Tamil News | Online Tamil News |
- நேபாளத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு: உயிரிழப்பு 76 ஆக உயர்வு
- அமைச்சர்களுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., தரிசனம்: பதவி ஏற்க, பன்னீர் பதவி விலக ஆலோசனை
- தடகள வீராங்கனை தற்கொலை ஏன்? உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி
- 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது': இன்று புதுடில்லியில் விழா
- கறுப்பு பணத்தில், பினாமி பெயரில் வாங்கிய சொத்து பறிபோகும்: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு
- 'பத்திரிகைகளில் மத்திய அரசு வெளியிடும் விளம்பரங்களில், ஜனாதிபதி, பிரதமர் படங்கள் தான் இடம்பெற வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
- ஜெ., வழக்கு அப்பீல் : கர்நாடகா முதல்வர் மழுப்பல்
- வளர்பிறையில் ஜெ., பதவியேற்பு? ஒன்பது அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து
- மீனாகுமாரி அறிக்கை நிராகரிப்பு:மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி
- ஜெ., படங்கள் அகற்ற முதல்வர் நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்
- தொழிற்சாலை மின்தடை அறிவிப்பு வாபஸ்? முதல்வராக ஜெ., பொறுப்பேற்றதும் அறிவிப்பு
| நேபாளத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு: உயிரிழப்பு 76 ஆக உயர்வு Posted: காத்மாண்டு: நேபாளத்தில், நேற்றும் அடுத்தடுத்து, 13 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்; கடந்த இரு நாட்களில், 33 முறை நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. நேபாளத்தில், கடந்த ஏப்., 25ம் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தில், 8,000த்திற்கும் அதிகமானோர் பலியாயினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 76 ஆக அதிகரித்து உள்ளது; 2,000த்திற்கும் அதிகமானோர், படுகாயம்அடைந்து உள்ளனர். காத்மாண்டுவின் வடகிழக்கே, தோலகா மாவட்டம் தான், அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது; இங்கு, இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை ... |
| அமைச்சர்களுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., தரிசனம்: பதவி ஏற்க, பன்னீர் பதவி விலக ஆலோசனை Posted: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர் முதல்வராக பதவி ஏற்பது குறித்தும், பன்னீர்செல்வம் பதவி விலகுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், போயஸ் தோட்டத்தில் இருந்து அழைப்பு வராத, ஒன்பது அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து, கடந்த, 11ம் தேதி, கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக, 'ஜெயலலிதா முதல்வராவார்; எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 12ம் தேதி ... |
| தடகள வீராங்கனை தற்கொலை ஏன்? உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி Posted: புதுடில்லி: கேரளாவில் தடகள வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக, மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம் உள்ளது. இங்கு, நீர்விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையத்தின் பயிற்சியாளர்கள் சிலர், வீராங்கனைகளுக்கு ராகிங் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நான்கு வீராங்கனைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மூன்று பேர் மருத்துவமனையில் ... |
| 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது': இன்று புதுடில்லியில் விழா Posted: புதுடில்லி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில்,2013ம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது, 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படுகிறது. விருதை, ஜனாதிபதி மாளிகையில், இன்று ஜனாதிபதி வழங்குகிறார்.செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்குகிறார். 2011-12, 2012-13ம் ஆண்டு களுக்கான தொல்காப்பியர் விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும், 2011-12ம் ஆண்டுக்கான, குறள் பீடம் விருது - டாக்டர் ஈவா மரியா வில்டன், இளம் அறிஞர் ... |
| கறுப்பு பணத்தில், பினாமி பெயரில் வாங்கிய சொத்து பறிபோகும்: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு Posted: புதுடில்லி: முறைகேடாக சம்பாதித்த பணத்தில், பிறர் பெயரில் வாங்கிய சொத்துகளை அரசே எடுத்துக் கொள்ள வகை செய்யும், 'பினாமி' பரிவர்த்தனை தடுப்பு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டால், பினாமி பெயரில் வாங்கிய சொத்துகள் பறிபோவதோடு, அந்த முறைகேட்டை செய்யும் நபருக்கு சிறை தண்டனையும் கிடைக்கும்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, ... |
| Posted: புதுடில்லி: 'பத்திரிகைகளில் மத்திய அரசு வெளியிடும் விளம்பரங்களில், ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் படங்கள் தான் இடம்பெற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.'மத்திய அரசுக்கு சாதகமான, நெருக்கமான ஊடகங்களுக்கு மட்டும் தான் விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன; அந்த விளம்பரங்கள், அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன' என, தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. |
| ஜெ., வழக்கு அப்பீல் : கர்நாடகா முதல்வர் மழுப்பல் Posted: பெங்களூரு: ''ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, நாங்களே சரியான சட்ட முடிவு எடுப்போம். அதில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை,'' என, கர்நாடகா முதல்வர், காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையா கூறினார்.கர்நாடகா முதல்வராக நேற்றுடன் இரண்டாண்டுகளை நிறைவு செய்த சித்தராமையா, பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரை நியமிக்கும் ... |
| வளர்பிறையில் ஜெ., பதவியேற்பு? ஒன்பது அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து Posted: அமாவாசைக்கு பிறகே வளர்பிறை வருவதால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு, வரும் 23ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. தற்போது, தேய்பிறை காலகட்டம் என்பதால், இந்நாளில் பதவியேற்க வேண்டாம் என, அவருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. |
| மீனாகுமாரி அறிக்கை நிராகரிப்பு:மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி Posted: சென்னை: 'மீன் பிடிப்பு தொடர்பாக, மீனாகுமாரி அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்ததை வரவேற்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறிஉள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை: மீன் பிடிப்பு தொடர்பாக, மீனாகுமாரி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், உள்நாட்டு மீனவர்களுக்கு உதவிடாமல், வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு உதவுவதாக இருந்தது.இந்த அறிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மீனாகுமாரி அறிக்கையை அமல் செய்தால், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்; எனவே, இந்த அறிக்கையை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என, தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு ... |
| ஜெ., படங்கள் அகற்ற முதல்வர் நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல் Posted: சென்னை: 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, தமிழக அரசின் அனைத்து விளம்பரங்களிலும் முதல்வராக இல்லாமலேயே இடம் பெறும் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற, முதல்வர் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அரசு விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் வகையில், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட, உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.அரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஏற்கனவே, மத்திய அரசு ஆலோசனை ... |
| தொழிற்சாலை மின்தடை அறிவிப்பு வாபஸ்? முதல்வராக ஜெ., பொறுப்பேற்றதும் அறிவிப்பு Posted: தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற உடன், தொழிற்சாலைகளுக்கு, மின்தடையை ரத்து செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், 2008ல் மின்தடை அமல்படுத்தப்பட்டதுஅதன்படி, தொழிற்சாலைகளுக்கு, மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, 90 சதவீதம்; மற்ற நேரங்களில், 40 சதவீதம் மின்தடை செய்யப்பட்டது. வல்லூர், மேட்டூர், வடசென்னை விரிவாக்க, புதிய அனல்மின் நிலையங்கள் மூலம், கூடுதலாக, 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதனால், 2013 ஆகஸ்ட் மாதம், தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின்தடையை, அரசு ரத்து செய்ததுடன், 90 சதவீத மின்தடையை, 40 சதவீதமாக குறைத்தது. ஆனால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 14,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |