Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோட்டையில் ஜெ.,: பொறுப்பேற்ற முதல் நாளில் ஐந்து திட்டங்களை அறிவித்தார்

Posted:

தமிழக முதல்வராக, நேற்று முன்தினம் பதவியேற்ற ஜெயலலிதா, நேற்று கோட்டைக்கு வந்து பொறுப்பேற்ற முதல் நாளில், ஐந்து புதிய திட்டங்களை அறிவித்தார். தமிழகம் முழுவதும், 201 'அம்மா' உணவகங்களையும், குறைந்த விலை பருப்பு விற்பனையையும் துவக்கி வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததால், முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, மேல்முறையீட்டு வழக்கில், ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், நேற்று முன்தினம் நடந்த பிரம்மாண்ட விழாவில், தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். அவருடன், ...

ஆண்டுக்கு ரூ.5,000 லஞ்சம் கொடுக்கும் நகரவாசிகள் : கான்ட்ராக்ட், உற்பத்தி துறையில் தலைவிரித்தாடும் ஊழல்

Posted:

புதுடில்லி: நகர்புறங்களில் உள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு, 5,000 ரூபாயும், கிராமப்புற குடும்பங்கள், ஆண்டுக்கு, 3,000 ரூபாயும், பலருக்கும், பல விதங்களில் லஞ்சமாக கொடுக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல், மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.'லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் எழுதி வைத்தும் எந்த பயனும் இல்லை. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லாமல், நாட்டில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சம் கொடுக்கின்றனர் அல்லது பெறுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் ...

தண்ணீர் பற்றாக்குறையை இந்தியா சமாளிக்குமா?

Posted:

புதுடில்லி: 'இந்தியா, 2025ல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும்' என, 'இ.ஏ., வாட்டர்' சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு நடத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

70 சதவீத நிலத்தடி நீர்:
இது தொடர்பாக, இந் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவில் நிலத்தடி நீரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. நீர் பாசன தேவையில், 70 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதுபோல், குடிநீர் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கு, 80 சதவீத நிலத்தடி நீர் உபயோகிக்கப் படுகிறது. தண்ணீர் தேவை, பெருகி வருவதற்கேற்ப, உற்பத்தி இல்லை. அதனால், ...

கெஜ்ரிவால் அரசின் 100 நாள் சாதனை!

Posted:

புதுடில்லி,: மத்திய அரசு மற்றும் லெப்டினன்ட் கவர்னருடனான மோதலுக்கு இடையே, டில்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, நேற்றுடன், 100 நாள் ஆட்சியை நிறைவு செய்தது. டில்லியில், இந்தாண்டு துவக்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. பதவியேற்று, நேற்றுடன், 100 நாட்களை ஆம் ஆத்மி அரசு நிறைவு செய்துள்ளது. கடந்த 100 நாள் ஆட்சியில், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைத்தது, மாதத்துக்கு, 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் உள்ளிட்ட, சில தேர்தல் வாக்குறுதிகளை, ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனாலும், ...

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

Posted:

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 30 ...

வேகமாக பரவும் பன்றி காய்ச்சல்: நடவடிக்கைக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Posted:

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:சென்னையில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இது குறித்த தகவல்களை முறையாக வெளியிட, மாநகராட்சி முன்வரவில்லை. ஒருவர் மட்டுமே, பன்றிக் காய்ச்சலால் இறந்திருப்பதாக, மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, அடையாறு மண்டலத்தில், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த வஜ்ரவேல், வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயந்தி ஆகியோர், பன்றிக் காய்ச்சலால் இறந்திருக்கின்றனர். இதுவரை, எட்டு பேர் மட்டுமே, பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதாக தெரிவித்துஇருக்கின்றனர். ஆனால், 50 பேர் தமிழகத்தில் பன்றிக் ...

வேண்டுதலை நிறைவேற்றும் அ.தி.மு.க.,வினர்: தேங்காய் விற்பனை திடீர் அதிகரிப்பு

Posted:

வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, அ.தி.மு.க.,வினர், தேங்காய்களை அதிகளவில் வாங்குவதால், அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

பிரார்த்தனை:
சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன், தண்டனை வழங்கியது. இவ்வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை பெறுவதற்காக, அ.தி.மு.க.,வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். தேர் இழுத்தல், பொங்கல் நைவேத்தியம் செய்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் உள்ள ...

தொழில்துறையில் தமிழகம் கடைசி இடம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted:

மதுரை : ''தி.மு.க., ஆட்சியில் முன்னிலை வகித்த தமிழக தொழில்துறை அ.தி.மு.க., ஆட்சியில் கடைசி இடத்திற்கு சென்று விட்டது'' என மதுரையில் நடந்த தென் மாவட்ட தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.மதுரை அருகே ஒத்தக்கடையில் நடந்த கூட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.ஸ்டாலின் பேசியதாவது:மதுரை மண்ணில் கண்ணகி நீதி கேட்ட இடம் என்பதாலோ; தவறான நீதி வழங்கியதற்காக கோவலன் உயிர்துறந்த சம்பவத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கை நினைவுபடுத்துவதற்காகவோ ...

பாலை இருப்பு வைக்க முடியாமல் ஆவின் திணறல்: உற்பத்தி அதிகரிப்பால் புது பிரச்னை

Posted:

திருப்பூர் : பால் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளதால், இருப்பு வைத்து விற்க வழியில்லாமல், ஆவின் நிர்வாகம் திணறுகிறது.தமிழகத்தில் உள்ள, 8,000 பால் உற்பத்தி சங்கங்களின் உதவியுடன், விவசாயிகளிடம் இருந்து தினமும், 23.50 லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு பெறப்பட்டது. 2014, துவக்கத்தில் பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டதால், விவசாயிகள் பலரும் ஆவினை நாடினர்; உற்பத்தி மேலும், 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்தது.கடந்தாண்டு கோடைக்கு பின் கடும் வறட்சி நிலவியதால், பால் உற்பத்தி குறைந்து, 21 ஆயிரம் லிட்டராக சுருங்கியது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™