Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இனி மொபைல் போனில் எஸ்.டி.டி., தொல்லை இல்லை: '0' போடாமல் இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம்

Posted:

'தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, 2012ன் படி, மொபைல் போன்களுக்கு, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., வசதி அளிக்கும், 'ரோமிங்' முழுமையாக நீக்கப்படுகிறது. நாட்டின் எங்கு சென்றாலும், மொபைல் போனிலிருந்து, '0' போடாமல் பிற பகுதிகளுக்கு எளிதாக தொடர்பு கொள்ளலாம்' என, தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர்.தற்போதுள்ள திட்டப்படி, மொபைல் போன் பதிவாகி உள்ள, தொலைத்தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே, 'ரோமிங்' வசதி இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும். உதாரணமாக, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் பதிவு ...

அப்போது அரசுக்கு அவசியம்; இப்போது அரசியலுக்கு தேவை!

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எப்படியும் நிறைவேற்றியே தீருவது என கருதும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்றாவது முறையாக அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் உள்ள லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அந்த மசோதாவை, பலம் மிகக் குறைவாக உள்ள ராஜ்யசபாவிலும் நிறைவேற்ற, எந்த அளவுக்கு செல்லவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

2013ல் மசோதா:
அதே போல, 'மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, இப்போதைய நிலையில் நிறைவேற்ற, எப்போதும் அனுமதிக்கப் போவதில்லை' எனக் கூறும் ...

முதலீடுகளை குவிக்கும் மாநிலங்கள் :'ரேங்க்' போடும் மத்திய அரசு: தமிழக அரசு உஷார்!

Posted:

முதலீடுகளை குவிப்பதில் யார் முன்னணி என்பது குறித்து, மாநில அரசுகளுக்கு, 'ரேங்க்' போட்டு பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், உஷார் அடைந்த தமிழக தொழில் துறை அதிகாரிகள், முதலீடுகளை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்ட பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புது உத்தி :
இந்தியாவில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிரா, டில்லி, தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்கள், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளன. இதுபோன்ற ஏற்ற, இறக்கங்களை களைவதற்காக, மத்திய அரசு, ஒரு புது உத்தியை கையாள ...

ஆந்திராவில் ரூ.18,900 கோடியில் சீன தொழில் பூங்கா :தமிழகத்தை தவிர்க்கின்றனரா முதலீட்டாளர்கள்?

Posted:

ஆந்திராவில், ஜி.எம்.ஆர்., காக்கிநாடா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், 18,900 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலைகளை துவங்க, சீன நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன. தமிழகத்தை, முதலீட்டாளர்கள் தவிர்ப்பதையே இது காட்டுவதாக, தனியார் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று நிறுவனங்கள்:
பெங்களூரைச் சேர்ந்த, ஜி.எம்.ஆர்., கட்டமைப்பு நிறுவனம், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 10,500 ஏக்கரில், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிர்வகித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பான, குவிச்சோ சர்வதேச முதலீட்டுக் கழகமான, ஜி.ஐ.ஐ.சி., ...

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: ஐந்து முக்கிய முயற்சிகளால் சாலை வசதியில் முன்னேற்றம்

Posted:

புதுடில்லி: நாடு முழுவதும் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும், ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளை பராமரித்து, சாலை வசதிகளை மேம்படுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஐந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள், கடந்த மாதம் முதல் உத்வேகத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், நிதின் கட்காரி, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், வாகன போக்குவரத்து விஷயத்தில், சர்வதேச தரத்திலான விதிமுறைகள் நம் நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக பல முக்கிய ...

முதலாமாண்டு வெற்றி கொண்டாட்டம்: அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

Posted:

புதுடில்லி: நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்று, ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளதை அடுத்து, இது தொடர்பான வெற்றி விழாக்களை நடத்துவது குறித்து, பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் மூலம், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணியின், 10 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்தாண்டு, மே, 26ல், பதவியேற்றது. மோடி அரசு பதவியேற்று, ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளதை அடுத்து, இதை மிகப் பெரிய அளவில் கொண்டாட, ...

கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர்: வென்ற பின் ஸ்டாலினை மாற்ற திட்டம்

Posted:

அடுத்த சட்டசபைத் தேர்த லுக்கும், தானே முதல்வர் வேட்பாளர் என, சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதால், அவர் மகன் ஸ்டாலினின் ஆதரவாளர்கள், அதிருப்தியடைந்து உள்ளனர்; அதே சமயம், முதல்வராக வென்றபின், சில காலத்திற்குப் பின் உடல்நிலையைக் காரணம் காட்டி, முதல்வர் பதவியிலிருந்து விலகி, ஸ்டாலினை முதல்வராக அமர்த்த, கருணாநிதி திட்டமிட்டு உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஸ்டாலினை கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவரது ஆதரவாளர்களால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ...

கிடைக்கும் அந்தஸ்தை தாரை வார்க்கும் அ.தி.மு.க., :பார்லி., கூட்டுக்குழுவில் ஒரு இடம் மட்டுமே பெற்றது

Posted:

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை ஆய்வு செய்ய, அமைக்கப்பட்ட பார்லி., கூட்டுக்குழுவில், தனக்குரிய முக்கியத்துவத்தை, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., நிலை நாட்டிஉள்ளது. ஆனால், அதைவிட பெரிய கட்சியான, அ.தி.மு.க.,வோ, தனக்குரிய அந்தஸ்தை இழந்து நிற்கிறது.

பரிசீலனைக்கு...:
எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபம் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, பார்லி., கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களை, உறுப்பினர்களாக கொண்ட இந்த கூட்டுக்குழு, மசோதாவை ஆய்வு செய்து, பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் ...

மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன்.சாமி: திருமண வீட்டில் காமெடி

Posted:

பாளையங்கோட்டை யில், திருமணத்தை நடத்தி வைக்க வந்த, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுப்பதற்கு பதிலாக, மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற சம்பவம், திருமண வீட்டில் பரபரப்பைஏற்படுத்தியது.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை முருகன் கோவிலில் நேற்று, தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழா நடந்தது. திருமணத்தை நடத்தி வைக்க, சுப்பிரமணியன் சாமியை அழைத்திருந்தனர்.முகூர்த்த நேரத்தில், மணமகளின் பெற்றோர், தாலியை எடுத்து, மணமகனிடம் எடுத்துக் கொடுக்குமாறு, சுப்பிரமணியன் சாமியிடம் நீட்டினர். தாலியை பெற்ற அவர், தாலியை கண்ணில் ...

இந்தியா, ஐரோப்பாவில் தாவூத் இப்ராஹிம் பதுக்கிய சொத்துக்கள்: அமலாக்கத்துறை விசாரணை

Posted:

புதுடில்லி:நிழல் உலக தாதா தாவூத் இல்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இடத்தை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பாவில், அவன் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் தாவூத்தின் சொத்துக்களை இக்பால் மிர்சி என்பவன் நிர்வகித்து வந்துள்ளான். அவன், கடந்த 2013ம் வருடம் ஆகஸ்ட் 14ம் தேதி லண்டனில் மரணமடைந்தான். இதற்கு முன்னர், கடற்கரையை ஒட்டியுள்ள 4 இடங்களை, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கு, ஐரோப்பாவில் முதலீடு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™