை காட்டுப்பன்றிகள் அடிக்கடி சேதப்படுத்தி சென்றன. இதனால் கவலையடைந்த குருநாதன் காட்டுப்பன்றிகள் |
| மோடியின் ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது: மாயாவதி பேச்சு Posted: 14 Jun 2015 08:05 PM PDT உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி லக்னோ நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| ரூ.100 கோடி செலவில் 5 ஆயிரம் பஸ்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்: டெல்லி அரசு முடிவு Posted: 14 Jun 2015 07:53 PM PDT டெல்லியில் ஓடும் பஸ்களில் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக முதல்கட்டமாக 5 ஆயிரம் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. |
| லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல் Posted: 14 Jun 2015 07:49 PM PDT ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் |
| செம்மரங்களை பாதுகாக்க விரிவான கொள்கை தேவை: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல் Posted: 14 Jun 2015 07:25 PM PDT ஆந்திராவின் சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல், பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஆங்காங்கே சில பகுதிகளிலும் செம்மரங்கள் அதிகம் காணப்படுகிறது. விலை மதிப்பு மிகுந்த இந்த செம்மரங்களை வெட்டிக் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. |
| லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய அரசு ஆதரவு Posted: 14 Jun 2015 07:25 PM PDT ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள 'இந்திய பிரிமியர் லீக்'கின் முன்னாள் தலைவர் லலித் மோடி, புற்றுநோய் தாக்கியுள்ள தன் மனைவியை பார்க்க போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்வதற்கு பயண ஆவணங்கள் பெற உதவுமாறு, இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ்க்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா |
| நாடு முழுவதும் ஒரே கட்டணம்: பி.எஸ்.என்.எல் இலவச ரோமிங் இன்று முதல் அமலுக்கு வருகிறது Posted: 14 Jun 2015 05:11 PM PDT பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான நாடு முழுவதும் இலவச ரோமிங் சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்து |
| ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்படும்: மனோகர் பாரிக்கர் உறுதி Posted: 14 Jun 2015 04:51 PM PDT முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. |
| பூமியைப் போன்று சந்திரனிலும் நிலநடுக்கம் Posted: 14 Jun 2015 04:14 PM PDT நாம் வாழுகிற பூமியின் மேற்பரப்பில் 'டெக்டானிக் பிளேட்' என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன. அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது. பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் |
| நாடு முழுவதும் 5 ஆயிரம் பிடிஎஸ் டவர்களை அமைக்கும் பி.எஸ்.என்.எல் Posted: 14 Jun 2015 03:25 PM PDT பொது தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக பி.டி.எஸ்(Base Transceiver Station) தொழில்நுட்பத்தில் இயங்கும் 5 ஆயிரம் செல்போன் டவர்களை நாடு முழுவதும் அமைக்க இருப்பதாக மத்திய |
| காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 4 புதிய அணைகள்: கர்நாடக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் Posted: 14 Jun 2015 02:32 PM PDT காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி அதன்மூலம் பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கவும், தண்ணீரை தேக்கி மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. |
| 2 நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று சத்தீஷ்கார் செல்கிறார் Posted: 14 Jun 2015 01:41 PM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். |
| மழைநீரால் சூழப்பட்ட ஷீரடி சாய்பாபா கோவில்: பக்தர்கள் கடும் அவதி Posted: 14 Jun 2015 11:42 AM PDT மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது அங்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று மதியம் ஷீரடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |