Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


எம்.எல்.ஏ.வுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம்: சந்திரபாபு நாயுடுவுக்கு சம்மன் அனுப்ப முடிவு

Posted: 04 Jun 2015 10:38 PM PDT

தெலுங்கு தேசம் கட்சி துணை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. ஸ்டீலன்சனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.

மூணாறு அருகே பள்ளிக்கூடத்தில் புகுந்த சிறுத்தை புலி: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

Posted: 04 Jun 2015 10:38 PM PDT

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் 14 மாணவர்களே படித்து வருகிறார்கள். நேற்று பகல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி மைதானத்தில் பசுக்களின் அலறல் சத்தம் கேட்டது.

அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல்: போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜார்ஜ் கட்சி வேட்பாளர்

Posted: 04 Jun 2015 10:35 PM PDT

கேரள மாநில சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருவிக்கரை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27–ந்தேதி இங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார்.

செப்டம்பர் மாதம் ராகுல்காந்தி காங். தலைவர் ஆகிறார்: பெங்களூர் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்வு

Posted: 04 Jun 2015 10:20 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகுகிறார். துணைத்தலைவர் ராகுல்காந்தி கட்சியின் தலைவர் ஆகிறார் என்று நீண்ட நாட்களாக பேசப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ஆகும் தகுதி ராகுல்காந்திக்கு இருக்கிறது என்று அந்த

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுக்கு புதிய திட்ட இயக்குனர் பொறுப்பு ஏற்பு

Posted: 04 Jun 2015 07:54 PM PDT

இஸ்ரோ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஜி.அய்யப்பன். இவர் திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டத்தின், திட்ட இயக்குனராக

மணிப்பூரில் 20 வீரர்கள் பலி: ராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகுந்த வேதனை அளிக்கிறது - மோடி கவலை

Posted: 04 Jun 2015 07:12 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளார்.

எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ

Posted: 04 Jun 2015 05:19 PM PDT

தலைவர்களின் சிலைக்கு மாலை போடும் அரசியல் வாதிகள் கூட சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கல்யாண மேடையைச் சுற்றிலும் போட்டோகிராபர்கள் குவிந்திருக்க, முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இன்றி, மணப்பெண்ணுக்கு மாலை போடும் அந்த மாப்பிள்ளைக்கு என்னதான் பிரச்சனை என்று யூ-டியூப் வாசிகள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

மேகி நூடுல்ஸ் விவகாரம்: சினிமா பிரபலங்களுக்கு சிவசேனா ஆதரவு

Posted: 04 Jun 2015 04:29 PM PDT

மேகி நூடுல்சில் ரசாயன பொருள் கலக்கப்பட்டதால், அதன் விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு பீகார் மாநில கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது

நாடு முழுவதும் மேகி நூடுல்சை திரும்பப்பெற நெஸ்ட்லே முடிவு

Posted: 04 Jun 2015 02:29 PM PDT

மேகியின் இரண்டு நிமிட நூடுல்ஸ் பல மாநிலங்களில் கடும் சர்ச்சைக்க்குள்ளானதை அடுத்து நாடு முழுவதுமுள்ள மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளை திரும்பபெற நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அனுமதி தரவில்லை: மத்திய அரசு மறுப்பு

Posted: 04 Jun 2015 02:09 PM PDT

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மத்திய அரசு இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது.

சொத்து குவிப்பு வழக்கு செலவு தொகையை தமிழக அரசிடம் வசூலிப்போம்: கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி

Posted: 04 Jun 2015 01:43 PM PDT

சொத்துகுவிப்பு வழக்கை நடத்த கர்நாடக அரசு செலவிட்ட ரூ.5.11 கோடியை தமிழக அரசு செலுத்தும்படி கோருவோம் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி

புதிய இன்னோவா காரை சொந்தமாக்கிய அன்னா ஹசாரே

Posted: 04 Jun 2015 01:19 PM PDT

ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி, அன்னா ஹசாரே கடந்த எட்டு ஆண்டுகளாக, பயன்படுத்திய கார், அண்மையில் ஏலம் விடப்பட்டதையடுத்து, புதிதாக டொயாடோ இன்னோவா காரை அவர் வாங்கியுள்ளார். ஜன் லோக்பால் இயக்கம் மற்றும் மராட்டிய மாநில மந்திரிகளின் ஊழலை

தன் 6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய குடியரசுத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ள பரிதாபத்தந்தை

Posted: 04 Jun 2015 12:46 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் 'கெனாவன்' எனப்படும் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது 6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும்படி, அவர்களின் தந்தை குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மிஸ்டு கால் மூலமாக பா.ஜனதாவில் இணைந்த 30 லட்சம் முஸ்லிம்கள்: சிறுபான்மையினர் பிரிவு தலைவர் தகவல்

Posted: 04 Jun 2015 12:10 PM PDT

நரேந்திரமோடி பிரதமரான பின்னர், பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை கொடுத்து, அந்த எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுப்பதன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் நவீன முறையை பாரதீய ஜனதா அறிமுகப்படுத்தியது. இந்த நடைமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் அச்சுறுத்தல் பற்றி கவலை இல்லை -எதையும் சமாளிக்கும் திறனுடன் உள்ளோம்: பாகிஸ்தான்

Posted: 04 Jun 2015 10:13 AM PDT

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைபோர் கடுமையாக வலுத்து வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை என்றும், எந்த வித அச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறனுடன் பாகிஸ்தான் படைகள் உள்ளதாக நாட்டு ராணுவ ஜெனரல் ரகீல் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களை பற்றிதான் கவலைப்படுகிறோம், மாம்பழங்களை பற்றி அல்ல- நிதிஷ் குமார்

Posted: 04 Jun 2015 09:09 AM PDT

மாம்பழங்களை பறிப்பதை நிதிஷ் குமார் தடுக்கிறார் என்ற மான்ஜி குற்றசாட்டுக்கு பதில் அளித்துள்ள நிதிஷ் குமார் ''நாங்கள் மக்களை பற்றிதான் கவலைப்படுகிறோம், மாம்பழங்களை பற்றி அல்ல'' என தெரிவித்துள்ளார்.

மாம்பழங்களை பறிப்பதை நிதிஷ் குமார் தடுக்கிறார்: மான்ஜி குற்றச்சாட்டு

Posted: 04 Jun 2015 07:01 AM PDT

நிதிஷ் குமார் என் வீட்டு தோட்டத்தில் உள்ள மாம்பழங்களை பறிப்பதை தடுக்கும்நோக்கில் போலீஸ் காவல் போட்டுள்ளதாக முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மான்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற

டெல்லிக்கு போலீஸ் அதிகாரிகளை அனுப்பியதை நியாயப்படுத்தும் நிதிஷ்

Posted: 04 Jun 2015 06:27 AM PDT

டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற பிரச்சினையில் துணை நிலை கவர்னர் நஜீம் ஜங்- முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், டெல்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு போலீஸ்

மேற்கு வங்காளம் பிரகாசிப்பதை பார்க்க விரும்புகிறேன்: மாணவர்களிடையே மம்தா பானர்ஜி உரையாடல்

Posted: 04 Jun 2015 06:12 AM PDT

சமீபத்தில் நடைபெற்ற பள்ளி தேர்வு முடிவுகளில் அதிக அளவு மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்த மேற்கு வங்காள மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய மம்தா ''மேற்கு வங்காளம்

48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவை தாக்கும்: வானிலை மையம்

Posted: 04 Jun 2015 06:01 AM PDT

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், 4-ந்தேதி ஆகியும் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யுமா? என்ற சந்தேகம் நிலவியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™