Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழைமரம்!

Posted: 05 Jun 2015 03:06 PM PDT

- கறுத்த திராட்சை ரசம் தெளிந்த தண்ணீரானது குழந்தைகளின் பார்வையில்! – ——————— – தாய் தன்னை அழித்து தனையனைத் தழைக்கச் செய்வாள் வாழைமரம்! – ———————— – இன்றைய இளைஞர்கள் முனைவனும் அல்லன் முட்டாளும் அல்லன் உமையொரு பாகான் – ———————— – மொட்டு விட்டது கருகிப் போனது கைக்கிளை! – ———————– – இதம் தந்து கிறங்குகிறாள் மேனி செருப்பு! – ———————– – கவிஞர் விகுரா இளஞாயிறே எழுந்து வா – ஹைகூதொகுப்பிலிருந்து –

தெரிந்து கொள்வோம்...

Posted: 05 Jun 2015 02:43 PM PDT

தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ...

நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...

Posted: 05 Jun 2015 02:35 PM PDT



நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...



முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன்
நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள்.

10,000 பதிவுகளைக் கடந்துள்ள சரவணனுக்கு வாழ்த்துகள்!

Posted: 05 Jun 2015 02:18 PM PDT



நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையை தனது பதிவுகளால் அலங்கரித்து பத்தாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள சரவணனுக்கு வாழ்த்துகள்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Posted: 05 Jun 2015 12:32 PM PDT

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட ...

இந்த வீடியோ கிடைக்குமா நண்பர்களே ?

Posted: 05 Jun 2015 12:30 PM PDT

Solomon Papaiya Pattimandram - 75 Years Of Tamil Cinema Saadhanai Vs Sodhanai (சாலமன் பாப்பையா பட்டிமன்றம் - 75 வருட தமிழ் சினிமா சோதனையா சாதனையா).....இந்த வீடியோ கிடைக்குமா நண்பர்களே ?.....இதில் ஸ்ரீ பிரியா, குஷ்பு , சத்தியராஜ், ராஜா, பாரதி , பாரதி ராஜா அனைவரும் பேசி உள்ளார்கள் புன்னகை

வரலாற்றில் இன்று - ஜூன்

Posted: 05 Jun 2015 12:05 PM PDT





நண்பர்களின் பார்வைக்கு..

Posted: 05 Jun 2015 11:24 AM PDT

அய்யா வைகுண்டர் அவதார தின விழா (03-03-2015),
பொன்னம்பலத்து பதி,
பருத்திவிளை,
கன்னியாகுமரி மாவட்டம்.


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Posted: 05 Jun 2015 10:13 AM PDT

Code:இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்: ...................................................... வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி      போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை       நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்    பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் ...

கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !

Posted: 05 Jun 2015 09:54 AM PDT

சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு ...

ஞாபக மறதி

Posted: 05 Jun 2015 07:22 AM PDT

நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.

கூழாங்கற்கள்...!!

Posted: 05 Jun 2015 06:15 AM PDT

பரபரப்பு….!! * உக்கிரமான கோடை வெயில் உற்சாகமான மக்களை அலுக்க வைக்கின்றன. நடப்பவர்கள் புழுங்குகிறார்கள் நடைபாதை வியாபாரிகள் பழகிவிட்டார்கள் முகங்களில் முகமுடியணிந்து பறக்கிறார்கள் இருசக்கர வாகனங்களில் குளிர்சாதனம் பொருத்தி கார்களில் இருப்பவர்கள் வெயில் பற்றிய கவலையில்லை நிழல்தேடி சோர்வில் ஒதுங்க நினைப்பவர்கள் இருப்பிடமின்றி தவித்து அலைகிறார்கள். தேனீர் கடைகளில் சுமாரானக் கூட்டம் குளிர்பானக் கடைகளில கூட்டமோ கூட்டம் கையில் பொருட்கள் வாங்கிய கடையின் விளம்பரப் பைகள். நகரங்களில் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 05 Jun 2015 05:31 AM PDT



ஒரு கதை இரண்டு முடிவுகள் :) ..by Krishnaamma :)

Posted: 05 Jun 2015 05:31 AM PDT

ஒரு கதை இரண்டு முடிவுகள்   ஒரு கல்யாண மண்டபத்தில் மாலையில் இரண்டு சம்பந்திகளும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.விஷயம் என்ன, ரொம்ப சரி நீங்க நினைத்தது போல வரதக்ஷணை தான். பெண்ணை பெற்றவர் பாவம் தழைந்த குரலில் சமாதனம் செய்து கொண்டு இருக்கிறார். பிள்ளை யை பெற்றவர் ஓங்கி பேசுகிறார்............. கல்யாணப் பெண்ணும் பையனும் ஒன்றும் பேசத்தோன்றாமல் திகைத்து  நிக்கிறார்கள்.இனி அவர்களின் சம்பாஷனை : சம்பந்தி , என்று பெண்ணின் அப்பா .... சேகரன் துவங்குவதற்குள் , " யோவ் என்னய்யா சம்பந்தி, தாலி ...

கண்கள் இரண்டால்....

Posted: 05 Jun 2015 03:27 AM PDT

கண்கள் இரண்டால்.... அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை... புதைந்தேன்!.. மான் விழி அல்ல, கயல் விழி அல்ல அது வாள் விழி - வீசினாள் வீழ்ந்தேன்.. புருவம் எனும் வில்கொண்டு விழியம்பு எய்தினாள் சாய்ந்தேன்.. படபடக்கும் இமை இரண்டும் வண்ணத்து பூச்சிகளாய்... சரிந்தேன்... வேல் வீசும் விழியவள்.. கட்டிலங்காளை நான்... கட்டுண்டேன் அவளிடம்.... யார் கண்டெடுத்தனரோ? இந்த 'மஸ்காரா' , 'காஜல்' , 'ஐ லைனர்'" போன்ற பொருட்களை.....

கண் திருஷ்டி ...!

Posted: 05 Jun 2015 02:55 AM PDT

கற்பூரம் ஏற்றி
கை தொழுத
காதலை
தூக்கி எறிந்துவிட்டாள்
கண் திருஷ்டி சுடராக ...!

சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….

Posted: 05 Jun 2015 01:37 AM PDT

மிருதுவானவள் நீ நொறுங்கி வீழ்ந்திடுமோ என நெஞ்சைப் பதறவைக்கும் மென்மை வீசும் காற்றும் அலையாய் மோதும் நீரும் உலைக்காது உன்னுடலை உள்ளார்ந்தது உன் உள்வலு எள்ளவும் சிதையாது இடுக்கண்ணில் வழுவி மிதந்து நிற்கிறாய் - - கண்ணே தாமரை மலர் நீ பட்டும் படாமல் நீரில் மிதக்கும் கலை தெரிந்தவள் உள்ளத்தைத் தொட்டவன் நானா இல்லையா சொல்லாமல் நழுவுகிறாய் கை பிடிக்க ஏங்குது உள்ளம் - எம்.கே.முருகானந்தன்

வாழ்க்கை

Posted: 05 Jun 2015 01:18 AM PDT

- வாழ்க்கை என்பது போராட்டம் – அதில் வாழ்ந்து காட்டினால் தேரோட்டம் – ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்வே ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை! – துன்பங்கள் வருவதும் வாழ்க்கை துயரங்கள் சூழ்வதும் வாழ்க்கை துன்பங்களும் துயரங்களும் வாழ்வில் துணை சேர்ந்தே வாழ்கின்றோம் – வாழ்வோ சுகதுக்கம் நிறைந்தது வாழ்க்கை என்பதோ வனம் போன்றது வனத்தைச் சோலையாக்கலாம் வனத்தைப் பாலையாக்குவதா? – வேதனை வழிந்தோடும் வாழ்க்கை சோதனை நிலவிடும் வாழ்க்கை சந்திக்கத் துணிந்தவன் சுகவாசி சந்திக்க துணியாதவன் சந்நியாசி – ——————————- கவிஞர் ...

மலர் வகை

Posted: 05 Jun 2015 12:51 AM PDT

- புற்களிலும் மலர் பூப்பதுண்டு – பூண்டுகளில் சில மலர்வதுண்டு – செடிகளிலும் மலர் சிரிப்பதுண்டு – கொடிகளில் பூக்கள் குலுங்குது பார் – தாமரை அல்லி தண்டினில் பூக்கும் – பூவிரிக்கும் புதர் பொலிந்திடுதே – நிலத்தில் மலரும் சில மலர்கள் – குளத்தில், நீரில் சில மலரும் – மணம் தரும் மலரே உயர் வாழும்! – மணமில்லா மலர் வீண் மலராகும்! – ——————- கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் நல்ல நல்ல பாட்டு – நூலிலிருந்து –

யாரைத் தான் நம்புவதோ...?

Posted: 05 Jun 2015 12:47 AM PDT

யாரைத் தான் நம்புவதோ...?: தகவலில் தவறு செய்யும் பெரிய நிறுவனங்கள்! புதுடில்லி : உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடுதல் உலவியும், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பிபிசி.,யும் முக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளன. இருப்பினும் இந்நிறுவனங்களின் தவறு, அவற்றின் மீதான நம்பகத் தன்மையை சற்றே அசைத்து பார்த்துள்ளது. கூகுளை நம்பலாமா? : எதைப் பற்றிய தகவலை கேட்டாலும் உடனடியாக முழு விபரங்களையும் ...

கண்ணன் பாடல் – அருள் புரிவாய் கண்ணா!

Posted: 05 Jun 2015 12:45 AM PDT

கவியரசர் கண்ணதாசன், பாரதியாரைப் போலவே, கண்ணன் என் காதலன் எனும் அளவுக்கு கிருஷ்ணர் மேல் பக்தியும் அன்பும் கொண்டவர். அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணனின் செயலாகவே எண்ணினார். அந்த அற்புதமான நினைவினை ஒரு கவிதையாகவும் இயற்றினார். அதிகப் பேருக்குத் தெரியாத அந்த கவிதை இதோ உங்களுக்காக… உயர்வான இந்தப் பாடலை பாடிப்பாருங்கள்… அந்த பாண்டவ தூதன் உங்கள் பக்கத்திலேயே நண்பனாக நிற்பதுபோல் உணர்வீர்கள்! – - * சத்தியப் பேற்றினில் தழைத்தமெய் யடியவர் தம்மடி வணங்கும் என் கைகள்; நித்தியத் ...

குட்டி குட்டி கண்ணனாம்

Posted: 04 Jun 2015 11:28 PM PDT

- குட்டி குட்டி கண்ணனாம் குறும்பு செய்யும் கண்ணனாம் கண்ணடிக்கும் கண்ணனாம் கண் கவரும் கண்ணனாம் – முத்துப் பல் கண்ணனாம் முத்தம் தரும் கண்ணனாம் குழலூதும் கண்ணனாம் குஷியாக்கும் கண்ணனாம் – மயிலிறகுக் கண்ணனாம் மனம் மயக்கும் கண்ணனாம் கொஞ்சிப் பேசும் கண்ணனாம் கொட்டம் செய்யும் கண்ணனாம் – வெண்ணை தின்னும் கண்ணனாம் வெள்ளை உள்ளக் கண்ணனாம் வீரமுள்ள கண்ணனாம் வெற்றி பெரும் கண்ணனாம் – ஞானமுள்ள கண்ணனாம் நன்மை செய்யும் கண்ணனாம் மாடு மேய்த்த கண்ணனாம் மாசு போக்கும் கண்ணனாம் – பாட்டுப் ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 04 Jun 2015 06:17 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 04 Jun 2015 06:15 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™