Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தாம்பரத்தில் மூன்றாவது முனையம் இந்த ஆண்டிற்குள் செயல்படும்'

Posted:

சென்னை:''சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் வழித்தட ஆய்வு முடிந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரயில்வே வாரியம் முடிவு எடுக்கும்,'' என, ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (பணிகள்) லஜ்குமார் கூறினார்.கடந்த ஓராண்டில் ரயில்வே துறையில் மேற்கொண்டுள்ள திட்டங்கள் மற்றும் வசதிகளை பயணிகளிடம் கொண்டு செல்ல, துறை சார்பில் இரு வார நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதுதொடர்பாக, ரயில்வே வாரிய உறுப்பினர்கள், ரயில்வே மண்டலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (பணிகள்) லஜ்குமார் ஆய்வு ...

இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

Posted:

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.

மே, 27ம் தேதியுடன், 59 மையங்களில் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, 5:00 மணியுடன் அண்ணா பல்கலையிலும் விண்ணப்ப விற்பனை முடிந்தது. ...

செம்மர கடத்தலில் தமிழக போலீசாருக்கு தொடர்பு: 4 பேர் சிக்கினர்; டி.எஸ்.பி., தலைமறைவு

Posted:

செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் நடந்த, பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், 'செம்மரக்கட்டை கடத்தலில் தமிழக போலீசார் ஈடுபட்டு கோடிகளை குவித்தனர்' என்பதை அம்பலப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக, நான்கு போலீசார் சிக்கி உள்ளனர்; வேலூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, டி.எஸ்.பி., தங்கவேலு தலைமறைவாகி உள்ளார். வேலூர் மாவட்டம், மாதனூர் அடுத்த பாலூரைச் சேர்ந்தவர், சின்னப்பையன், 40; மாதனூர் ஒன்றிய முன்னாள் பா.ம.க., ஒன்றிய செயலர். இவர், பாலூரில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வந்தார். கடந்த, 27ம் தேதி, மாதனூர் - ஒடுக்கத்தூர் பிரதான சாலையில், மர்ம ...

ஏமாறும் நுகர்வோர் புகார்களை விசாரிக்க தனி ஆணையம்: சட்டத்தையும் திருத்த மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நுகர்வோர் புகார்களை விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம், தானாக முன்வந்து, முறைகேடான விற்பனையாளர்களின் மோசடி தனத்தை அம்பலப்படுத்தி, அத்தகையவர்களை சிறையில் தள்ளும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.நல்ல பொருளாக தான் இருக்கும் என, நம்பி வாங்கும் நுகர்வோர், சில சமயங்களில் ஏமாற்றப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஏமாற்றிய நிறுவனம் மீது வழக்கு தொடரவோ, இழப்பீடு கேட்கவோ முடியாத நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 ...

ஐ.ஐ.டி., மாணவர் அமைப்புக்கு தடை ஏன்?

Posted:

இந்தி மொழி பயன்பாடு, பிரதமர் மோடியின் உரை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாதி ரீதியாக செயல்பட்ட குற்றச்சாட்டில், அம்பேத்கர் - பெரியார் மாணவர் வட்டத்துக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் தர, சென்னை ஐ.ஐ.டி.,க்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.ஐ.ஐ.டி.,யில் செயல்படும், 'அம்பேத்கர் -பெரியார் மாணவர் வட்டம்' என்ற அமைப்பு, எந்த வகையிலும் செயல்படக் கூடாது; ஐ.ஐ.டி., வளாகத்தில் நிகழ்ச்சி எதுவும் நடத்தக் கூடாது என, ஐ.ஐ.டி., டீன் (மாணவர்கள் பிரிவு) சிவகுமார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால், ஐ.ஐ.டி.,யில் ...

ஜூன் 1 முதல் மீண்டும் ரயில் கட்டணம் உயர்வு

Posted:

புதுடில்லி: ரயில் பயணிகளின் தலையில் மீண்டும் கட்டண உயர்வை சுமத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சாதாரண பெட்டிகளுக்கான கட்டணத்திற்கு வசூலிக்கப்படும் சேவை வரி, ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. 'ஏசி' பெட்டிகளில் இந்த கட்டண உயர்வு, 30 முதல், 100 ரூபாய் வரை அதிகரிக்கிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல், சேவை வரியை உயர்த்த திட்டமிட்டு இருந்தாலும், இதுவரை, 'சர்வரில்' ...

மூன்று வாரத்தில் பதில் சொல்லுங்க கெஜ்ரிவால்!

Posted:

புதுடில்லி:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், டில்லி போலீஸ் அதிகாரி மீது, டில்லி லஞ்ச ஒழிப்பு துறை எடுத்த நடவடிக்கைக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை, நேற்று விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசின் பதிலை கேட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், டில்லி போலீஸ் அதிகாரி அனில்குமார் என்பவரை, லஞ்சம் வாங்கியதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, டில்லி (யூனியன் பிரதேச) லஞ்ச ஒழிப்பு துறையினர், சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.அதை எதிர்த்து, ...

எல்லை தாண்டும் உளவு புறாக்கள்

Posted:

பஞ்சாப்: எல்லை தாண்டி வரும் உளவாளிகளை பிடிப்பதற்காக, துப்பாக்கியுடன் பஞ்சாப் போலீசார், 24 மணி நேரமும் அலைகின்றனர். இவர்கள் மனித உளவாளிகள் அல்ல; அமைதியின் சின்னமான புறாதான். கடந்த வாரம், பதான்கோட் பகுதி யில், பாகிஸ்தானின் இந்தியன்முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவ முயலுவதாக, உளவு அமைப்பு எச்சரித்திருந்தது.பாக்., - ஜம்மு எல்லைப் பகுதியை விட, பதான்கோட் பகுதி மிகவும் அருகில் இருப்பதால், பயங்கரவாதிகள் எளிதாக ஊடுருவுகின்றனர். இந்நிலையில், மன்வால் கிராமத்தில், உளவு புறா பிடிபட்டது.எல்லை தாண்டி வரும் இந்த ...

ஆர்.கே.நகரில் ஜெ., போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

சென்னை:'சென்னையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) சட்டசபைத் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார்' என, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதால், மீண்டும் தமிழக முதல்வராக, ஜெய லலிதா பொறுப்பேற்றார்.அவர் எம்.எல்.ஏ.,வாக வேண்டும் என்பதற்காக, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், தன் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு, அடுத்த மாதம் 27ம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி மன்றக் குழு ...

டிராபிக் ராமசாமி பொது வேட்பாளர்: கருணாநிதி பதில் என்ன?

Posted:

ஆர்.கே.நகர் தொகுதியில், 'டிராபிக்' ராமசாமியை, பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து, தி.மு.க., தலைவர், மு.கருணாநிதி அளித்த பேட்டி: இதுகுறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை; கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மற்றும் பொதுச் செயலர் அன்பழகனுடன் விவாதித்த பின், முடிவெடுக்கப்படும். இந்த இடைத்தேர்தலுக்காக, பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், ஒருமித்த முடிவை எடுத்திருக்கின்றன; அதைப் போலவே, சட்டசபை பொதுத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான், எல்லோருடைய விருப்பம்; எங்கள் விருப்பமும் அதுதான்.நாங்கள் யாருக்கு ஆதரவு என்று ஏலம் விடுகின்ற நிலையில், இந்த ...

காஷ்மீரில் மீண்டும் பாக்., கொடி

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பிரிவினை கோரி ஜே.கே.டி.எப்., கட்சி நடத்திய பேரணியில், பாக்., தேசிய கொடி பறக்கவிடப்பட்டதால், அக்கட்சி தலைவர் சபீர் ஷா கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் அருகே, அனந்தநாக்கில் நடைபெற்ற பேரணியில், ஏராளமானோர் வாகனங்களில், பாக்., தேசிய கொடியை ஏந்தி, பிரிவினைவாத கோஷம் எழுப்பினர்.சிலர், தாமரை சின்னம் பொறித்த பா.ஜ., கொடியை, தீயிட்டு எரித்தனர். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, சபீர் ஷா மற்றும் அவருக்கு நெருக்கமான இருவரை, போலீசார் கைது செய்தனர்.காஷ்மீரில், கடந்த ஏப்., 15ம் தேதி, ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™