Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காஸ் மானியம் வேண்டாம் என்ற அரசின் திட்டத்துக்கு வரவேற்பு:தமிழகத்தில் 21,000 பேர் தாமாக முன்வந்து வழிகாட்டினர்

Posted:

தமிழகத்தில், 'சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, 21,300 பேர், தாமாக முன் வந்து, எண்ணெய் நிறுவனங்களிடம், விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மானியத்தை விட்டுக் கொடுக்க, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் மவுனம் காத்து வருகின்றனர். தமிழகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.52 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசு, கடந்த ஜன., மாதம், மாற்றி அமைக்கப்பட்ட காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது. ...

ஐ.ஐ.ஐ.டி., செயல்பாடு பிரியங்கா: ஸ்மிருத்தி மோதல்

Posted:

ரேபரேலி: ரேபரேலி அமேதி தொகுதியில் இந்திய தகவல் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் அமைக்க முன் வராததது ஏன் என காங்., தலைவர் சோனியா மகள் பிரியங்கா கேள்வி எழுப்பினார்.

உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தொகுதியில் இளைஞர்கள் பலர் உயர் கல்வி கற்க முடியாதது உட்பட ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தற்போதைய மத்திய அரசு ரேபரேலி தொகுதியில் ஐ.ஐ.ஐ.டி., அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள ஸ்மிருத்தி இரானி இளைஞர்களி்ன் ...

எதிர்பார்த்தது நடந்தது; இடைத்தேர்தலை தி.மு.க., கடந்தது

Posted:

சென்னை: அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தது போலவே, உப்புச்சப்பில்லாத ஒரு காரணத்தைக் கூறி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணித்துள்ளது.
தென் சென்னையைவிட, வட சென்னை என்றுமே அதிமுக அனுதாபிகளை அதிகமாக கொண்ட பகுதி. இங்கு அமைந்துள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது, முதல்வர் ஜெயலலிதா அதில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சென்ற தேர்தல் வரை போடி, ஆண்டிபட்டி என கிராமப்புற தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, சென்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் என்ற நடுத்தர தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதன் ...

தாக்கி பேசிய சில மணி நேரத்தில் மன்மோகன்-மோடி சந்திப்பின் பின்னணி என்ன?

Posted:

புதுடில்லி : நேற்று நடைபெற்ற வெவ்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசினர். ஆனால் மாலையில், பிரதமர் இல்லத்தில் இருவரும் சந்தித்து, கைகுலுக்கிக் கொண்டனர். இதன் பின்னணி என்ன? இந்த சந்திப்பின் போது அப்படி அவர்கள் என்ன தான் பேசிக் கொண்டனர்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

பொங்கி எழுந்த மன்மோகன் :
இந்திய மாணவர் யூனியன் விழாவில் பேசிய மன்மோகன் சிங், மோடி அரசில் ஜனநாயகம் மிரட்டப்படுகிறது. பொருளாதாரம் சரிந்து விட்டது. எங்களின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™