Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஸ்டெம் செல் தானம்: குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பறந்து வந்து ஏழு வயது சிறுமியை காப்பாற்றிய நல்ல உள்ளம்

Posted: 06 Jun 2015 11:02 PM PDT

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசிக்கும் 7 வயது சிறுமி பிரியா ஷா, தலஸ்சேமியா நோயால் பாதிப்புக்குள்ளானர். இதனால் உயிருக்கு போராடிய அவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: இலவச தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆகிறது

Posted: 06 Jun 2015 10:44 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்துக்கு 11 மணிநேரம் ஆனது. கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கிறது.

சேவை செய்ய வயது ஒரு தடை இல்லை: கர்நாடக உள்ளாட்சி தேர்தல் 102–வயது கவுதம்மா பஞ். உறுப்பினராக தேர்வு

Posted: 06 Jun 2015 10:21 PM PDT

கர்நாடக மாநிலத்தில் 2 கட்டங்களாக நடை பெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி கவுதம்மா வெற்றி பெற்றுள்ளார்.

சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி

Posted: 06 Jun 2015 10:01 PM PDT

பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதைகளாகி வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தன் சக பள்ளி மாணவர்கள் 2 பேரால் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் மேகி நூடுல்சின் தொழிற்சாலையை மூட உத்தரவு: மேலும் 6 மாநிலங்களில் நூடுல்சுக்கு தடை

Posted: 06 Jun 2015 09:36 PM PDT

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் 'மேகி நூடுல்ஸ்' உணவு பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக காரீயம், மோனோ சோடியம் குளுட்டோமேட் என்ற ரசாயனம் கலந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் மேகி நூடுல்ஸ்சின் பாதுகாப்பு தன்மை

கேரளாவில் குண்டு வெடித்து 2 பேர் பலி

Posted: 06 Jun 2015 07:12 PM PDT

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இடையே அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. இந்த நிலையில் கேலாவல்லூர் என்ற பகுதி அருகே சிலர் சட்ட விரோதமாக வெடி குண்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டபோது திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே

பிரதமர் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் யோகா செய்யும்படி கூறுகிறார்: ராகுல் காந்தி தாக்கு

Posted: 06 Jun 2015 07:04 PM PDT

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- ஒரு வருடத்துக்கு முன்னர் டெல்லியில் புதிய அரசு வந்தது. அந்த அரசும் மம்தா பானர்ஜியை போலவே ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது.

மேகி நூடுல்சை தொடர்ந்து அனைத்து வகை நூடுல்சுகளுக்கும் தடையா?: பரிசோதனைக்கு உட்படுத்த அதிரடி முடிவு

Posted: 06 Jun 2015 05:11 PM PDT

மேகி நூடுல்சை தொடர்ந்து அனைத்து வகை நூடுல்சுகளுக்கும் தடை விதிக்கப்படலாம். அனைத்து வகைகளையும் சோதனைக்கு உட்படுத்த இந்திய உணவு, பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் வகைகளில் உடலுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளுட்டோமேட் ரசாயனமும் மிக அதிகளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட

ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகருக்கான பூமி பூஜை: சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்

Posted: 06 Jun 2015 02:55 PM PDT

ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக உள்ளது. இந்த நிலையில் ஆந்திர பிரதேசத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கப்பட உள்ளது. விஜயவாடா-குண்டூர் பகுதிகளுக்கு இடையே உருவாக்கப்படவுள்ள புதிய நகருக்கு 'அமராவதி' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை குண்டூர் கிருஷ்ணா நதிக்கரையோரம் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி

மேகி நூடுல்சுக்கு ராஜஸ்தானிலும் தடை

Posted: 06 Jun 2015 02:15 PM PDT

மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளுட்டோமேட் ரசாயனமும் அதிகளவு உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து ராஜஸ்தானிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு 'மோனோ சோடியம் குளுட்டோமேட்' என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக அளவு காரீயம் உப்பு கலந்து

ஒரு நாள் டெல்லி காற்றை சுவாசிப்பது 10 சிகரெட் புகைப்பதற்கு சமம்

Posted: 06 Jun 2015 12:28 PM PDT

ஒரு நாள் டெல்லி காற்றை சுவாசிப்பது என்பது 10 சிகரெட் புகைப்பதற்கு சமம் என அதிர்ச்சி தரக்கூடிய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் காற்று மாசு அமைப்பு 91 நாடுகளில் கிட்டத்தட்ட 1600 நகரங்களின் வெளிப்புற காற்று மாசு கண்காணிப்பு முடிவுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலேயே அதிக அளவு காற்று மாசுபாடு அடைந்த நகரமாக டெல்லி

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி

Posted: 06 Jun 2015 09:47 AM PDT

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மும்பை புறநகர்ப்பகுதியான போவாய், சாந்திவாலியில் இருக்கும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி இன்று இரவு நிலவரப்படி 7 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

லஞ்சப் புகாரில் 8 டெல்லி போலீசார் டிஸ்மிஸ்- 69 போலீசார் சஸ்பெண்ட்

Posted: 06 Jun 2015 09:10 AM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளின் மீதான லஞ்சப்புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த தனிப்பிரிவில் ஒரு

மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இரு ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்: அகிலேஷ் யாதவ்

Posted: 06 Jun 2015 09:00 AM PDT

மணிப்பூரில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 18 ராணுவ வீரர்களில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இரு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்க உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

விமான கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 60 லட்சம் தங்கம்

Posted: 06 Jun 2015 08:39 AM PDT

வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து பெண்ணுக்கு தண்டனை வழங்கிய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

Posted: 06 Jun 2015 07:49 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை அளித்த 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீரட் நகரின் கன்கார்கேரா பகுதியில் வங்கி கேஷியர் ஒருவருக்கும், ஜாசு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குமிடையே நேற்று வாக்குவாதம்

வங்காள தேசத்துக்கு 200 கோடி டாலர் கடன் உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

Posted: 06 Jun 2015 07:49 AM PDT

வங்காள தேசத்துக்கு புதிதாக 200 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இன்று வங்காளதேசம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவுடன்

ராகுல் சுற்றுப்பயணத்தின்போது திரிணாமுல் காங்கிரசில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Posted: 06 Jun 2015 06:12 AM PDT

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. அபு நாசர் கான் சவுத்ரி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். மம்தா பானர்ஜி இல்லாமல் மேற்கு வங்காளத்தின் வளர்ச்சி என்பது சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான மறைந்த கானி கான் சவுத்ரியின் சகோதரர்

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் மம்தா- மேற்கு வங்காள கவர்னருக்கிடையில் மோதல்

Posted: 06 Jun 2015 06:06 AM PDT

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக அளவு காரீயம் உப்பு கலந்து

வங்காளதேச பிரதமருக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் பொறிக்கப்பட்ட திரைச்சீலையை பரிசளித்த மோடி

Posted: 06 Jun 2015 05:32 AM PDT

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசத்துக்கு இன்று காலை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அரசு மரபுகளை மீறிய வகையில் டாக்கா விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™