Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சட்டம் பயின்றதாக போலி சான்றிதழ்: டெல்லி சட்ட மந்திரி ஜிதேந்தர் சிங் டோமர் கைது

Posted: 08 Jun 2015 11:04 PM PDT

சட்டப்படிப்பு படிக்காமலே, சட்டம் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்றதாக வந்துள்ள புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், டெல்லி சட்ட மந்திரியுமான ஜிதேந்தர் சிங் டோமர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு ராஜினாமா கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்

Posted: 08 Jun 2015 10:23 PM PDT

ஆந்திராவில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலின்போது நியமன எம்.எல்.ஏ. எல்வின்ஸ் ஸ்டீபன்சனை தங்கள் பக்கம் இழுக்க தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. ரேவந்த்ரெட்டி முயற்சி செய்தார். இதற்காக ரூ.5 கோடி பேரம்பேசி முதல் தவணையாக ரூ.50 லட்சம் கொடுக்க முயன்றபோது ரேவந்த் ரெட்டியும், அவரது 2 உதவியாளர்களும் கைது

அருவிக்கரை இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு வேட்பாளர் விஜயகுமார் மனுதாக்கல்

Posted: 08 Jun 2015 10:15 PM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதியில் வருகிற 27–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கேரள சபாநாயகராக இருந்த கார்த்திகேயன் மரணம் அடைந்ததால் நடைபெறும் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார்.

இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி: யோகா தின நிகழ்ச்சியிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கம்

Posted: 08 Jun 2015 09:32 PM PDT

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் 'சூரிய நமஸ்காரம்' செய்யப்படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் 'சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 08 Jun 2015 09:32 PM PDT

ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் உள்ளிட்ட மத்திய மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இங்கு நக்சலைட்டுகளை ஒடுக்க உள்ளூர் போலீஸ் படையுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

அரபிக்கடலில் உருவான அஷோபா புயல் தீவிரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை

Posted: 08 Jun 2015 09:14 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள் தாமதமாக கடந்த 5–ந்தேதி தொடங்கியது. தென் கேரளாவில் பெய்து வந்த மழை தற்போது மாநிலத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்கு பகுதியிலும் பரவி உள்ளது. மழை தீவிரமடைந்த நிலையில் நேற்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதற்கு 'அஷோபா' என பெயரிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை கொண்டுவர வெளியுறவுத்துறை நடவடிக்கை

Posted: 08 Jun 2015 08:07 PM PDT

சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. மீனவரின் உறவினர்கள் உரிய ஆவணங்களை அளித்தால் 7 நாட்களுக்குள் உடலை கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகி நூடுல்சை தொடர்ந்து மேலும் 6 நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் சோதனை

Posted: 08 Jun 2015 07:41 PM PDT

மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைச் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உத்தரபிரதேசம், பீகார் மாநில கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் சம்பவம்: உளவுத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி மறுப்பு

Posted: 08 Jun 2015 07:26 PM PDT

குஜராத்தில் இஷ்ரத் ஜகான் உள்பட 4 பேர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், 4 உளவுத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு தொலைபேசி உரையாடல் விவகாரம்: சந்திரசேகர்ராவ் மீது வழக்கு

Posted: 08 Jun 2015 07:25 PM PDT

ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர்ராவ் முதல்-மந்திரியாக உள்ளார். அந்த மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் தும்மல நாகேஸ்வரராவ் உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு தாவினார்கள். இதில் நாகேஸ்வரராவுக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கட்சி தாவிய 5 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆந்திர ஐகோர்ட்டில் தெலுங்குதேசம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி தெலுங்கானாவில் எம்.எல்.சி. தேர்தல் நடந்தது. நாகேஸ்வரராவை எம்.எல்.சி. ஆக்கிவிட்டால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனாலும் மந்திரியாக நீடிக்

சுப்பிரமணியசாமி மனு மீதான விசாரணை 22-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 08 Jun 2015 07:13 PM PDT

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, கடந்த மார்ச் 15-ந்தேதி அசாம் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவருக்கு எதிராக கரிம்கஞ்ச் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆஜராக அவருக்கு 19-ந்தேதி கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் சுப்பிரமணியசாமி கோர்ட்டில் ஆஜராகாததால், ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

Posted: 08 Jun 2015 07:07 PM PDT

தென் தமிழக மாவட்டங்களில் மாடு பிடி விளையாட்டாக காலம் காலமாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம் பெற்று இருப்பதாகவும் அவை மனிதர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் கூறி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு தென் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்த

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை: உமர் அப்துல்லா

Posted: 08 Jun 2015 05:15 PM PDT

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் "இந்த ஆட்சியில் மட்டும் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி

வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு குரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்:தேர்தல் அதிகாரி பேட்டி

Posted: 08 Jun 2015 04:57 PM PDT

வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு குரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல்

பசவனஹள்ளி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாரமாக சத்துணவு வழங்கவில்லை: கல்வி அதிகாரி ஆய்வு

Posted: 08 Jun 2015 04:01 PM PDT

பசவனஹள்ளி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக சத்துணவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி திடீரென அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளி பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து

கண்ணூர், செருகண்டி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு: போலீஸ் டி.ஐ.ஜி தகவல்

Posted: 08 Jun 2015 03:36 PM PDT

கேரள மாநிலம் கண்ணூர், செருகண்டி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என கேரள போலீஸ் டி.ஐ.ஜி. தினேந்திரகாஸ் தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர், செருகண்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் அதே

அரபிக்கடலில் கடும் சூறாவளி புயல்: கர்நாடகம், மராட்டியம், குஜராத் கடலோர மாவட்டங்களை தாக்க வாய்ப்பு

Posted: 08 Jun 2015 01:48 PM PDT

அரபிக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் சூறாவளி புயல் கர்நாடக மற்றும் குஜராத் கடலோர மாவட்டங்களை தாக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மோடியுடன் பிரேக் - அப்: பிரதமர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் காலி - ராம் ஜெத்மலானி

Posted: 08 Jun 2015 12:35 PM PDT

மோடியுடன் பிரேக் - அப் ஆகிவிட்டதாகவும் அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இப்போது இல்லை என ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். பிரபல வழக்கறிஞரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பா.ஜ. எம்.பியுமான ராம் ஜெத்மலானி, தலைமை

மோடி பங்கேற்கும் மாபெரும் சர்வதேச யோகாசன தின முகாமில் பங்கேற்க 152 நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு

Posted: 08 Jun 2015 09:32 AM PDT

சர்வதேச யோகா தினத்தையொட்டி, வரும் 21–ந்தேதி டெல்லி ராஜபாதையில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு இந்தியாவில் இருக்கும் 152 வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 10 கி.மீ. தூரம் நடந்து சென்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Posted: 08 Jun 2015 09:28 AM PDT

திருப்பதி திருமலையில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து இன்று தனது குடும்பத்தினருடன் 10 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்தே சென்றார். மலையடிவாரமான அலிபிரியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக 3 மணி நேரத்தில் அவர் மேல்திருப்பதிக்கு நடந்து வந்து சேர்ந்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™