மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மனைவியை கொடுமைபடுத்திய சோம்நாத் பார்தி மீது புகார்: கெஜ்ரிவாலுக்கு மகளிர் ஆணையம் கேள்வி
- 100–க்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல்காரர்கள் துபாய்–ஹாங்காங் ஓட்டம்: 1300 டன் செம்மர கட்டைகள் பதுக்கல்
- ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மானம் போய்விட்டது: ரோஜா தாக்கு
- தெலுங்குதேச எம்.எல்.ஏ. வுக்கு 12 மணி நேர ஜாமீன்: மகள் நிச்சயதார்த்த விழாவில் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு
- வறட்சியை தவிர்க்க மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழை
- கோழிக்கோடு விமான நிலையத்தை வீரர்கள் சூறையாடிய காட்சி: காட்டி கொடுத்த கண்காணிப்பு கேமிரா - 10 பேர் சிக்கினர்
- ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்: பிரதமர் மோடியுடன் ஆந்திர கவர்னர் சந்திப்பு
- டெல்லியில் கைது செய்யப்பட்ட முன்னாள் சட்டமந்திரி தோமரை கட்சியிலிருந்து நீக்குகிறது ஆம் ஆத்மி?
- இந்தியாவை கண்டு மிரண்டு போய் இருக்கிறார்கள்: பாகிஸ்தான் குறித்து ராணுவ மந்திரி கருத்து
- மருந்து பெயரை பெரிய எழுத்தில்தான் டாக்டர்கள் எழுத வேண்டும்: மத்திய அரசின் புதிய விதிமுறை விரைவில் அமல்
- பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் மாஞ்சி கூட்டணி: அமித் ஷாவை சந்தித்த பிறகு அறிவித்தார்
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந் தேதி திறப்பு
- தீவிரவாதிகள் ஊடுருவல்: வடகிழக்கு மாநிலங்களில் உஷார் நிலை - ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன்: மத்திய மந்திரி பஸ்வான் தகவல்
- கர்ப்பமாக இருந்த என் மீது நாய்களை ஏவிவிட்டார் - ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி மீது மனைவி திடுக்கிடும் புகார்
- மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு
- கேரள விமான நிலைய மோதல்: உயர்மட்ட விசாரணை நடத்த காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
- தெலுங்கானாவில் உற்பத்தி மையத்தை தொடங்கும் செல்கான், மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனங்கள்
- பஞ்சாப் மற்றும் மத்திய அரசு விவசாயிகளின் அவலநிலையை புறந்தள்ளக்கூடாது: ராகுல்
- கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை: சுஷ்மா சுவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
| மனைவியை கொடுமைபடுத்திய சோம்நாத் பார்தி மீது புகார்: கெஜ்ரிவாலுக்கு மகளிர் ஆணையம் கேள்வி Posted: 11 Jun 2015 10:57 PM PDT ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாள் ஆட்சியில் சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் சோம்நாத் பார்தி. அந்த கட்சியுடன் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வக்கீலுமான அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். மாளவிய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் சட்ட மந்திரியான சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிசா டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார். |
| Posted: 11 Jun 2015 10:54 PM PDT ஆந்திராவில் செம்மர கடத்தல் கும்பலை பிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் டெல்லியில் சீனாவை சேர்ந்த கடத்தல்காரன் பியான் என்பவன் பிடிபட்டான். அவரை சித்தூர் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். |
| ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மானம் போய்விட்டது: ரோஜா தாக்கு Posted: 11 Jun 2015 10:50 PM PDT ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ.வுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவால் ஆந்திராவின் மானம் போய் விட்டது. இந்த விவகாரத்தில் அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். சந்திரபாபு நாயுடுவின் செயலால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் |
| Posted: 11 Jun 2015 10:47 PM PDT தெலுங்கானா எம்.எல்.சி. தேர்தலில் நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெலுங்குதேச எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி கடந்த 31–ந் தேதி கைது செய்யப்பட்டார். தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு அவரை போலீஸ் காவலில் எடுத்து 4 நாட்கள் விசாரித்தது. இது தொடர்பாக அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் தெலுங்கானா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். |
| வறட்சியை தவிர்க்க மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழை Posted: 11 Jun 2015 10:36 PM PDT மராட்டிய மாநிலத்தில் வறட்சியாக உள்ள பகுதிகளில், செயற்கை முறையில் மழை பெய்ய வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வறட்சியான பகுதிகளில் மேக விதைப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழை பெய்யச் செய்யும் நவீன முறை வந்துள்ளது. இந்த தொழில் நுட்பத்தின்படி செயற்கை மழை உருவாக்க சர்க்கரையை எரி பொருளாகக் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. |
| Posted: 11 Jun 2015 10:31 PM PDT கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், விமான நிலைய ஆணைய தீயணைப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. தீயணைப்பு பிரிவு அதிகாரி சன்னிதாமஸ் என்பவரை விமான |
| ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்: பிரதமர் மோடியுடன் ஆந்திர கவர்னர் சந்திப்பு Posted: 11 Jun 2015 10:04 PM PDT தெலுங்கானா மேல்–சபை தேர்தலில் அம்மாநில நியமன எம்.எல்.ஏ.க்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ. லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு– தெலுங்கானா நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சன் பேசியதாக தொலைபேசி உரையாடல் டேப்பும் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து |
| டெல்லியில் கைது செய்யப்பட்ட முன்னாள் சட்டமந்திரி தோமரை கட்சியிலிருந்து நீக்குகிறது ஆம் ஆத்மி? Posted: 11 Jun 2015 09:19 PM PDT சட்டப்படிப்பு படிக்காமலே, சட்டம் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்றதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் சட்ட மந்திரி ஜிதேந்தர் சிங் தோமரை, கட்சியிலிருந்து நீக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. |
| இந்தியாவை கண்டு மிரண்டு போய் இருக்கிறார்கள்: பாகிஸ்தான் குறித்து ராணுவ மந்திரி கருத்து Posted: 11 Jun 2015 08:25 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4-ந்தேதி பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த தீவிரவாதிகள் மியான்மர் எல்லைக்குள் தப்பி ஓடிவிட்டனர். மணிப்பூரில் இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு மியான்மருக்கு தப்பியோடும் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவம் திட்டமிட்டது. |
| Posted: 11 Jun 2015 08:09 PM PDT டாக்டர்கள், மருந்து சீட்டுகளில் எழுதும் மருந்துகளின் பெயர்களை எளிதில் படிக்க முடியாது என்று பரவலான கருத்து உள்ளது. மருந்து கடைக்காரர்கள், அதை படித்து புரிந்து கொண்டு, சரியான மருந்துகளை எடுத்துக் கொடுத்தால் பிரச்சினை இல்லை. |
| பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் மாஞ்சி கூட்டணி: அமித் ஷாவை சந்தித்த பிறகு அறிவித்தார் Posted: 11 Jun 2015 07:59 PM PDT பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, நேற்று டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இருவரும் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர். பிறகு |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந் தேதி திறப்பு Posted: 11 Jun 2015 07:25 PM PDT புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் மேற்கூறிய நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். |
| Posted: 11 Jun 2015 07:19 PM PDT மணிப்பூர் மாநிலம் சாண்டெல் மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 18 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் மியான்மர் எல்லைக்குள் தப்பியோடிய இந்த தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடியது. |
| விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன்: மத்திய மந்திரி பஸ்வான் தகவல் Posted: 11 Jun 2015 07:15 PM PDT மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு |
| Posted: 11 Jun 2015 02:25 PM PDT கர்ப்பமாக இருந்த என் மீது நாய்களை ஏவிவிட்டார் என்று ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி திடிக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாள் ஆட்சியின்போது சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் சோம்நாத் பார்தி. வக்கீலான இவர், |
| மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு Posted: 11 Jun 2015 09:35 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான மதரஸாக்கள் இயங்கி வருகின்றனர். இங்கு மதம் சம்பந்தப்பட்ட பாடங்களுடன் கட்டாயமாக நான்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மைத் துறை மந்திரி ஏக்நாத் காட்சே கூறும்போது, ''எல்லாத் துறைகளிலும் சிறுபான்மையின் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவ, அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட பாடங்களை சொல்லிக்கொடுக்கும் அதேசமயம், பிற பாடங்களின் அறிவையும் புகட்டவேண்டும். |
| கேரள விமான நிலைய மோதல்: உயர்மட்ட விசாரணை நடத்த காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல் Posted: 11 Jun 2015 09:01 AM PDT கோழிக்கோடு காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட மத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்களவையின் காங்கிரஸ் கொறடா கே.சி. வேணுகோபால் வலியுறுத்தி உள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோட்டிலுள்ள விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கும் (சிஐஎஸ்எஃப்), இந்திய விமான |
| தெலுங்கானாவில் உற்பத்தி மையத்தை தொடங்கும் செல்கான், மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனங்கள் Posted: 11 Jun 2015 08:19 AM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தது. அம்மாநில முன்னேற்றத்திற்கு முதல் மந்திரியான சந்திரசேகர ராவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முன்னணி நிறுவனங்கள் தெலுங்கானாவில் உற்பத்தியை தொடங்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். |
| பஞ்சாப் மற்றும் மத்திய அரசு விவசாயிகளின் அவலநிலையை புறந்தள்ளக்கூடாது: ராகுல் Posted: 11 Jun 2015 06:55 AM PDT மோடி தலைமையிலான மத்திய அரசும், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் விவசாயிகளின் அவல நிலையை புறந்தள்ளக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ''நம் நாட்டில் உள்ள விவசாயிகள் பெரும் துன்பத்தில் உள்ளனர். இதற்கு மோடி மற்றும் பஞ்சாப் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து |
| கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை: சுஷ்மா சுவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Posted: 11 Jun 2015 06:49 AM PDT இந்தியாவில் இருந்து சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான பயணம் இன்று தொடங்கியது. இதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |