Tamil News | Online Tamil News |
- 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது: ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழாவில் வழங்கினார் பிரணாப்
- அப்பீலுக்கு ஆச்சார்யா அறிவுரை?
- மோடி - ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சு சுமுகம்: பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்த வலியுறுத்தல்
- கறுப்பு பண முதலைகளுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
- ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது; ராமர் கோவிலை கட்டுங்க!
- சந்தித்தவர்கள் 'ஷாக்': சந்திக்காதவர்கள் திக்... திக்...: ஜெ., திட்டம் என்ன
- அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் வேண்டும்: கருணாநிதி
- ஜெ., விடுதலையை எதிர்த்து 'அப்பீல்': சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்
- 'தினமலர்' ஆசிரியருக்கு வாழ்த்து
- ரூ.20 ஆயிரம் கோடியில் ராணுவம் நவீனம் : திட்டங்களுக்கு அனுமதி அளித்தது அமைச்சகம்
| Posted: செம்மொழி தமிழுக்கான, ஜனாதிபதி விருதுகளை, நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். அதன்படி, 2011 - 12ம் ஆண்டுக்கான, 'தொல்காப்பியர்' விருது, மொழியியல் துறை அறிஞரான, செ.வை.சண்முகத்துக்கும், 2012 - 13ம் ஆண்டுக்கான, 'தொல்காப்பியர்' விருது, 'தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையம் சார்பில், செம்மொழி தமிழுக்கான விருதுகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் அறிஞர்களுக்கான விருது என, மூன்று வகையில் அமைந்த விருதுகளை, ... |
| அப்பீலுக்கு ஆச்சார்யா அறிவுரை? Posted: பெங்களூரு: வருவாய்க்கும் அதிகமான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நால்வரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக அரசுக்கு, தன் கருத்துகளை தெரிவித்து உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, நீதிபதி குமாரசாமியை, தன் இல்லத்துக்கு அழைத்து விவாதித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதா உட்பட, நான்கு பேரை விடுவித்து, நிரபராதிகள் என்று கூறி, கடந்த 11ம் தேதி, உயர் ... |
| மோடி - ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சு சுமுகம்: பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்த வலியுறுத்தல் Posted: ஜியான்: சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் நேற்று, இரு நாடுகளுக்கும் இடையே, பரஸ்பரம் நம்பிக்கையை வலுப்படுத்துவது மற்றும் எல்லையில் அமைதியை பராமரிப்பது உட்பட, பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். தன், மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக நேற்று, சீனாவின் ஜியான் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் சொந்த ஊர் தான், ஜியான் நகரம். ஒருங்கிணைந்து செயல்பட...: வழக்கமாக, வெளிநாடுகளின் தலைவர்களை ... |
| கறுப்பு பண முதலைகளுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை Posted: புதுடில்லி: ''வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியிருப்பவர்கள், அது குறித்த தகவலை தெரிவித்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் கால வரையறை, இன்னும், 2 - 3 வாரங்களில் அறிவிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: இந்த கெடுபிடிகள் எல்லாம், கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்குத் தான். கறுப்புப் பணத்தை பதுக்காதவர்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனால், மத்திய அரசு அளிக்க உள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் கறுப்புப்பண விவரத்தை தெரிவிக்காதவர்கள் பாடு கஷ்டம் தான். அரசு ... |
| ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது; ராமர் கோவிலை கட்டுங்க! Posted: அயோத்தி: 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறி, இந்துக்களின் ஓட்டுகளை பெற்று, மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள, பா.ஜ., இந்துக்களை ஏமாற்றாமல், ராமர் கோவிலை விரைவாகக் கட்ட வேண்டும்' என, சாதுக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில், அயோத்தி சென்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'லோக்சபாவில், பா.ஜ., வுக்கு போதிய பலம் இருந்தாலும், ராஜ்யசபாவில் பலம் இல்லாததால் தான், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடிய வில்லை' என, தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சாதுக்கள் பலரும், 'லோக்சபா தேர்த லின் போது, வாக்காளர்களுக்கு அளித்த ... |
| சந்தித்தவர்கள் 'ஷாக்': சந்திக்காதவர்கள் திக்... திக்...: ஜெ., திட்டம் என்ன Posted: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பின், நேற்று முன்தினம், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 20 அமைச்சர்களை மட்டும், அ.தி.மு,க., பொதுச் செயலர் ஜெயலலிதா, போயஸ் தோட்டத்தில் சந்தித்தார். மீதமுள்ள 10 அமைச்சர்களை அவர் சந்திக்கவில்லை. சந்திக்காத அமைச்சர்கள் மட்டுமின்றி, சந்தித்தவர்களில் சிலரும் இப்போது கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு போயஸ் தோட்டத்தில் கிடைத்த அர்ச்சனை தான், அதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படும் தகவல் வருமாறு: போயஸ் தோட்டத்தில், ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாக சந்தித்தார் ... |
| அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் வேண்டும்: கருணாநிதி Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை: அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படங்களை மட்டும் வெளியிடலாம்; மாநில முதல்வர் உள்ளிட்ட வேறு யார் படங்களையும் வெளியிடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு, மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயல். இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சமமான அந்தஸ்து தான் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களிலே பிரதமரை விட, அந்தந்த மாநில முதல்வர்களுக்குத் தான், பொதுமக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். எனவே, அரசு ... |
| ஜெ., விடுதலையை எதிர்த்து 'அப்பீல்': சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின் Posted: சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விரைவில் டில்லி செல்கிறார். இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, அவரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என, தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், கர்நாடக அரசு என்ன ... |
| 'தினமலர்' ஆசிரியருக்கு வாழ்த்து Posted: சென்னை: 'தொல்காப்பியர் விருது'பெற்ற 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கடந்த 2011 - 12, 2012-13ம் ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழுக்கான, 'தொல்காப்பியர்' விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும், நாணய வியல் அறிஞருமான, இரா.கிருஷ்ண மூர்த்திக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களோடு இணைந்து, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவையும் பலருக்கு வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற இரா.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும், என் வாழ்த்துக்களையும், ... |
| ரூ.20 ஆயிரம் கோடியில் ராணுவம் நவீனம் : திட்டங்களுக்கு அனுமதி அளித்தது அமைச்சகம் Posted: புதுடில்லி:ரூபாய், 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ நவீனமயமாக்க திட்டங்களுக்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தை நவீன மயமாக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. அதே நேரத்தில், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தியில், இந்தியா முன்னணி வகிக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, 'மேக் இன் இண்டியா' திட்டத்தில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 15,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |